கண்காணிப்பு கேமரா பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கண்காணிப்பு கேமரா பதிவுகளை சமர்ப்பிக்க
அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு

சென்னை : 'மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் இறக்கும் வரையிலான, கண்காணிப்பு கேமரா பதிவுகளை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா,சிசிடிவி,CCTV,பதிவு,சமர்ப்பிக்க,உத்தரவு


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்று, அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி, வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம், 'மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில், மருத்துவமனை

கண்காணிப்பு கேமரா பதிவை நிறுத்த சொன்னது யார்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 'மருத்துவமனையில், ஜெ., சேர்க்கப்படும் போது, கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவரது முகத்தில், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டிருந்தது' என, மருத்துவமனை மருத்துவ அறிக்கையில் உள்ளது. ஆனால், அன்று வெளியான செய்திக்குறிப்பில், 'காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக, ஜெ., அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில், வீடு திரும்புவார்' என, தெரிவித்தது ஏன்?

அவ்வாறு செய்திக்குறிப்பு வெளியிட சொன்னது யார்; அதற்கு, யாரிடம் ஒப்புதல் பெற்றீர்கள்? மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் இறக்கும் வரை, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஒரு வாரத்திற்குள், விசாரணை கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழ் பொறுப்பாசிரியர் ஆனந்தனிடமும், நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு!

''நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்,'' என மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா தெரிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அப்பல்லோ மருத்துவமனை விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதுவரை 85 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் 37 பேர் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்தவர்கள். கடந்த வாரம், சில மூத்த டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்கனவே நேரம் ஒதுக்கி இருந்ததால், விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவகாசம் கேட்டோம். நோயாளிகள் நலன் கருதியே அவகாசம் கேட்கப் பட்டது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் கமிஷனில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம், கமிஷன் ஒதுக்கியுள்ள தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஆஜராகிவிளக்கம் அளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-செப்-201818:06:21 IST Report Abuse

Bhaskaranதமிழ் நாட்டின் thaniyaar மருத்துவமனைகளில் அபொல்லோதான் bigboss இவர்களை கேள்விகேட்க எல்லோரும் அஞ்சுகிறார்கள்

Rate this:
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-201815:22:38 IST Report Abuse

Rajeshno use , they have very strong support. no commission can clear the truth behind the death of Jaya . so this is just a waste of money and time

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-செப்-201815:21:30 IST Report Abuse

Endrum Indianமுதன் முதலில் கேட்கவேண்டியதை கேஸ் முடிக்கும் தருவாயில் இப்போ வலிப்பு வந்த மாதிரி கேட்கின்றது.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X