ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர் தேநீர் விற்கிறார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர் தேநீர் விற்கிறார்

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (15)
Advertisement
Asian Games bronze medalist Harish Kumar ,selling tea ,Indian Sepak Takraw game, ஹரிஷ் குமார், ஆசிய விளையாட்டு போட்டி, டீக்கடை, இந்தோனேஷியா, இந்திய சிபாக் தக்ராவ் விளையாட்டு , ஹரிஷ் குமார் வெண்கல பதக்கம், பயிற்சியாளர் ஹேம்ராஜ், 
Harish Kumar, Asian Games Contest, Tea shop, Indonesia,  Harish Kumar Bronze Medal, Coach Hemraj,Indian Sepak Takraw , Sepak Takraw ,

புதுடில்லி : சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய சிபாக் தக்ராவ் விளையாட்டு அணியில் இடம்பெற்றவர் ஹரிஷ் குமார். இதில் அவர் வெண்கல பதக்கம் வென்றார். டில்லியை சேர்ந்த இவர் தற்போது தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது தந்தையுடன் சேர்ந்து டீக்கடையில் டீ விற்று வருகிறார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், எங்கள் குடும்பம் மிகப் பெரியது. ஆனால் வருமானம் குறைவாகவே உள்ளது. அதனால் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக என் தந்தைக்கு உதவியாக டீக்கடையில் இருந்து வருகிறேன். தினமும் 4 மணி நேரம் (பகல் 2 முதல் 6) எனது பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நல்ல வேலை பெறுவதே எனது எதிர்கால திட்டம்.
2011 முதல் விளையாட துவங்கினேன். எனது பயிற்சியாளர் ஹேம்ராஜ் தான் என்னை விளையாட்டிற்கு அழைத்து வந்தார். அவர் தான் என்னை இந்திய விளையாட்டு கழகத்தில் சேர்த்து விட்டார். அதற்கு பிறகு தான் எனக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க மாதந்தோறும் நிதி கிடைக்க துவங்கியது.தொடர்ந்து பயிற்சி எடுத்து, நாட்டிற்காக இன்னும் பல பதக்கங்களை பெற வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-செப்-201806:16:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மல்யுத்த வீராங்கனை முதல்வர் கேஜ்ரிவாலிடம் சொன்ன குற்றச்சாட்டுக்கு அமைதியாக முதல்வர் சொன்ன பதில் தான் இங்கேயும்.. இங்கே ஏன் கெஜ்ரிவாலை இந்த வீரர் குற்றம் சொல்லலை. ஏன்னா உண்மை முதல்வர் கெஜ்ரிவால் சொன்னது தான். பகோடா அரசாங்கம் பஜனை கோஷ்ட்டிக்கு தான் திட்டங்கள் போட்டு பணத்தை கொடுக்குது..
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
07-செப்-201814:42:55 IST Report Abuse
vns நமது நாட்டில் மட்டுமல்லாது மற்ற நாட்டு விளையாட்டு வீரர்களும் விளயாட்டையே நம்பி வாழ்ந்துவிட முடியாது.. இது போன்ற செய்திகள் தேவையற்றது. தேநீர் விற்பது கேவலமான செயல் அல்ல. இதுபோன்ற செய்திகளால்தான் மக்கள் அரசாங்க வேலை அல்லது குமாஸ்தா வேலைகளையே எதிர்பார்த்து வீணாகின்றனர். எல்லா தொழிலுக்கும் மதிப்பளிப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-செப்-201812:26:20 IST Report Abuse
Nallavan Nallavan இவர்களையெல்லாம் கூப்புட்டுப் பேசி, அரை மணிநேரம் லெக்ச்சர் கம் பிரீ அட்வைஸ் அடிக்கும் மோதி ஜீ மற்றும் மாநில அரசு கவனிக்கணும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X