சென்னையில் ஆதரவாளர்களுடன் அழகிரி பேரணி: அஞ்சலி செலுத்த வந்ததாக தகவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகரி,பேரணி,D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை : தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அண்ணன் அழகிரி தன் ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் இன்று அமைதி பேரணி நடத்தினார். பேரணிக்கு பின்னர், தன் அடுத்தகட்ட அறிவிப்பை இன்று வெளியிடுவார் என கூறப்பட்ட நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்த பேரணி நடத்தியதாக கூறினார்.

நன்றி


கருணாநிதி மறைவின் 30வது நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதி பேரணி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரை சிலை அருகில் இருந்து காலை புறப்பட்டது. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியில் முடிவடைகிறது. அங்கு அஞ்சலி செலுத்திய பின் அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், 30வது நாள் நினைவு நாள் முன்னிட்டு நடந்த அமைதி பேரணியில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பேரணியில் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா. பேரணிக்கு எந்த காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே எனக்கூறினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியில் எழுந்தது. ஆனால் அழகிரியையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் சேர்க்க தி.மு.க., தலைவர்ஸ்டாலின் மறுத்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த அழகிரி தன் பலத்தை காட்ட சென்னை பேரணிக்கு ஏற்பாடு செய்தார். தி.மு.க.,வில் உள்ள ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை திரட்டினார். அவர்களை எல்லாம் சென்னை அழைத்து வர வாகனங்களையும் ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் பேரணி ஏற்பாடுகளை கவனிக்க நேற்று முன்தினம் சென்னை வந்தார் அழகிரி. விமான நிலையத்தில் அவரை வேளச்சேரி பகுதி தி.மு.க., செயலர் ரவி வரவேற்று ஆதரவு அளித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் ரவியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். அதோடு பேரணியில்

பங்கேற்காமல் கட்சியினரை தடுக்க வேண்டும் என மாவட்ட செயலர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி நேற்று தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவு நிர்வாகிகளை ஸ்டாலின் ஆதரவு நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

பேரணிக்கு வந்த அனைத்து பஸ்களும், மெரினா கடற்கரை, தீவுத்திடல் அருகே நிறுத்தப்பட உள்ளன. அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரை சிலை முன் காலை கூடினர்.

பேனர் கிழிப்பு!

பேரணிக்கு வரும் தொண்டர்களை வரவேற்றும் அழகிரியை புகழ்ந்தும் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சேப்பாக்கம் பகுதியில் கருணாநிதி, அழகிரி படம் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த சென்னை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளின் படம் கிழிக்கப்பட்டது.


ஆசிரியர் தின விழா நேரம் மாற்றம்:

இன்று காலை 10:00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு சார்பில் ஆசிரியர் தின விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அழகிரி பேரணி காரணமாக காலையில் நடக்கவிருந்த விழா மதியம் 3:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.


மதுரை மல்லி 1,000 கிலோ!

மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியை மலர்களால் அலங்கரிக்கும் பணி நேற்று காலை துவங்கியது. மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் ஏற்பாட்டில் மதுரை பூக்கடை ராமச்சந்திரன் தலைமையில் 25 பேர் சென்னை வந்து சமாதியை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மதுரையிலிருந்து நேற்று 1,000 கிலோ குண்டு மல்லி பூக்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மதுரை குழுவினருடன் கோயம்பேடு பூ வியாபாரிகளும் இணைந்து கருணாநிதி சமாதியை மதுரை மல்லிகளால் நேர்த்தியாக அலங்கரித்துள்ளனர்.Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-செப்-201803:42:22 IST Report Abuse

meenakshisundaramஉண்மையிலேயே திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டியவர் கள் பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்க வேண்டியவர் முக வே. ஆனால் சாமர்த்தியமாக கட்சியை அவர் வளைத்துப்போட்டு குடும்ப சொத்தாக்கி எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. இது நில அபகரிப்பு போன்றது.திமுகவின் மூளையில்லாத ,அறிவற்ற ,ஆவேசப்பேச்சுக்குக்கு மட்டுமே அடிமையான தொண்டர்களால் வந்த வினை இது,கட்சியை முகவின் குடும்பத்திலிருந்து காப்பாற்ற முடியுமா?

Rate this:
SHRIL - Mumbai ,இந்தியா
05-செப்-201820:05:44 IST Report Abuse

SHRILஸ்டாலின் மறு பரிசீலனை செய்து இவரை கட்சிக்குள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், என்ன சாபமோ அழகிரி இல்லாத திமுக சரிப்பட்டு வராது.

Rate this:
vel -  ( Posted via: Dinamalar Android App )
05-செப்-201818:58:49 IST Report Abuse

velஅப்பாவி தமிழன் உண்மையிலேயே நீ ஒரு அப்பாவி தான். அண்ணாதுரை முதல்வராக எம்ஜிஆர்தான் முழு காரணம். அதை அன்றைய பெரியவர்களிடமும் இல்லையென்றால் பொது நூலகத்தில் அன்றைய செய்தித்தாளை பார்த்து படித்து புரிந்து கொள். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்குவதே உங்கள் கலைஞர் மற்றும் உங்கள் திருட்டு முன்னேற்றக் கழகத்தின் வேலையாக இருக்கிறது.

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X