அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக திட்டங்களுக்கு
ரூ.70,105 கோடி தேவை!

சென்னை : சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, 15வது நிதிக்குழு கூட்டம் நடந்தது. குழுவிடம், முதல்வர் பழனிசாமி, மனு அளித்தார். அதில், 'சில முக்கிய திட்டங்களை நிறைவேற்ற, 70 ஆயிரத்து, 105 கோடி ரூபாய் தேவை' என, குறிப்பிட்டிருந்தார்.

தமிழக,திட்டங்களுக்கு,ரூ.70105 கோடி,தேவை
அவற்றின் விபரம்:


* சென்னை மாநகராட்சிக்கு, 4,800 கோடி ரூபாய்; கடல் நீர் உட்புகுவதை தடுக்க, 260 கோடி; கடல் அரிப்பை தடுக்க, 1,000 கோடி; கிழக்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டு திட்டத்திற்கு, 1,900 கோடி; கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, 5,000 கோடி; சென்னை நீர் நிலைகளை புனரமைக்க, 300 கோடி ரூபாய் தேவை

* சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த, ராமேஸ்வரம், மதுரை, பழநி, திருச்செந்துார், ஸ்ரீரங்கம் நகர மேம்பாட்டிற்கு, 975 கோடி ரூபாய்; காவிரி - அக்னியாறு - தென்பென்னை - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்புக்கு, 7,800 கோடி; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான கோவில்களை புனரமைக்க, 400 கோடி; மாநிலங்களுக்கு இடையிலான, சாலைகளை பராமரிக்க, 23 ஆயிரத்து, 465 கோடி ரூபாய் தேவை

* வனப் பகுதியில் செல்லும், 30 ஆயிரத்து, 932 கி.மீ., நீளமுள்ள சாலைகளை பராமரிக்க, 1,000 கோடி ரூபாய்; காவல் துறையை நவீனப்படுத்த, உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த, 7,875 கோடி; நீதித் துறைக்கு கட்டடங்கள் கட்ட, 1.500 கோடி; நகரமயமாக்குதல், குடிசை மேம்பாடு போன்றவற்றுக்கு, 5,000 கோடி; பழமையான நீர்நிலைகளை புனரமைக்க, 1,500 கோடி; சுகாதாரத் துறைக்கு, 1,000 கோடி ரூபாய் தேவை
* உள்ளாட்சி கட்டடங்களை பராமரிக்க, 6,000 கோடி ரூபாய்; சென்னையில், பழமை வாய்ந்த

கட்டடங்களை புனரமைத்து பாதுகாக்க, 250 கோடி ரூபாய் தேவை. இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


கவர்ச்சி திட்டங்களுக்கான செலவை குறைக்காதீங்க

சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, 15வது நிதிக்குழு கூட்டம் நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்துக்கான நிதி, சமீபத்திய நிதி குழுக்களால் குறைக்கப்பட்டுள்ளது. 14வது நிதிக் குழு, மத்திய வரிகளின் பங்கை, 32 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக உயர்த்திய போதிலும், தமிழகத்துக்கு உதவாமல் போனது. இதற்கு காரணம், மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில், தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டது தான்.மேலும், 14வது நிதிக்குழு பரிந்துரை காலத்தில், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது, ஒட்டு மொத்த நிதிக்குழு பரிமாற்ற அமைப்பின் மீது, தமிழக மக்களின் மனதில், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, 15வதுநிதிக்குழு, 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நிதிப்பகிர்வு செய்வதை எதிர்க்கிறோம். தங்களுடைய சொந்த முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், சாதனை எய்தி வரும் தமிழகம் போன்ற, வளர்ந்து வரும் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டில், அது பாதிப்பை ஏற்படுத்தும்.மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், நிதிப் பங்கீடு வழங்க வேண்டும். 1971ம் ஆண்டு மக்கள்தொகை தரவுகளையே இதற்கு அமல்படுத்த வேண்டும்.

கவர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துவது குறித்து, ஆய்வு வரம்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். கவர்ச்சி திட்டங்களுக்கும், மக்கள் நலத் திட்டத்திற்குமான இடைவெளி, மிக மெல்லியதானது.பள்ளிக் குழந்தைகளுக்கான, சத்துணவு திட்டம், முந்தைய காலத்தில், 'கவர்ச்சி திட்டம்' என, சிலரால் அழைக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு, பள்ளி மதிய உணவு திட்டத்தை, தன் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அங்கமாக்கி உள்ளது.

