பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பயங்கரவாதத்தை பாக்., நிறுத்தினால்
நீரஜ் சோப்ராவை போல் இருப்போம்'

புதுடில்லி : ''பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் நிறுத்தினால், நாங்களும், நீரஜ் சோப்ராவை போல் நட்புடன் இருப்போம்,'' என, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்றார். அண்டை நாடான, பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷாத் நதீம், வெண்கலம் வென்றார்.

பதக்கம் வழங்கும் மேடையில், அர்ஷாத் நதீமுடன், நீரஜ் சோப்ரா கைகுலுக்கினார்.

இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பாராட்டை பெற்றன.

பயங்கரவாதம்,பாக்., நிறுத்தினால்,நீரஜ் சோப்ரா,பிபின் ராவத்,ராணுவ தலைமை தளபதி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி, ராணுவம் சார்பில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

Advertisement

இந்நிகழ்ச்சியில், இந்திய ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தற்போது பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் நிறுத்தினால், நாங்களும், நீரஜ் சோப்ராவை போல், நட்புடன் இருப்போம். பயங்கரவாதத்தில் இளைஞர்கள் சேர்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இவர்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துவதால், சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதனால், இளைஞர்களின் குடும்பம் பாதிக்கப்படுகிறது.

இளைஞர்கள் பயங்கரவாதத்தில் சேர்வதை கட்டுப்படுத்த, ராணுவம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-செப்-201811:37:01 IST Report Abuse

Loganathan Kuttuvaஇரு நாடுகளும் நட்புடன் இருந்தால் ராணுவ செலவை குறைத்து பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.

Rate this:
Khaja Bashir - AL KHOBAR,சவுதி அரேபியா
07-செப்-201818:43:15 IST Report Abuse

Khaja Bashirஉண்மை ...

Rate this:
Khaja Bashir - AL KHOBAR,சவுதி அரேபியா
07-செப்-201818:44:47 IST Report Abuse

Khaja Bashirஇதுதான் இன்றைய தேவை. ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201808:26:50 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎப்பவுமே ஒரே மாதிரியாக இருக்காது... அவர்களுக்கும் அலுப்பு தட்டி பொய் நண்பர்களாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-செப்-201814:43:13 IST Report Abuse

raghavanஒருத்தனுக்கு அலுப்பு தட்டும்போது இன்னொருத்தன் முளைக்கிறான். ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201808:13:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaபுதியதாக பொறுப்பேற்றவர்கள் கட்டாயம் அமைதிக்கு அடித்தளம் வகுப்பார்கள்.. விசா இல்லாமல் நாம் அங்கே செல்லலாம் அவர்களும் இங்கே வரலாம் என்ற நிலை வரவேண்டும்...

Rate this:
sankar - trichy,இந்தியா
07-செப்-201816:45:24 IST Report Abuse

sankarஎதுக்கு விசா இல்லாம போகணும் வரணும் ??? கடத்தலுக்கு வசதியாவா ...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X