அதிக லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ., வியூகம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
வியூகம்!
அதிக லோக்சபா தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ.,
சமாஜ்வாதி அதிருப்தி தலைவரை வளைக்க முடிவு

லக்னோ : அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், உ.பி.,யில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இந்த சவாலை முறியடிக்கும் வகையில், சமாஜ்வாதி கட்சி அதிருப்தி தலைவரும், அகிலேஷின் சித்தப்பாவுமான, சிவ்பால் சிங் யாதவை வளைக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,லோக்சபா, தொகுதி,கைப்பற்ற,வியூகம்,சமாஜ்வாதி


கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இக்கூட்டணி, உபி.,யில் மொத்தமுள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், 73ல் வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, உ.பி., சட்ட சபைக்கு நடந்த தேர்தலிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜும், மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், உ.பி.,யில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இதில், இந்த அணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஆளும், பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை அளித்தனர். எனவே, லோக்சபா தேர்த லிலும்

கூட்டணி சேர, அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் கூட்டு சேர்ந்தால், கடந்த லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றியை மீண்டும் பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள, பா.ஜ., தலைமை, இந்த கூட்டணிக்கு எதிராக வலுவான வியூகம் அமைக்க திட்டம் தீட்டி உள்ளது.

அதன்படி, சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, மூத்த தலைவரும், அகிலேஷின் சித்தப்பாவுமான, சிவ்பால் சிங் யாதவை, துருப்பு சீட்டாக பயன்படுத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தனக்கு, பா.ஜ., ஆதரவு இருப்பதாக கூறப்படுவதை, சிவ்பால் சிங் மறுத்து வருகிறார்.

அதேசமயம், சிவ்பால் சிங்கின் நடவடிக்கைகளால், சமாஜ்வாதி கட்சிக்கு குறையும் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

'பின்வாங்க மாட்டேன்' :

சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவராக திகழ்ந்த சிவ்பால் சிங் யாதவ், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் தம்பி. இவரை கட்சியில் இருந்து நீக்கியதில், முலாயம் சிங்கிற்கு உடன்பாடு இல்லை. தன் மகன் அகிலேஷை விட, தம்பி, சிவ்பால் சிங் மீது அதிக கரிசனம் காட்டுபவர், முலாயம் சிங். எனவே, சமாஜ்வாதி கட்சியில் மீண்டும், சிவ்பால் சிங்கை சேர்க்க வேண்டும் என, முலாயம் சிங் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அவரது கோரிக்கையை, அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து வருகிறார். இதற்கு பதிலடியாக, சமாஜ்வாதி மதச்சார்பற்ற அணி என்ற அமைப்பை, சிவ்பால் சிங் யாதவ் துவக்கியுள்ளார். இது குறித்து, சிவ்பால் சிங் நிருபர்களிடம் கூறுகையில், ''சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் சேரலாம் என, 22 மாதங்கள் காத்திருந்தேன். எனவே, இறுதி முடிவாக புதிய அமைப்பை துவக்கினேன். இதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,'' என்றார்.Advertisement

80 தொகுதிகளில் போட்டி :

சமாஜ்வாதி மதச்சார்பற்ற அணி தலைவர், சிவ்பால் சிங் யாதவ், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், உ.பி.,யில், 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தன் அமைப்பு பிரதிநிதிகளுடன், சிவ்பால் சிங், தொடர் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கட்சி நிர்வாகப் பணிகளில் சாமர்த்தியம் மிக்கவரான சிவ்பால் சிங், உ.பி.,யில் உள்ள, பிற பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வார் என, தெரிகிறது. இதற்கிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஓம் பிரகாஷ் ராஜ்பார், லோக்சபா தேர்தல் தொடர்பாக, சிவ்பால் சிங் யாதவை, இரு முறை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 'முதல்வர் ஆதித்யநாத் நேர்மையானவர்; அதிகாரிகள் தான் தவறு செய்கின்றனர்' என, சிவ்பால் சிங் சமீபத்தில் கூறிய கருத்து, பா.ஜ., பக்கம், அவர் சாய்ந்து வருவதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சமாஜ்வாதியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு மூத்த தலைவர் அமர் சிங், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரும், சிவ்பால் சிங்கும் சந்தித்து பேச, தான் ஏற்பாடு செய்ததாக, சமீபத்தில் கூறியிருந்தார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-செப்-201822:18:04 IST Report Abuse

Rafi கருத்து வேறுபாடோடு விலகுபவர்கள், அந்த கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அந்த வகையில் சென்ற பொது தேர்தலில் இந்த சிவபால் யாதவ் எதிர் மறை வேலை செய்ததை அம்மக்கள் நன்றாக விளங்கி இருந்தார்கள். இப்போது மிகவும் வலிமையான கூட்டணி அமைத்திருக்கின்றார்கள். அதன் விளைவை இப்போதைய முதல்வரின் தொகுதியிலேயே வெற்றியை தனதாக்கி கொண்டு விட்டார்கள். அது அல்லாமல் இப்போது அங்கு நடப்பதோ ரவுடிகளின் துணையோடு காட்டாட்சி, தேச மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தெருவில் கொண்டுவந்து சேர்த்ததை கூட ஏதாவது நல்லதற்கு என்று சிலராவது நம்பியிருத்தத்தையும், RBI மூன்றாண்டுகள் செல்லாத நோட்டுகளை இழுத்தடித்து நாடகமாடி எண்ணியத்தில் கிடைத்த பலனை கண்டு கொந்தளித்து இருக்கின்றார்கள், ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரா பலன்களை இழந்ததும், சாமானிய மக்களுக்கு இல்லாமல், கார்போரேட்டிற்காக ஆட்சி புரிந்ததன் விளைவு பொது தேர்தலில் தெரிய வரும்.

Rate this:
08-செப்-201820:08:18 IST Report Abuse

ஆப்புலோக்கல் ரவுடிகள் தாதாக்களோட கூட்டு வையுங்க.. வெற்றி உமதே...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
08-செப்-201818:03:41 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது முடியாது காரியம். தேர்தல் களத்தில் பணியாற்றிய ஒரு மண்டல அலுவலரை சொல்லசொல்லுங்கள் பார்க்கலாம். இதே இயந்திரத்தில் பா.ம.க, பி.ஜே.பி, அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க என அனைத்து கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இது ............... வெறும் யுகம்தான். ஒரே கேள்வி கருணாநிதி ஊழல் செய்யாமல் உழைத்துதான் சம்பாதித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுபோல தான் இதுவும்

Rate this:
Anandan - chennai,இந்தியா
10-செப்-201805:48:22 IST Report Abuse

Anandanநீங்களே முந்திக்கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது உங்களை காட்டிக்கொடுக்கிறது....

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X