பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்
'இஸ்ரோ' திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி

பெங்களூரு : ''விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், இஸ்ரோவின், 'ககன்யான்' திட்டத்துக்கு, பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி செய்யும்,'' என, அந்த நாட்டின், விண்வெளி ஆய்வு மைய தலைவர், ஜீன் வேஸ் லீ கால் கூறினார்.

Isro,இஸ்ரோ,பிரான்ஸ்,உதவி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோ உதவியுடன், சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 'சர்வதேச விண்கல கண்காட்சி'யை, கர்நாடக மாநிலம், பெங்களூரில், இஸ்ரோ தலைவர், கே.சிவன் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சிவன் பேசியதாவது: இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சியில், தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. செயற்கை கோள் மற்றும் ராக்கெட் தயாரிப்பதற்கு தேவையான கச்சா பொருட்களை தொழிற்சாலைகள் அளித்து வருகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில், 40 ராக்கெட்கள் தயாரிப்பதற்கு, மத்திய பட்ஜெட்டில், 10 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை, பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளார். இரண்டு மாதத்துக்கு ஒரு ராக்கெட் வீதம், ஆண்டுக்கு ஆறு ராக்கெட்கள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும், 'ககன்யான்' என்ற திட்டம் பற்றி கூறினார். இந்த திட்டம், எங்களுக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு உட்பட

Advertisement

முக்கிய விஷயங்கள் சவாலாகவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர், ஜீன் வேஸ் லீ கால் பேசியதாவது: விண்வெளி வீரர்களை அனுப்பிய அனுபவம் எங்களுக்கு உள்ளது. தற்போது, மூன்று விண்வெளி வீரர்களை, 2022ல், விண்வெளிக்கு, இஸ்ரோ அனுப்புகிறது. இத்திட்டத்துக்கு பிரான்சின் விண்வெளி தொழில்நுட்பம், வீரர்களின் ஆரோக்கியம், பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
07-செப்-201814:11:20 IST Report Abuse

தோலுரிப்பவன் விண்வெளி ஆராய்ச்சியில் மோடியை விண்வெளிக்கு அனுப்பிவையுங்கள் அந்த ஊர் மட்டும் தான் இன்னும் போகல அவர் அங்கே போனால் நாங்கள் இங்கே நிம்மதியா இருப்போம்

Rate this:
Kosalai Rajan Lakshmanan - Coimbatore,இந்தியா
07-செப்-201810:50:37 IST Report Abuse

Kosalai Rajan Lakshmananதமிழனுக்கு கிண்டல் பண்ண தான் தெரியும்

Rate this:
Kosalai Rajan Lakshmanan - Coimbatore,இந்தியா
07-செப்-201810:47:24 IST Report Abuse

Kosalai Rajan Lakshmananஅருமையான விண்வெளி திட்டம் வெற்றி அடையட்டும்

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X