'ராகுல் வெளியிட்ட புகைப்படம் போலி': மத்திய அமைச்சர் காட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
'ராகுல் வெளியிட்ட புகைப்படம் போலி'
மத்திய அமைச்சர் காட்டம்

புதுடில்லி : ''கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பாக, காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட புகைப்படங்கள், போலியானவை,'' என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.

Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி,giriraj singh


காங்., தலைவர் ராகுல், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றுள்ளார். அண்டை நாடான, நேபாளம் வழியாக, கைலாஷ் மானசரோவருக்கு, ராகுல், 20 பேருடன் சென்றுள்ளார். இவரது பாதுகாப்புக்கு, இரண்டு சிறப்பு

கமாண்டோக்களும் சென்றுள்ளனர். கைலாஷ் யாத்திரையின் போது, 34 கி.மீ., துாரம் நடந்ததால், 4,500 கலோரிகளை இழந்தாக, ராகுல் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று, கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது, யாத்ரீகர்கள் இருவருடன், ராகுல் எடுத்த புகைப்படங்களை, காங்., அதிகாரபூர்வமாக, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று, ''கைலாஷ் மானசரோவர் யாத்திரையில், ராகுல் எடுத்த புகைப்படங்கள் போலியானவை,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: காங்., வெளியிட்ட புகைப்படத்தில், ராகுல்,

Advertisement

ஒரு நபருடன் சிரித்தபடி நிற்பது போன்றும், தன் கையில், கைத்தடியை வைத்துள்ளது போன்றும் உள்ளது. ஆனால், அந்த படத்தில், இருவரின் நிழல்கள் மட்டும் உள்ளன. ராகுல் கையில் இருக்கும் கைத்தடியின் நிழலை காணவில்லை. 'போட்டோ ஷாப்' செய்யப்பட்ட புகைப்படங்களை, ராகுல் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-செப்-201822:50:46 IST Report Abuse

Pugazh VA very wise question raised by Ms.Ambujavalli. ராகுல் பி.எம். இன் வெயிட்டிங். சென்னை வெள்ளத்தின் போது பி.எம். வெள்ளப் பகுதிகளை பார்வையிடுவது போல பி.எம் மே போட்டோஷாப் பண்ணி, அப்புறம் அது வெளிவந்ததும் அந்த போட்டோஷாப் படங்களை வலைதளத்திலிருந்து நீக்கி விட்டதை மறக்க முடியாது. மறந்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளவும்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
08-செப்-201817:22:18 IST Report Abuse

jaganஎல்லா படத்தையும் சேர்த்து பார்த்தால், இவைகள் பொய் படம் இல்ல என்று தான் தெரிகிறது ...

Rate this:
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
08-செப்-201816:07:30 IST Report Abuse

nabikal naayakamஇது உண்மையிலேயே photoshop செய்ததுதான் என்று எனது புகைப்பட நிபுணரான நண்பரும் உறுதி செய்கிறார்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X