இந்தியாவுக்கு புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை வழங்க சம்மதம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஒப்பந்தம்!
ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில் வாங்க முடிவு
தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க சம்மதம்

புதுடில்லி : ஜப்பானிடம் இருந்து, 18 புல்லட் ரயில்களை, 7,000 கோடி ரூபாய் செலவில் இந்தியா வாங்குகிறது. உள்நாட்டில் புல்லட் ரயில்களை தயாரிக்கும் வகையில், அதற்கான தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு அளிப்பதாக உறுதி அளிக்கும் ஷரத்தும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்,ஜப்பான்,18 புல்லட் ரயில்,வாங்க,முடிவு,தொழில் நுட்பத்தை,இந்தியாவுக்கு,வழங்க,சம்மதம்


மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் எனப்படும், அதிவேக ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜப்பான் அரசின் கடன் உதவியுடன், 508 கி.மீ., துார புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணிகள், 2022ல் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் முதல் புல்லட் ரயில், மும்பை - ஆமதாபாத் இடையே, 2022ல் ஓடத் துவங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பானிடம் இருந்து, 18 புல்லட் ரயில்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில்களின் மொத்த மதிப்பு, 7,000 கோடி ரூபாய். புல்லட் ரயில், அதிகபட்சமாக, மணிக்கு, 350 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்படும்.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜப்பானிடம் இருந்து, 18 புல்லட் ரயில்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முக்கிய அம்சமாக, இந்தியாவிலேயே புல்லட் ரயில்களை தயாரிக்கும் வகையில், அதற்கான தொழில் நுட்பத்தை நமக்கு மாற்றித் தரும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜப்பானிடம் வாங்கப்படும் புல்லட் ரயில் ஒவ்வொன்றிலும், 10 பெட்டிகள் இருக்கும். மணிக்கு, 350 கி.மீ., வேகத்தில் இந்த ரயில்கள் ஓடும். புல்லட் ரயில்கள் வாங்குவதற்கான ஏலம், விரைவில் நடக்க உள்ளது. இதில், ஜப்பான் நாட்டு புல்லட் ரயில் தயாரிப்பாளர்கள் பங்கேற்பர். ஜப்பான் ரயில்வேயின் புல்லட் ரயில் வடிவமைப்பை பின்பற்றி, அவர்கள், புல்லட் ரயில்களை தயாரிப்பர்.

உலகில் ஓடும் புல்லட் ரயில்களில், ஜப்பான் நாட்டு தயாரிப்பில் உருவான ரயில்கள், மிகவும் பாதுகாப்பானவை. இவை, தானியங்கி பாதுகாப்பு தொழில் நுட்பங்களுடன் இருப்பதால், பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் ரூ.3,000 :

மும்பை - ஆமதாபாத் இடையே, 2022 முதல் இயங்கும், புல்லட் ரயில்களை, ஒரு நாளில், 18 ஆயிரம் பேர் பயன்படுத்துவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயிலில், சாதாரண வகுப்பு கட்டணம், 3,000 ரூபாயாக இருக்கும். புல்லட் ரயில்களில், விமானங்களில் இருப்பதை போன்ற, முதல் வகுப்பு வசதிகள் உடைய பெட்டிகளும் இருக்கும்.


Advertisement

12 ரயில் நிலையங்கள்!

நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான பாதை, குஜராத்தில், 350 கி.மீ., துாரமும், மஹாராஷ்டிராவில், 150 கி.மீ., துாரமும் அமைக்கப்படுகிறது. இந்த பாதையில், 12 ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பிடம் இருந்து, 88 ஆயிரம் கோடி ரூபாயை, குறைந்த வட்டியில், இந்தியா பெறுகிறது. இதற்கான நிதியை, ஜப்பான் அமைப்பு அளிக்கத் துவங்கி விட்டது. இந்த கடன் தொகையை, 0.1 சதவீத வட்டியில், 50 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திட்டம் செயல்படத் துவங்கி, 15 ஆண்டுகளுக்கு பின், கடன் தொகையை செலுத்த துவங்கலாம்.


இந்தியாவில் தொழிற்சாலை:

புல்லட் ரயிலின் வெவ்வேறு பாகங்களை சேர்த்து, முழுமையான ரயிலை உருவாக்கும் தொழிற்சாலையை அமைக்கும் பணியில், இந்தியன் ரயில்வே ஈடுபட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, பி.பி.பி., எனப்படும், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படும். புல்லட் ரயில்களின் எதிர்காலத் தேவைகளை, இந்த தொழிற்சாலை பூர்த்தி செய்யும். ஜப்பானைச் சேர்ந்த, ரயில் தொழில் நுட்ப நிறுவனங்களான, கவாசாகி, ஹிடாச்சி ஆகியவை, இந்தியாவில், ரயில் பாகங்கள் சேர்ப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளதாக, மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
06-செப்-201819:29:58 IST Report Abuse

Suresh Ulaganathan3000 கட்டணம் அதிகம். இது நடுத்தர மக்களுக்காக அல்ல இந்த திட்டம். விவசாயி கையில் இருந்த நிலத்தை பிடிங்கி பணக்கார்களுக்கு கொண்டு வருகிற திட்டம். முதலில் இருக்கும் ரயிலை சரி செய்தாலே போதும். மேலும் குடிக்க தண்ணீர் இல்லை புல்லட் ரயில் தேவையா. ? பா ஜ க இதுவரை கொண்டுவருகிற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் பெறாத திட்டம். மக்களிடத்தில் இருந்து அதிக வரிகளை கட்ட வைத்து வெறும் ரோடுகளையும் , புல்லட் ரயில்களை கொண்டு வந்தால் போதுமா ? வேலை வாய்ப்புக்கு என்ன ஆயிற்று. அமெரிக்கா விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இனி வரும் காலத்தில் அமெரிக்காவில் படிக்க இயலுமா என்பதே கேள்வி குறி. ஏன் நாம் மட்டும் இன்னும் அவர்களின் திட்டங்களை இங்கு நடை முறை படுத்த வேண்டும். விவசாய நாடு நம் நாடு. அதை அளிக்க சொல்கிறான் வெளி நாட்டுக்காரன். அவன் கொண்டு வரும் பொருட்களை நாம் உபயோகிப்பது சரி இல்லை. இது ஆபத்தை தான் கொண்டு வரும்.

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
06-செப்-201817:23:51 IST Report Abuse

S.Ganesanஇதெல்லாம் எதுக்கு. பழையபடி கரி என்ஜின் ரயில்களை விட சொல்லுங்கப்பா.

Rate this:
rambo - Manamadurai,இந்தியா
06-செப்-201817:12:22 IST Report Abuse

ramboபுல்லெட் ரயில் பல நாடுகளில் தோல்வியடைந்த ஒரு திட்டம்.. அதை அமுல்படுத்திய நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு சென்றுவிட்டன.. அத்தகைய ஒரு திட்டத்தை 1 லட்சம் கோடி கடன் வாங்கி அமல்படுத்த துடிக்கும் இந்த மோடி அரசை என்னவென்று சொல்வது.. 1 லட்சம் கோடி இருந்தால் ரயில்வேயில் பல முன்னேற்றங்கள் செய்யலாம்.. முந்தய காங்கிரஸ் அரசில் ரயில் கட்டணத்தை ஏற்றாமல் ரயில்வேயில் பல முன்னேற்றங்களை செய்தனர்.. டிக்கெட் விலையையும் குறைத்தார் லாலுபிரசாத் யாதவ்..அதுதான் நிர்வாகம்..

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X