ஒன்று சேருங்கள்; சாதிக்கலாம்: இந்துக்களுக்கு மோகன் பகவத் அழைப்பு| Dinamalar

ஒன்று சேருங்கள்; சாதிக்கலாம்: இந்துக்களுக்கு மோகன் பகவத் அழைப்பு

Added : செப் 08, 2018 | கருத்துகள் (78)
Advertisement
இந்துக்கள், மோகன் பகவத்,அழைப்பு

சிகாகோ: உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்தார்.

1893ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் பேசியதின் 125 ஆண்டு விழாவை முன்னிட்டு உலக இந்து காங்கிரஸ் அமைப்பின் மாநாடு சிகாகோவில் நடந்தது.
2500 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். ஒரு சமுதாயமாக ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும். இந்து சமுதாயம் சும்மா இருக்கக் கூடாது.


ஆதிக்க மனப்பான்மை இல்லை:

இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை. முன்னேற வேண்டுமானால், ஒத்துழைப்பையும், நாம் ஒன்று என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும். சிங்கம் தனியாக இருந்தால், நாய்கள் கூட சிங்கத்தை அழித்து விடும். அதை நாம் மறந்து விடக் கூடாது. உலகை சிறந்ததாக மாற்றுவோம். நமது நெறிமுறைகள் உலகுக்கே பொருந்துபவை. சிறந்த மனிதர்கள் இந்து மதத்தில் உருவாகி உள்ளனர். அவர்களும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

கொள்கைகள் இருப்பதில் என்ன தவறு. இந்து மதம் நவீனத்துக்கு எதிரானது அல்ல. ஒட்டுமொத்த உலகையே ஒரே அணியாக கொண்டு வர வேண்டுமானால், அகந்தை இல்லாமல், பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக, கடவுள் கிருஷ்ணரும் யுதிராஷ்டிரரும் தங்களுக்குள் மாற்று கருத்து கொள்ளவில்லை.

நாங்கள் பழமையும் புதுமையும் கொண்டவர்கள். இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு மனித குலத்திற்கு என்ன தேவையோ அது பற்றி இப்போதே சிந்திக்கிறோம். நமது ஞானம் இன்றைய மக்களுக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-செப்-201810:57:15 IST Report Abuse
வல்வில் ஓரி வாழ்க ஆர் எஸ் எஸ். தொடரட்டும் அவர்களின் தேசிய பணி அதுவும் இந்து எதிர்ப்பு சக்திகள் ஒன்று சேர்ந்துள்ள இந்த தருணத்தில் தங்களின் மத கலாச்சார உணர்வுள்ள இந்துக்கள் பகவத் அவர்கள் கூற்றில் உள்ள உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மானமுள்ளஇந்து,இந்துஸ்தான். இங்கே பெரும்பான்மையோர்கே கல்வி, வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத பட்சத்தில், சிறுபான்மையினருக்கு எதுக்கு இட ஒதிக்கீடு. இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள பாக். போன்ற நாடுகளில் இந்துக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் என்ன கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதிக்கீடு கொடுக்கிறதா? இல்லை அங்கே இருக்கும் அரசியல் கட்சிகள்தான் வரிந்து கட்டிக்கொண்டு இந்துக்களுக்கு ஆதரவாக பேசுகிறதா? திராவிஷம் போன்ற கட்சிகள்தான் இங்கு ஓட்டுக்காக பிச்சை பாத்திரம் ஏந்துகிறது. இத்தனை காலம் இந்துக்கள் ஏமாந்தது போதும். இன்றிலிருந்தாவது இந்துக்களாகிய, இந்தியனாகிய நாம் ஒன்று பட்டால் வந்தேரி மதங்களின் ஆதிக்க சூழ்ச்சிகளை முறியடித்து இந்துக்களின் ஆளுமையை நிலை நாட்டுவோம். இந்துக்களே காலம் தாழ்த்தி செயல் பட்டாலும் இப்போதாவது சிந்தியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
09-செப்-201810:09:43 IST Report Abuse
Kumar அமெரிக்காவில் இவருக்கு என்ன வேலை. ஒரு வேலை IT கம்பனியில் வேலை புரியிறாரோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X