பா.ஜ., எம்எல்ஏ., நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு| Dinamalar

பா.ஜ., எம்எல்ஏ., நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு

Added : செப் 07, 2018 | கருத்துகள் (45)
Advertisement
பாஜக எம்எல்ஏ ராம்கதம், காங்கிரஸ், சுபத் சவ்ஜி, எம்எல்ஏ ராம்கதம், நாக்கு,  பாஜக, மகாராஷ்டிரா, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் , பாஜக எம்எல்ஏ சர்ச்சை, மகாராஷ்டிரா பாஜக, காங்கிரஸ் பரிசு, 
Congress MLA Ramkatam, Congress, Subath Sawji, MLA Ramkatam, NK, BJP, Maharashtra, Chief Minister Devendra Bhadnavis, BJP MLA controversy, Maharashtra BJP,Congress Prize,

புல்தனா : மகாராஷ்டிர பா.ஜ., எம்எல்ஏ.,வான ராம் கதம், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்க தான் உதவி செய்வதாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்காக தனது மொபைல் எண்ணை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.
ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வெளியோகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தான் மன்னிப்பு கேட்பதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டார் ராம் கதம். இருந்தும் ராம் கதமிற்கு எதிராக மகளிர் அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன. ராம் கதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., தலைமையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், காங்., தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி, பா.ஜ., எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ராம் கதமின் பேச்சிற்காக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-செப்-201812:02:38 IST Report Abuse
arabuthamilan இங்கு தமிழ்நாட்டிலும் சில அரசியல் வியாதிகளின் நாக்கை வெட்டினால் நாடு உருப்படும். இதற்கு சன்மானம் எல்லாம் கிடையாது.
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-செப்-201813:27:54 IST Report Abuse
Sitaramen Varadarajanஆண்டாளை கொச்சையாக விமர்சித்த துரோகி முதலில் நாக்கை இழக்கலாம் ..............
Rate this:
Share this comment
Cancel
07-செப்-201817:48:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதுபோன்ற அறிவில்லாத மனிதர்கள் பொதுசேவையில் ஈடுபட தகுதி இல்லாதவர்கள். இருவரையும் அந்தந்த கட்சிகள் வெளியேற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
07-செப்-201817:36:21 IST Report Abuse
ramakrishnan balasubramanian Is it a democratic way challenging to cut the tongue of a man as is being discussed in the TV channels quoting democracy? Where is the judges / advocates gone who are voluntarily taking cases to the Court of Law? Can any man talk any thing as he wish In a democratic Country like India? The M.L.A. should be suspended and his salary withheld (if he is a sitting M.L.A).till he get apology from public. The Govt. should take immediate action on this subject.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X