அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., வீடுகளில் சி.பி.ஐ., சல்லடை! Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயபாஸ்கர்,டி.ஜி.பி.,சிபிஐ,ரெய்டு

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கை மீண்டும் துாசி தட்டி எடுத்துள்ள, சி.பி.ஐ., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., வீடுகள் உட்பட, மாநிலம் முழுவதும், 40 இடங்களில், நேற்று, 'ரெய்டு' நடத்தியது. 'அ.தி.மு.க., அரசுக்கு, சி.பி.ஐ., மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில், சோதனைகள் நடத்தப்படுகின்றனவா' என, அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

தமிழகத்தில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு, 2013ல், தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி, மாநிலம் முழுவதும், குட்கா விற்பனை நடந்தது. அரசு கட்டுப்படுத்தாத நிலையில், வருமான வரித்துறை களத்தில் குதித்தது. சென்னை அருகே, செங்குன்றத்தில், மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர், பங்குதாரர்களாக உள்ள, குட்கா கிடங்கில், 2017, ஜூலை, 8ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில், குட்கா விற்பனைக்காக லஞ்சம் பெற்ற முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அவர்களுக்கு மாதம் தோறும் கொடுக்கப்பட்ட லஞ்சம் குறித்து, மாதவ ராவ் எழுதி வைத்திருந்த, டைரி சிக்கியது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, 2016, ஏப்., 1 முதல், ஜூன், 5 வரை, 56 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்போது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, தற்போதைய டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி., அந்தஸ்தில் ஓய்வு பெற்ற, ஜார்ஜ் உள்ளிட்ட, 23 போலீஸ் அதிகாரிகள் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதற்கிடையே, இந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, இந்தாண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடையோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவிடம், ஆக., 29ல், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள், எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, செங்குன்றம் அருகே உள்ள, மாதவ ராவின் கிடங்கிற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மாதவ ராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சோதனை நடந்தது.

சி.பி.ஐ., சோதனை :


சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்; முகப்பேரில் உள்ள, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன்; அண்ணா நகரில் உள்ள, முன்னாள் அமைச்சர், பி.வி.ரமணா ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சென்னை, திருவள்ளூர், துாத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு மற்றும் மும்பை என, மொத்தம், 40 இடங்களில், நேற்று காலை, 7:00 மணி முதல், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முதல் முறை :


குட்கா முறைகேடு வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், இந்த வழக்கில் தொடர்புடையோர் வீடுகள், அலுவலகங்களில், முதல் முறையாக நேற்று சோதனை நடந்தது. டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் தலைமையில், 150 பேர், இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டார்.

மாநிலத்தில் எப்போதுமில்லாத வகையில், டி.ஜி.பி.,யாக பதவி வகிக்கும், டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர், பி.வி.ரமணாவின் வீடு; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், லட்சுமி, செந்தில் முருகன், சிவகுமார்; மத்திய கலால்

வரி துறை அதிகாரிகள், குல்சார்பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்திரி ஆகியோரது வீடுகளிலும், சோதனை நடந்தது.

விற்பனை வரி துறை அதிகாரிகள் பன்னீர் செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன்; போலீஸ் அதிகாரிகள், மன்னர் மன்னன், சங்கர், சம்பத்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும், குட்கா கிடங்கு உரிமையாளர்கள், மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, 40 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை, பல இடங்களில், இரவிலும் நீடித்தது. சோதனையில், ஊழல் தொடர்பாக, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுடன் இருந்த நெருக்கத்தை, தமிழக அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக, அமைச்சர்கள் பலரும் பேசி வருகின்றனர். அணைகள் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு பங்கீடு உள்ளிட்டவற்றில், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை, தமிழக அரசு எடுத்துள்ளது. குட்கா ஊழல் வழக்கு, மீண்டும் துாசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது, ஆளும் கட்சி வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் நிகழ்ச்சிகள் ரத்து :

