அழைப்பு வந்ததால் செல்கிறேன்: ராகுல் உருக்கம்

Updated : செப் 05, 2018 | Added : செப் 05, 2018 | கருத்துகள் (34)
Advertisement
கைலாஷ் மானசரோவர், ராகுல் காந்தி , ராகுல் யாத்திரை, காங்கிரஸ் தலைவர் ராகுல், யாத்திரை, ராகுல் டுவிட்டர், கைலாஷ் மானசரோவர் யாத்திரை, மானசரோவர் ஏரி, ராகுல், காங்கிரஸ் ,  ராகுல் காந்தி மானசரோவர் யாத்திரை, 
Kailash Manasarovar, Rahul Gandhi, Rahul Pilgrim, Congress leader Rahul, Pilgrim, Rahul Twitter,Kailash Mansarovar Pilgrimage, Manasarovar Lake, Rahul, Congress, Rahul Gandhi Manasarovar Pilgrimage,

புதுடில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்., தலைவர் ராகுல், ' இங்கு வெறுப்பு இல்லை. அழைப்பு வந்தால் மட்டுமே இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது' என, டுவிட்டரில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


12 நாள் யாத்திரை

சமீப காலமாக, காங்., தலைவர் ராகுல், கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் உச்சமாக, ஆக., 31ம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை துவக்கினார். அவர் 12 நாட்களில் தனது யாத்திரையை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், மானசரோவர் ஏரியின் படங்களை வெளியிட்டு, 2 டுவீட்டுகளில் ராகுல் கூறியிருப்பதாவது:


முதல் டுவீட்டில், மானசரோவர் ஏரியில் உள்ள தண்ணீர் மென்மையாக, அமைதியாக உள்ளது. அது அனைத்தையும் கொடுக்கிறது. ஆனால், எதையும் இழக்கவில்லை. அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இங்கு, வெறுப்பு இல்லை. எனவே தான், இதுபோன்ற தண்ணீரை இந்தியாவில் வழிபடுகிறோம் என்று கூறி உள்ளார்.இன்னொரு டுவீட்டில் ஒரு மனிதன் அழைப்பு வந்தால் மட்டுமே கைலாஷ் செல்ல முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிக அழகிய யாத்திரை அனுபங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.இவ்வாறு ராகுல் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-201807:07:07 IST Report Abuse
krish turupathi pazani srirangam ellam bakki irukku. vaikundam kooda irukka ella idathilum irunthu ellarukkum oru nall azaippu varum..
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
06-செப்-201800:07:34 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Once he returns he will start his game of igating RSS and Modiji.
Rate this:
Share this comment
Cancel
v.s.raj - COIMBATORE,இந்தியா
05-செப்-201821:10:31 IST Report Abuse
v.s.raj ஐயகோ , இது மதவாதமாகி விடுமே. திமுக, மாயாவதி பவார்,கவுடா போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா. ரஜனியை சாடியவர்கள் உங்களையும் சாடுவர். பார்த்து செயல்படுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X