அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக பா.ஜ., மீது
டில்லி மேலிடம் அதிருப்தி?

'எதிர்மறை செய்திகளில், தமிழக, பா.ஜ., அடிபடுகிறதே' என்ற கடும் அதிருப்தி, டில்லியில் உள்ள தலைமையில் ஏற்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.,B.J.P,BJP,Bharatiya Janata Party,Delhi,டில்லி,பா.ஜ,டில்லி மேலிடம்,அதிருப்தி?


தமிழகத்தின், துாத்துக்குடிக்கு சென்ற விமானத்தில், ஆராய்ச்சி மாணவி ஒருவர், பா.ஜ.,வுக்கு எதிராக எழுப்பிய கோஷமும், அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும், தேசிய அளவில் பரபரப்பு செய்தியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று டில்லியில், பா.ஜ., மேலிட வட்டாரங்கள் கூறியதாவது: கள நிலவரங்களில், மற்ற மாநிலங்களில் இருந்து, தமிழகம் முற்றிலும் வேறுபட்டது என்பதால் தான், பல பிரச்னைகளிலும், நிதானமான போக்கை, கட்சி மேலிடம் பின்பற்றி வருகிறது. உ.பி., பீஹார் போன்ற ஹிந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில், அதிரடிகளை மேற்கொள்வதும், பாதிப்புகள் ஏற்பட்டால், அதை சரி செய்வதும் எளிது; காரணம், கட்சிக்கு, வலுவான அடித்தளம் இங்கு உண்டு.


தமிழகத்திலோ, இன்னும் காலுான்றவே இல்லை. கட்சியை பலப்படுத்தி, மக்களிடையே நற்பெயரை சம்பாதிக்க வேண்டிய கட்டத்தில், பா.ஜ., உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நல்ல தகவல்களே, அங்கிருந்து வருவதில்லை. ஒவ்வொரு முறையும், எதிர்மறையான விஷயங்களுக்காகவே, தமிழக, பா.ஜ.,வின் பெயர், தேசிய ஊடகங்களில் அடிபடுகிறது. விமானத்துக்குள் நடந்து முடிந்த விஷயத்தை, விமான நிலைய வளாகத்தில், ஊதிப் பெரிதாக்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

'கட்சியை பற்றி தவறாகப் பேசியதாலேயே விவகாரம் பெரிதானது' என்பது நம்பும்படி இல்லை. காரணம், சம்பவத்துக்கு பின், ஒட்டுமொத்த கட்சியும் அல்லவா கொந்தளித்து இருக்க வேண்டும்? அவ்வாறு நடக்காமல், தனிநபர் சார்ந்த சுய விளம்பர விவகாரமாகவே மாறி, அந்தளவிலேயே ஊடக வெளிச்சமும் கிடைத்துள்ளது. அதுவும், எதிர்மறையாக கிடைத்துள்ளது; அடுத்த சில நாட்களில், கட்சியின் தேசிய செயற்குழு நடக்கவுள்ளது. இதற்கு முன், இந்த சம்பவம் நடந்துள்ளது.

தேசிய செயற்குழுவோ, மாநில செயற்குழுவோ கூடும்போதெல்லாம், திடீரென, இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்புகின்றன. எனவே, திட்டமிட்டு, சுய விளம்பர வெளிச்சத்துக்காக இதெல்லாம் நடக்கிறதா அல்லது

Advertisement

தமிழகத்தில், கட்சி சிறப்பாக செயல்படுவதாக காட்ட, டில்லி தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடக்கிறதா என தெரியவில்லை. பிரதமர் மோடியின் ஆளுமை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லவும், மத்திய அரசின் சாதனை திட்டங்கள் குறித்து, பிரசாரம் மேற்கொள்ளவும் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

இதுபோன்ற எதிர்மறை அரசியலால், எந்த பயனும் ஏற்பட போவது இல்லை. தமிழக தலைவர்கள் மீது, ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ள, பா.ஜ., தேசிய தலைமைக்கு, இந்த சம்பவம் குறித்தும், நிறைய தகவல்கள் வந்தபடி உள்ளன. எனவே, விரைவில், தமிழக விவகாரங்களில், டில்லி தலைமை, ஒரு அதிரடி முடிவு எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
13-செப்-201814:35:00 IST Report Abuse

MANI DELHIஇங்கு கருத்து சொன்ன அனைவரும் ஒன்றை சிந்திக்க வேண்டும். கட்சிக்கு எதிர்மறையாக கருத்துகள் பதிவதை கட்சியின் தேசியத்தலைமை பார்த்துக்கொண்டு சும்மா இல்லை. அவனவன் வாய்க்கு வந்த படி யாரை போடலாம் ? வானதி, ராஜா , சீனிவாசன் என்றெல்லாம் அவரவர்களின் யூகம்... ஆனால் காங்கிரஸ் மண்ணுக்குள் போய் தமிழகத்தில் யார் கைய பிடித்துக்கொண்டு நடக்கலாம் என்று யோசிக்கிறது.... இது தான் குடும்ப காங்கிரஸ். பிஜேபி கட்சி இன்று வளரவில்லை என்று பேசும் அறிவாளிகள் இதை பார்த்தபின் காங்கிரஸ் தேவையா என்ற முடிவுக்கு வாங்க. மேலும் ராகுல் போன்ற ஒன்றும் தெரியாமல் கேட்பார் பேச்சை கேட்டு செயல்படும் நபரை, நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஆலோசிக்கும் நீங்கள் அவருடன் உள்ள அணைத்து கரையான் புற்றுகளை சற்று சிந்தியுங்கள். நாடு முக்கியம். இனவாத அரசியல் செய்து நாட்டை துண்டாடுபவர்களை துணைக்கு அழைக்கும் சுயநலவாத காங்கிரஸ் அழிவது நிச்சயம்....

Rate this:
Visu Samy - chennai,இந்தியா
12-செப்-201806:32:24 IST Report Abuse

Visu Samyசோபியா கூச்சலிட்டது தவறுதான் அதை தமிழிசை கையாண்டதும் சரிதான் . விமானத்தினுள் கூச்சலிடுவது தவறுதான் அதெற்குதான் நடவடிக்கையே தவிர பிஜேபி எதிர்த்து கூச்சலிட்டதிற்கு அல்ல .வழக்கப்படி இந்து விரோத கட்சிகள் இதை பிஜேபி கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றன இதை பொருட்படுத்தாமல் சோபியா மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்தில் தடுக்கலாம்

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-செப்-201811:56:17 IST Report Abuse

Malick Rajaதமிழிசை அவர்கள் சற்று பொறுமையாக சென்றிருந்தால் செய்திகள் அடிப்படையற்று போயிருக்கும் .. யானைக்கும் அடிசறுக்கும் என்பதை சகோதரி அவர்கள் உண்மையாக்கி இருக்கிறார்கள் . அவரை நியமித்ததே அவரின் சமுதாயத்தின் ஓட்டை அள்ளத்தான் ஆனால் அது பொய்த்துவிட்டது . அவரின் சமுதாயம் உன்னத நோக்கம் அதில் புல்லுருவிகளாக சிலர் பிஜேபியில் இருப்பது வியக்கத்தக்கதல்ல.

Rate this:
மேலும் 102 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X