விரைவில் வாகனங்களில் 'ஆட்டோமெட்டிக் பிரேக்' | Dinamalar

பொது செய்தி

இந்தியா

விரைவில் வாகனங்களில் 'ஆட்டோமெட்டிக் பிரேக்'

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (20)
Advertisement
Automobile break, Nitin Gadkari, Road accidents, ADAS, ஆட்டோமெட்டிக் பிரேக், நிதின் கட்காரி, சாலை விபத்துக்கள், அமைச்சர் நிதின் கட்காரி , போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி , நவீன தொழில்நுட்ப கருவிகள் , Advanced Driver Assistance System , 
Minister Nitin Gadkari, Transport Minister Nitin Gadkari, modern technology equipment,

புதுடில்லி : வரும் 2022 ம் ஆண்டிற்குள் ஆட்டோமெட்டிக் பிரேக் பொருத்தப்பட்ட பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக இத்தகைய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்பு (Advanced Driver Assistance System (ADAS) ) பொருத்துவது அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது. இவை சாலையின் குறுக்கே ஏதாவது வந்தால் உடனடியாக தானாக வாகனத்தை நிறுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்றார்.
இத்தகைய கருவிகளை உற்பத்தி செய்ய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சில மேலை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 80 சதவீதம் விபத்துக்கள் மனித தவறுகளாலேயே நடப்பதால் இவற்றை தவிர்க்க நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இந்த கருவிகள் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
07-செப்-201821:46:48 IST Report Abuse
Gnanam சாலை விதிகளை அறியாமல்/ மதிக்காமல் தாறுமாறாக வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களின் உரிமம் முதலாவதாக ரத்து செய்யபடவேண்டும். பணம் வாங்கி உரிமம் கொடுக்கும் அதிகாரிகளை பதவிநீக்கம் செய்யவேண்டும். அதற்குப்பின் ஆட்டோமெட்டிக் பிரேக் பொருத்தப்பட்ட வாகனங்களை உருவாக்கினால் போதும்.
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
07-செப்-201820:42:59 IST Report Abuse
Vasanth Saminathan இப்பவே மூணு வருஷ இன்சூரன்ஸ் முன்கூட்டியே போடு, ஏ பி எஸ், ஏர் பாக்குன்னு விலை கடுமையா ஏறிப்போச்சு. நாலு வருஷத்துல பத்து லட்சம் இருந்தாதான் பேசிக் காரே வாங்கமுடியும் போல
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
07-செப்-201820:20:26 IST Report Abuse
Madhav ADAS இந்தியாவிற்கு தேவையான ஒன்றே. இங்கே சிலர் குறிப்பிட்டது போல மேடு பள்ளத்திற்கு எல்லாம் பிரேக் பிடிக்காது head-on collision தவிர்க்கவே இந்த முறை பெரிதும் உதவும். இந்தியாவிற்க்கான ADAS கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்க முடியும். நெரிசல் அதிகமான சாலைகளில் பெரும்பாலும் bumper 2 bumper மேற்கு நாடுகளிலும் சாதாரணமானது. குறுக்கு மறுக்கே ஓட்டுவது இந்தியாவில் அதிகம். இந்தியாவின் அதி முக்கிய தேவை பொது போக்குவரத்து. நீண்ட தூர குறுகிய தூர இருப்பு பாதை வண்டிகள் தான் தீர்வு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X