சட்டசபை கலைப்பு ஏன்? : சந்திரசேகர ராவ் விளக்கம்

Updated : செப் 06, 2018 | Added : செப் 06, 2018 | கருத்துகள் (19)
Advertisement
தெலுங்கானா, சந்திரசேகர ராவ், தெலுங்கானா சட்டசபை கலைப்பு, முதல்வர் சந்திர சேகர ராவ், தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா சட்டசபை தேர்தல், Telangana, Chandrasekara Rao, Telangana Assembly dissolution, Chief Minister Chandra Sekar Rao, Telangana Governor Narasimhan, Telangana assembly election, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சட்டசபை கலைப்பு, காங்கிரஸ், தெலுங்கானா பொருளாதாரம், ராஷ்டிரிய சமிதி, Telangana Rashtriya Samiti, Assembly dissolution, Congress, Telangana economy, Rashtriya Samiti,

ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபையை கலைப்பதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அதுற்கான பரிந்துரை கடிதத்தை கவர்னர் நரசிம்மனிடம் அளித்த பிறகு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தெலுங்கானாவின் பிரகாசமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சட்டசபையை கலைக்கும் முடிவை எடுத்துள்ளோம். அரசின் அனைத்து கொள்கைகளும் திட்டங்களாக்கப்பட்டுள்ளது. வாக்குறுதி அளித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் எங்களின் முடிவை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் எங்கள் அரசின் தரம் உள்ளது. இதனால் தெலுங்கானாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தடையில்லா மின்சாரம் அளித்துள்ளோம்.

தெலுங்கானாவின் முதல் எதிரி காங்., தான். பார்லிமென்டில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் மிகப்பெரிய கோமாளி. சட்டசபை கலைப்பு அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நவம்பர் மாதத்திற்கு முன்பே தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை துவங்க உள்ளோம். தேர்தலில் ராஷ்டிரிய சமிதி சார்பில் போட்டியிடும் 105 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை வரும் தேர்தலில் ராஷ்டிரிய சமிதிக்கு மாற்றாக வேறு கட்சிக்கு மக்கள் ஓட்டளித்தால், மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும் என்றார். அறிவிக்கப்பட்டுள்ள 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் நடப்பு எம்எல்ஏ.,க்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
06-செப்-201823:26:12 IST Report Abuse
sumutha - chennai தல நம்ம முதல்வரோட கையபுடிச்சி காலை புடிச்சி கா காக்கா புடிச்சி சந்திரசேகராவை போல் சட்டசபையை கலைக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்பத்தான் நீங்க தலைவர் பொறுப்பேத்ததுக்கு உருப்படியான வேலைய செஞ்ச மாதிரி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
06-செப்-201820:58:41 IST Report Abuse
Rajan அவர் ஜாதகப்படி இப்போ தேர்தல் வைத்தால் வெற்றி உறுதி என்று கூவி உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
06-செப்-201820:27:53 IST Report Abuse
umarfarook வேறென்ன மோடியோடு (மக்களவை தேர்தலோடு ) தேர்தலை சந்தித்தால் தன்னையும் காலி பண்ணிடுவாங்க என முன்கூட்டியே சந்திக்க நினைக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X