பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டம் குறைகிறது: ஜாவடேகர் அறிவிப்பு| Dinamalar

பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டம் குறைகிறது: ஜாவடேகர் அறிவிப்பு

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (8)
Advertisement
மாணவர், குறைகிறது, பாட திட்டம்,ஜாவடேகர்

புதுடில்லி, ''அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, 10 - 15 சதவீத பாடத் திட்டங்கள் குறைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்து உள்ளார்.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் பாடதிட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, பாடதிட்டத்தை மறு சீரமைப்பு செய்து, அதன் சுமையை, 10 - 15 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாற்றம், அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அதற்கு அடுத்த கல்வியாண்டில், பாடத் திட்டம், மேலும் குறைக்கப்படும்.இந்த மறுசீரமைப்பு பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., செய்து வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201808:20:19 IST Report Abuse
Janarthanan Rishwaan ஜி, படித்து விட்டு அரபிக்கு அடிமையாக வேலை செய்வது மேலாக படுகிறது, எல்லாத்தயும் ஒரு நெகடிவ் பார்ப்பது தவறு இன்று உள்ள கல்வி முறையில் பல backlog உள்ளது, அவற்றை செரி செய்ய யார் முயற்சி எடுத்தாலும் வரவேற்கப்பட வேண்டியது தான்
Rate this:
Share this comment
Cancel
07-செப்-201808:05:07 IST Report Abuse
ஆப்பு பேசாம 15% கருணை மதிப்பெண் வழங்கிடலாமே?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201807:40:11 IST Report Abuse
Srinivasan Kannaiya புத்தகங்களை அறவே எடுத்துவிடுங்கள்.. தொழில்கல்விதான் வேண்டும்... ஆரம்பத்தில் இருந்தே நேரடியாக அவர்களை குறிப்பிட்ட தொழிலில் அவர்கள் விருப்பம் போல .. ஈடுபடுத்தவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X