பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீடு

Added : செப் 04, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
exam warriors,பிரதமர்,மோடி,தமிழாக்கம்,பரிட்சைக்கு பயமேன்

சென்னை : கல்வியில் பிரதமர் மோடியின் கனவை தமிழகம் நனவாக்கும் என பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தின் தமிழாக்கத்தை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். 'பரீட்சைக்கு பயமேன்' எனப் பெயரிடப்பட்ட இப்புத்தகத்தை கவர்னர் வெளியிட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டனர். புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழகம் நனவாக்கும்:

விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கற்றவன் தான் முழு மனிதனாக மதிக்கப்படுகிறான். கல்வி எதிர்கால முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது. கல்வி என்பது மாணவர்களை அச்சுறுத்தலாக இருக்க கூடாது என மோடி எக்ஸாம் வாரியர்ஸ் நூலில் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளின் வளர்ச்சியை பெற்றோர்கள் உற்று நோக்க வேண்டும்; அவர்களின் புத்தகத்தை படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியில் பிரதமர் மோடியின் கனவை தமிழகம் நனவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-செப்-201808:03:36 IST Report Abuse
Srinivasan Kannaiya பரிக்ஷைக்கு பயமேன்... வரும் தேர்தலை எண்ணி மோடி தனக்கு தானே கேட்டுக்கொண்ட கேள்வி இது...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-செப்-201804:03:46 IST Report Abuse
J.V. Iyer அருமையான தமிழாக்க புத்தகம். மோடிஜி வாழ்க. மாணவர்கள் படித்து பயன் அடைவார்களாக. இதை குறை கூறும் நிட்டிசன்கள் இருக்கிறார்களே. இவிங்களும் இவிங்க கட்சியும் மக்களுக்கு ஒன்னும் நல்லது செய்ய மாட்டாய்ங்க. நல்லது செய்ய வந்தா இப்படி டாபைப்பாய்ங்க. டாக்ட்டர் பட்டம் வாங்கிய தட்சிணாமூர்த்தி எங்கே MA பட்டம் பெற்றார்? இப்புடி எல்லாம் நாங்க கேட்க மாட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
04-செப்-201821:12:19 IST Report Abuse
ஆப்பு ஆமாம்...பயமில்லாம பரிட்சை எழுதிப் பாசானா மட்டும் நல்ல வேலை வாய்ப்பு குடுத்துறப் போறாரு?
Rate this:
Share this comment
Fasil Basha - KL,மலேஷியா
05-செப்-201805:42:52 IST Report Abuse
Fasil Basha முட்டாளே, திறமையிருந்தால் நீயே வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம், பிறருக்கும் வேலைவாய்ப்பை கொடுக்கலாம். மோடிஜி சொல்வது, உன்திறமையை வளர்த்துக்கொள்ள. மற்றவர்களிடம் கையேந்தாதே என்றுதான். உன்போன்ற குதர்க்கம் பேசும் திராவிட கோமாளிகளுக்கு அவர் சொல்வதெல்லாம் ஒன்றும் புரியாது....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-செப்-201807:39:20 IST Report Abuse
ஆரூர் ரங்படிப்பு தன்னம்பிக்கையை வளர்க்கணும் . அடுத்தவரிடம் வேலைபார்க்கும் அடிமைப்புத்தியை மட்டுமே வளர்த்தால் அது கல்வியல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X