தமிழக அரசு, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை ஒவ்வொன்றும், சமூகப் பொருளாதார வளர்ச்சியில், வெவ்வேறு நிலையில் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை, கவர்ச்சி திட்டங்கள் என, குறிப்பிட இயலாது.இந்தியா, வளர வேண்டு மானால், தமிழகம் போன்ற,

Advertisement

வளர்ந்து வரும் மாநிலங்களை, ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கு, நிதித் தேவை அதிகம்.முந்தைய நிதிக் குழுக்களில் ஏற்பட்ட குறைபாடுகளை, சீராய்வு செய்து, நிதிபகிர்மானத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை, சரி செய்யும் வகையில், அதற்கான நிதியை, 15வது நிதிக்குழு, வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக தேவைகளை பரிசீலிக்க உறுதி

நிருபர்களிடம், என்.கே.சிங், கூறியதாவது:தமிழகத்தின் நிதி தேவை குறித்து, அரசு வழங்கிய செயல் விளக்கம், சிறப்பாக இருந்தது. அதில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.கடந்த நிதிக் குழுக்கள், மத்திய, மாநில அரசின் தேவைகளில், நடுநிலையோடு செயல்பட்டு வந்து உள்ளன. அந்த நடைமுறைகளை பின்பற்றுவோம்.வறுமையை ஒழிப்பதில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தமிழகம் பங்களிப்பை வழங்கியுள்ளது. தனி நபர் வருமானத்தையும், சிறப்பான முறையில் உயர்த்தி உள்ளது. நிதி மேலாண்மையிலும், சிறப்பாக செயல்பட்டு, சாதனை புரிந்துள்ளது.


நகர்ப்புற மக்கள்தொகை, 50 சதவீதத்தை எட்டியுள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில், குறிப்பிடத்தக்க அளவு, புலம்பெயர்ந்த மக்கள்தொகை உள்ளது. இது, மனித வள பற்றாக்குறையை, தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க வழி வகுத்தாலும், மாநிலத்தின் வளங்களில், பிரச்னை ஏற்படுத்தலாம்.தமிழகத்தில், மகளிர் கருவுறும் விகிதம் குறைவாகவே உள்ளது. ஆனால், முதியோர் மக்கள்தொகை, அதிகரித்து வருவதால், அதுவும், மாநில அரசுக்கு, புதிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

தமிழகம் தொடர்ந்து, அன்னிய முதலீடுகளை, கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும், இந்திய வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக திகழ்ந்து வருகிறது. வருவாய் பாகுபாட்டை குறைத்து, தமிழகத்தின் வளர்ச்சியை துாண்டுவது குறித்து விவாதித்தோம். சென்னை போன்ற, மிகப்பெரிய நகரங்களை நிர்வகிக்க, நீர் ஆதாரங்களை வழங்க, நிதிப் பற்றாக்குறை நிலவுவது குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டது.தமிழக அரசு, பல்வேறு தேவைகளுக்காக, நிதி ஒதுக்கும்படி கோரி உள்ளது. இதை, நிதிக் குழு கருத்தில் கொண்டுள்ளது. அக்டோபர் இறுதியில், நிதிக்குழு, பரிந்துரைகளை அளிக்கும். அப்போது, தமிழகத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், பரிந்துரைகள் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
07-செப்-201822:36:44 IST Report Abuse

Viswanathan திட்டம் என்றால் இப்படித்தான் இருக்கோணும் . மாண்புமிகு அம்மா ஆணைக்கிணங்க

Rate this:
rajan. - kerala,இந்தியா
07-செப்-201820:19:52 IST Report Abuse

rajan.  மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டதா? அப்படி ஒண்ணுமில்லையப்பா பழனி. உங்களுக்கெல்லாம் ஒட்டு போட்ட மக்களாகிய எங்களின் ஒரே அச்சம் கட்டிங் வாங்காமல் உங்களாலே ஒரு திட்டமும் நிறைவேற்ற முடியாது என்பதோடு ஆளாளுக்கு இந்த திட்டத்தை வச்சே கோடிகளில் ஆட்டைய பேட்டா நாடு தாங்குமா என்பது ஓன்று தானே இங்கே அச்சம். எனவே மக்களாகிய நாங்கள் சொல்வதெல்லாம் எந்த ஒரு சல்லிக்காசுக்கும் கவர்ச்சி திட்டங்கள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்பது ஓன்று தான் எங்கள் தேவை. வணக்கம் அண்ணா.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
07-செப்-201819:37:55 IST Report Abuse

r.sundaramநீர்நிலைகளை சரியாக தூர்வாராமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஆட்டை போட்டாச்சு, இப்போது அது போதாது என்று, பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை ஆட்டை போட திட்டம் ரெடி. ஒரு திட்டம் போடும்போதே இதில் எவ்வளவு ஆட்டை போடலாம் என்பதற்கும் சேர்த்தே திட்டம் போடும் தமிழகம்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X