பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா பயிர்கள் பாதிப்பு மாற்று ஏற்பாடுக்கு இன்று ஆலோசனை

Added : செப் 07, 2018
Advertisement

டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, வேளாண் துறை உயர் அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி நடப்பது வழக்கம். இதற்கான முன்னேற்பாடுகளை, ஆகஸ்டில், விவசாயிகள் துவக்குவர். இந்தாண்டு, மேட்டூர் அணை நிரம்பியதால், ஜூலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இதை நம்பி, ஏராளமான விவசாயிகள் சாகுபடியை துவக்கினர். நாற்று விட்டு நடவு செய்வது மட்டுமின்றி, நேரடி நெல் விதைப்பு முறைகளையும், விவசாயிகள் பயன்படுத்தினர்.

ஆனால், கடைமடை பகுதிகளுக்கு, முறையாக தண்ணீர் சென்று சேரவில்லை.இதனால், பல விவசாயிகள் சாகுபடியை துவக்கவில்லை.நாற்று மற்றும் நடவு செய்யப்பட்ட பயிர்களும் நீரின்றி, கருகி வருகின்றன. வயல்களில், வெடிப்பு உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, வேளாண்துறை செயலர், ககன்தீப் சிங் பேடி தலைமையில்,உயர் அதிகாரிகள், சென்னையில்,இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.நீரின்றி தவிக்கும் பயிர்களை காப்பது குறித்தும், சாகுபடியை அதிகரிப்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X