7 பேர் விடுதலை : திமுக வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

7 பேர் விடுதலை : திமுக வரவேற்பு

Added : செப் 06, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின், ராஜிவ் கொலையாளிகள் ,  குட்கா ஊழல் ரெய்டு, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை, சுப்ரீம் கோர்ட், சிபிஐ சோதனை, வருமான வரித்துறை சோதனை , அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் , ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை,தமிழக அரசு, 
Stalin, Rajiv killers, Gudkah scam raid, DMK president Stalin, former prime minister Rajiv killing,Supreme Court, CBI , Income Tax Department, Minister Vijayapaskar, DGP Rajendran, Rajiv killers 7 persons release, Tamil Nadu government,

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவை வரவேற்கிறேன். அவர்களின் இந்த உணர்வை புரிந்து கொண்டு அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி பலமுறை இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க சுப்ரீம் கோர்ட் அதிகாரம் வழங்கி உள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக முதன் முதலில் சட்டசபையில் தெரிவித்தது திமுக தான். குட்கா ஊழல் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. நேற்றும் பல இடங்களில் சிபிஐ சோதனை நடந்தி உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக, மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் டிஜிபி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு பொறுப்பேற்று டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். ஊழல் வழக்கில் தொடர்புடைய அவர்களை பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும். தொடர்புடைய ராஜேந்திரன், விஜயபாஸ்கரை ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-செப்-201816:47:55 IST Report Abuse
meenakshisundaram எல்லாம் ,சரிதான் .தூக்கு தண்டனை கைதிகளுக்கு நீண்ட வருஷங்கள் சிறைத்தண்டனை முடிந்தும் அந்த தண்டனை நிறைவேற்றப்படாததால் உச்ச நீதி மன்றம் அவரக்ளின் தண்டனையை சிறைத்தண்டனையாக ஒரு முறை குறைத்தாயிற்று.மேலும் இன்னொரு தரம் அதையும் நீக்க சட்டத்தில் இடம் உள்ளதா?அப்படியென்றால் Rajiv கொலையில் சம்பந்தப்பட்ட (நீதி மன்றத்தில் இது நீ ரூபிக்கப்பட்டுள்ளது) கொலைக்கைதிகளையே விடுவிக்கும் போது தமிழகத்தின் எல்லா சிறைகளிலும் உள்ள ராஜிவ் கோழியில் சம்பந்தமே இல்லாதவர்களையும் விடுவிக்கலாமா? கூடாதா?ரெண்டு முறை சலுகைகளை இந்த ஏழு பேருக்கும் எவ்வாறு வழங்கலாம்?மற்றும் நீதிபதி கூறியுள்ளது என்னவென்றால் அந்த அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்பது தான் .மற்றப்படி அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறவில்லை .ஆளுநருக்கு இதை மறுக்கும் அதிகாரமும் உண்டல்லவா? மற்றப்படி கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கிறதா?ஆட்சியை( கவிழ்க்க ) பிடிக்க திமுக என்ன(?) வேண்டுமானாலும் செய்யும் .அதை திமுக அப்பாவும் ஆதரிக்குமா?
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
06-செப்-201823:09:45 IST Report Abuse
sumutha - chennai //ஊழல் வழக்கில் தொடர்புடைய அவர்களை பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும். தொடர்புடைய ராஜேந்திரன், விஜயபாஸ்கரை ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றார்.// அப்படியே பூமிக்கடியில் கேபிளை புதைச்சவங்களையும் என்ன செய்யணும்னு சொல்லு தல.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
07-செப்-201807:57:25 IST Report Abuse
Panneerselvam Chinnasamyசும்மா யாரும் பூமிக்கடியில் கேபிளை புதைக்கமுடியாது... அனுமதி பெற்றுத்தான் செய்யமுடியும்......
Rate this:
Share this comment
Cancel
06-செப்-201822:43:41 IST Report Abuse
kulandhaiKannan அது எப்படி, திமுக ஆட்சியில் கையாலாகாத எல்லாம் அதிமுக ஆட்சியில் நடக்கிறது. காவிரி வாரியம், முல்லை பெரியாறு, இலங்கை கடற்படை தாக்குதல் நிறுத்தம், இன்று இந்த தீர்ப்பு. ஆக மொத்தம் மு.க ராஜதந்திரி என்பதெல்லாம் வெறும் gas தானா?
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
07-செப்-201807:54:15 IST Report Abuse
Panneerselvam Chinnasamyகாவேரி வாரியம்... முல்லை பெரியாறு எல்லாம் உச்சநீதிமன்றம் கொடுத்த முடிவு... எதுவும் வழக்கு என்று போனால் நீதிமன்றம் எப்போது தீர்ப்பு கொடுக்குமோ அப்போதுதான் நடக்கும்.. இது காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்களே அது போல... முக ஆட்சி எமெர்ஜென்சியில் டிஸ்மிஸ் ஆகாமல் இருந்திருந்தால் கலைஞர் பேச்சுவார்த்தையில் எப்போதோ (1980 க்கு முன்பே) இதை முடித்திருப்பார்... வழக்கு என்று போனதால் காலம் கடந்து போனது... ராமேஸ்வரத்தில் இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X