வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா : மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா : மோடி

Added : செப் 07, 2018 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர் மோடி, இந்தியா பொருளாதாரம், பாதுகாப்பான பயணம்,  மோடி, போக்குவரத்து,  7 சி,  பொருளாதார வளர்ச்சி , ஸ்மார்ட் நகரங்கள், பிரதமர் நரேந்திர மோடி, நரேந்திர மோடி, Common, Connected, Convenient, Congestion-free, Charged, Clean, Cutting-edge,
Prime Minister Modi, India economy, safe travel, Modi,
Transport, 7C, Economic Development, Smart Cities, Prime Minister Narendra Modi, Narendra Modi,

புதுடில்லி : டில்லியில் நடைபெறும் 2 நாள், சர்வதேச போக்குவரத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார்.
மேலும் அவர், சிறப்பான போக்குவரத்து சிறப்பான வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். பொருளாதாரம், நகர வளர்ச்சி இந்தியாவில் சிறப்பாக உள்ளது. நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களை கட்டமைத்துள்ளோம். சாலைகள், விமானநிலையங்கள், ரயில் பாதைகள், துறைமுகங்கள் வேகமாக அமைத்து வருகிறோம்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியானது Common, Connected, Convenient, Congestion-free, Charged, Clean, Cutting-edge ஆகிய 7 சி.,ஐ மையமாக கொண்டுள்ளது. அவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். பாதுகாப்பான பயணத்தை அனைத்து வகைகளிலும் சமூகத்தில் உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மகளிர், மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு அவசியம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
07-செப்-201820:55:13 IST Report Abuse
Darmavan எந்த புள்ளி விவரத்தையும் தராமல் முன்னேறிவிட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.வெற்று கூச்சலாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
CBE CTZN - Chennai,இந்தியா
07-செப்-201820:46:40 IST Report Abuse
CBE CTZN இந்தியா விவசாய நாடாக இருக்கும்போது பொருளாதாரம் நன்றாக இருந்தது... இப்பொழுது மிக மோசம்... மேக் இன் இந்தியா முழுமையாக செயல்படவில்லை... எப்பொழுதும் அந்நிய நாடுகளை அண்டி பிழைக்கிறோம்... புல்லட் ரயிலுக்கு ஜப்பான், பாதுகாப்புக்கு அமெரிக்கா ரசியா, எண்ணெய்க்கு அரபு நாடுகள்... கேவலமாக இருக்கிறது பிரதமரே...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-செப்-201820:44:53 IST Report Abuse
Pugazh V //மோ__ பொருளாதாரக் கொள்கையினால் எப்படி பாதிப்பு என்று சொல்ல வேண்டும்// "விடிய விடிய ராமாயணம் கேட்டு விட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா" என்ற கதையாக என்ன பாதிப்பு என்று மெதுவாக கேட்கிறார். எத்தனை முறை சொல்வது? பணமதிப்பிப்பின் அவதிகள், வேலையில்லாத் திண்டாட்டம், தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் கட்டணம், ரயில் கட்டணம், அதீத வரிகள், மூடும் கட்டயத்துக்கு ஆளான சிறு குறு தொழில்கள், வங்கி கட்டணங்கள், மினிமம் பேலன்ஸ் அபராதங்கள், பெட்ரோல் டீசல் விலைகள் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பிழப்பு, கலர் கலரா புது நோட்டுகள் அடிக்க செலவு, அதீத விளம்பர செலவுகள் என்று எல்லாமே பாதிப்புகள் தானே சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X