ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; சுப்ரீம் கோர்ட் மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு;
சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி : ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள, அலுவலக பிரிவு கட்டடத்தை பயன்படுத்த, வேதாந்தா குழுமத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஸ்டெர்லைட்,ஆலை,வழக்கு,Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்,மறுப்பு


தமிழகத்தின், துாத்துக்குடி மாவட்டத்தில், வேதாந்தா குழுமத்திற்குசொந்தமான, ஸ்டெர்லைட்ஆலை உள்ளது.

சுற்றுச்சூழல் மாசு :


தாமிர உருக்கு ஆலையான இதிலிருந்து வெளியேறும் கழிவுகளால், சுற்றுச்சூழல்

மாசடைவதோடு, அப்பகுதி மக்களுக்கு கேடு விளைவிப்பதாக கூறப்பட்டது. இந்த ஆலையை உடனடியாக மூடக் கோரி, மே மாதம், அப்பகுதி மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் உச்சகட்டமாக வெடித்த கலவரத்தை ஒடுக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாயினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு, 'சீல்' வைத்து, அதை நிரந்தரமாக மூட, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலை பகுதியில் அமைந்துள்ள அலுவலக கட்டடத்தை மட்டும், நிர்வாக பணிகளுக்காக பயன்படுத்த, வேதாந்தா குழுமம் அனுமதி கோரியது. இந்த கோரிக்கையை ஏற்ற, தேசிய பசுமை தீர்ப்பாயம், அலுவலக கட்டடத்தை மட்டும் பயன்படுத்த, அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

Advertisement

அவசர வழக்கு :


பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு தடை கோரி, தமிழக அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 'இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. இந்த மனு மீதான விசாரணை, அடுத்த வாரம் நடக்கும் என்றும், அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.SRINIVASAN - Salem,இந்தியா
12-செப்-201808:15:24 IST Report Abuse

V.SRINIVASANபுற்று நோயை உண்டாக்குவதாக காரணம் காட்டி ஆலை மூடப்பட்டது..ஆனால் புற்று நோய் பாதிப்பில் தூத்துக்குடி 18வது இடத்தில் உள்ளது..சென்னைக்கு முதலிடம்..ஸ்டெர்லைட் ஆலையால் தான் புற்று நோய் உண்டாகிறது என நீக்கமற நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீண்டும் ஆலையைத் திறக்க அனுமதிப்பதைத் தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழி இருக்க வாய்ப்பில்லை... செல்போன் கதிர்வீச்சு மூளை பற்று நோய் உண்டாக்குகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் செல்போன் தடைசெய்ய போராட்டம் உண்டா? பகைபிடித்தல் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்களின் உபயோகம் மூலம் புற்று நோய் ஏற்படும் என நிரூபணம் உள்ளது.இவைகளை.முற்றாய் நீக்க போராட்டம் உண்டா?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05-செப்-201817:51:32 IST Report Abuse

Endrum Indianஎந்த ஒரு நல்லதிலும் ஒரு கெட்டது இருக்கும் இது எல்லோரும் அறிந்து உண்மை. அதே போல தாமிர உற்பத்தி என்றால் அதில் நிச்சயம் அதை பிரித்தெடுக்க ரசாயனம், உஷ்ணம், தண்ணீர் உபயோகித்தே தீரவேண்டும். அப்போது நிச்சயம் மாசு காற்றில், தண்ணீரில் நிச்சயம் சேரும், அதை கட்டுப்படுத்த Pollution Control method and equipment உபயோகித்து கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து அந்த ஆலையை மூடச்சொன்னது மிக மிக தவறான செய்கை. அப்படியென்றால் நமக்கு வேண்டிய தாமிரத்தை இப்போது நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும், அங்கு வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்கள்-வேலை இல்லா திண்டாட்டம் வரும். இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பாவாடை கூட்டம் சொன்னதை வைத்து ஏதோ புரட்சி செய்வதாக போராட்டம் நடத்தி கஷ்டப்படப்போவது நாம் தான் என்று எப்போது இந்த சாதாரண ஜனம் உணருமோ அப்போது தான் இந்தியா நிஜமான சுதந்திரம் பெற்றதாக கொள்ளலாம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-செப்-201817:37:06 IST Report Abuse

Pugazh Vஅகமதாபாத் சிற்பி... தூத்துக்குடி வந்திருக்கிறீர்களா...அத விடுங்க.. தமிழகத்துக்காவது வந்திருக்கிறீர்களா? போலிப்பெயரில் ஜால்ரா எதுக்கு???

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X