சென்னை, வளசரவாக்கம் கால்வாயில் இருந்து, ஆக., 15ல் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை, சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடக்க இருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், சி.பி.ஐ., சோதனை காரணமாக, இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


கிடங்குகள் மூடல் :

சி.பி.ஐ., சோத னையை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில், ஊழியர்கள், பீதியுடன் காணப்பட்டனர். அதே சமயம், ரயில்கள் வழியாக, போதை பாக்குகளை கடத்தி வந்து விற்பனை செய்யும், பல விற்பனையாளர்களின் கிடங்குகள் மூடப்பட்டிருந்தன. சில்லரை விற்பனையாளர்கள், தங்கள் கைவசம் இருந்த குட்கா பொருட்களை, ரகசிய இடத்துக்கு அப்புறப்படுத்தினர்.


'பதவி விலக வேண்டும்' :

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விடுத்து உள்ள அறிக்கை: சோதனையில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர், அமைச்சராகவும், டி.கே.ராஜேந்திரன் தமிழக போலீஸ் துறையின் தலைவராகவும், ஒரு நிமிடம் நீடித்தாலும், மக்களாட்சி தத்துவத்திற்கும், நிர்வாகத் துறைக்கும் மிகப்பெரிய இழுக்காக அமைந்துவிடும். எனவே, இருவரும், அவர்களாக முன்வந்து, ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


டி.ஜி.பி., ராஜினாமா?

இந்நிலையில் நேற்று இரவு, திடீரென டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் அவரை சந்தித்தார். இதனால் டி.ஜி.பி., ராஜினாமா செய்ய இருப்பதாக, காவல்துறை வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.


'எந்த விசாரணைக்கும் தயார்'

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, தொடர்ந்து பரப்பி, என்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என, மனப்பால் குடிக்கின்றனர். சோதனைக்கு, முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன். எந்த விசாரணைக்கும் தயார். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே, ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இந்த பிரச்னையை, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்பேன்.

-விஜயபாஸ்கர், தமிழக சுகாதார துறை அமைச்சர்Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-செப்-201823:07:06 IST Report Abuse

SSRINIVASANwhere is discipline in public life even IPS and IAS involvement is just disgusting

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-201822:06:59 IST Report Abuse

Pugazh Vஎத்தனை நாடகங்கள் ப்ளான் பண்ணியிருக்கிறார்கள். காவிரி மருத்துவ மனை விஸிட், ஓபிஎஸ் க்கு ராணுவ ஹெலிகாப்டர் , அழகிரி, ச 30 வருடங்கள் சிறையில் இருக்கும்7 தமிழர்கள் விடுதலை, இப்போது இது - என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், தமிழக பீஜேபீ அன்பர்களின் அராஜக ஆணவ அநாகரிக அவமரியாதையான வன்முறை விஷ வன்ம பேச்சுகளும் எழுத்துகளும் பீஜேபீ யை தலை தூக்க விடவே விடாது. கூடவே நீங்கள் காட்டும் பெண்ணை தூக்கிட்டு வந்து கட்டி வைக்கிறேன் என்பதும் விமானத்தை விட ஆட்டோ கட்டணம் குறைவு என்பதும், எங்கள் ஆட்சி பற்றி பேசும் உரிமை கட்சி தலைவர் களுக்கு கூட உரிமை இல்லை என்பது - எத்தனை நாடகங்கள். ???

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
06-செப்-201821:12:30 IST Report Abuse

தமிழ் மைந்தன் தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி உறுதியாகிவிட்டது. அழகிரி கூட்டத்தை விளம்பரம் ஆக்க ஸ்டாலின் அணி விரும்பவில்லை எனவே இவர்களுக்காக இந்த சோதனை எனவேதான் சன் டிவியும் செய்தியை மாற்றி அரசை மிரட்டும் சோதனை என் கூறியது. எல்லாம் அழகிரி பயமே.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X