சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அப்பல்லோ மருத்துவமனைக்கு
ஆறுமுகசாமி கமிஷன் எச்சரிக்கை

சென்னை : 'அப்பல்லோ மருத்துவர்கள், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சார்பில், மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அப்பல்லோ,மருத்துவமனை,ஆறுமுகசாமி கமிஷன்,எச்சரிக்கை


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி, சுப்பையா விஸ்வநாதன், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர், இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

அதையடுத்து, 10ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனை தலைமை,

'பிசியோதெரபிஸ்ட்' டாக்டர் ராஜ்பிரசன்னா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ராமலிங்கம்; 11ம் தேதி, கவர்னரின் முன்னாள் செயலர், ரமேஷ்சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவமனை, இதயநோய் சிகிச்சை நிபுணர், சாய்சதீஷ், தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள், விக்னேஷ், ரவிவர்மா ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

வரும், 12ல், அப்பல்லோ மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் பாபு ஆப்ரகாம், தீவிர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்ப அலுவலர், மதிவாணன் ஆகியோர் ஆஜராக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், முறைப்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டிக்கு, விசாரணை கமிஷன் செயலர், கோமளா கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: செப்., 10 முதல், விசாரணை கமிஷனில் ஆஜராவதற்காக, சம்மன் அனுப்பப்பட்டுள்ள, அப்பல்லோ டாக்டர்கள் விபரம், இத்துடன் உள்ளது. ஏற்கனவே, விசாரணைக்கு ஆஜராகும்படி, டாக்டர்கள் சிலருக்கு, 'சம்மன்'

Advertisement

அனுப்பப்பட்டிருந்தது; அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது, கண்டனத்திற்குரியது.

சம்மன் அனுப்பப்பட்டு உள்ள, டாக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள், ஏதேனும் காரணங்களைக் கூறாமல், விசாரணைக்கு ஆஜராக, நீங்கள் உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கு கட்டணமாக, பல கோடி ரூபாய் பெற்றுள்ளீர்கள். எனவே, இதற்கு பிறகும், அப்பல்லோ டாக்டர்கள், குறித்த நாளில் ஆஜராகாவிட்டால், தங்கள் மீதும், மருத்துவமனை இயக்குனர்கள் மீதும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
08-செப்-201807:53:38 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)மருத்துவ லைசென்ஸ் சஸ்பெண்டுன்னு சொன்னா தான் வருவான் அந்த டை கட்டின மலை முழுங்கி மகாதேவன்

Rate this:
Kailash - Chennai,இந்தியா
07-செப்-201823:07:41 IST Report Abuse

Kailashஅவர்களுக்கு தெரியும் இது வெத்து கமிஷன் என்று அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் யாருக்கும் கமிஷன் தருவார்கள். மக்கள் மறந்துவிட்டார்கள் அப்புறம் எதுக்கு இந்த ஓவர் ஆக்டிங்?

Rate this:
07-செப்-201821:04:59 IST Report Abuse

ஆப்புஇவரோட டை அழகே அழகு...எவ்வள்வு மேட்சா டை கட்டுறாரு...

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X