மே.வங்கத்தில் மீண்டும் பாலம் இடிந்து விபத்து

Added : செப் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
மே.வங்கத்தில் மீண்டும்  பாலம் இடிந்து விபத்து

சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில், சமீபத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.சமீபத்தில், கோல்கட்டாவில், 40 ஆண்டு பழமையான பாலம் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, சிலிகுரியில் இருந்து மன்கஞ்ச் மற்றும் பான்சிதேவா பகுதிகளை இணைக்கும் மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்தது. இதில், லாரி டிரைவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:இடிந்து விழுந்த பாலத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமான தகவல்கள் அரசிடம் இல்லை. கனரக வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீறி, லாரிகள் சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
08-செப்-201806:25:47 IST Report Abuse
manivannan அமைச்சர்களுக்கு நாப்பது ஐம்பது சதவிகிதம் , அதற்குமேல் என்ஜினீயர்களுக்கு , எடுபிடிகளுக்கு என்று கொடுத்தது போக மிஞ்சுவது வைத்து எப்பிடி கட்ட முடியும். ஆத்திலே அள்ளி யா திருட்டு மணலும் குவாரியில் கொட்டிய கல்லு சிதறல்களும் கொண்டு காட்டுகிற பாலங்கள் பின்னே எப்பிடி இருக்கும்?அதுக்கு மேலே லாரி மேலே பழி பாரம் சுமை என்று... எந்த நம்பிககையுமே தராத, எதுவுமே எதிரிபார்க்க முடியாத நாடு. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X