அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குட்கா, ஊழல், குற்றச்சாட்டு, அமைச்சரவை

குட்கா ஊழல் குற்றச்சாட்டுகளை சமாளிக்க, தமிழக அரசு தயாராகி வருகிறது.அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முறியடிப்பது குறித்து, இன்று நடக்க உள்ள, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அத்துடன், இவ்விவகாரத்தில், அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவதற்கும்,புதிய வியூகம் வகுக்கப்பட உள்ளது.
குட்கா ஊழல் வழக்கு, தமிழக அரசியலில், பெரும் புயலை கிளப்பி உள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட, பலரது வீடுகளில், அதிரடி சோதனை நடத்தினர். அமைச்சர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகளும், சி.பி.ஐ., அதிகாரிகளும் சோதனை நடத்தியது, இதுவே முதல் முறை. அதேபோல, பதவியில் இருக்கும், டி.ஜி.பி.,வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதும், இதுவே முதல் முறை. இது, தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

போர்க்கொடி :

எனவே, 'அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கரும், டி.ஜி.பி., பதவியிலிருந்து, டி.கே.ராஜேந்திரனும் விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கி உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளாட்சி துறை ஒப்பந்த பணிகளுக்கான, 'டெண்டர்'களை, அவரது உறவினர்களுக்கு வழங்கியதாக, புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, முதல்வர், துணை முதல்வர் மீதும், எதிர்க்கட்சியினரால், ஊழல் குற்றச்சாட்டுகள்

சுமத்தப்பட்டு உள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது எழும் புகார்கள், அரசுக்கும், கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதை சமாளிப்பது குறித்தும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவது பற்றியும் ஆலோசிக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில், இன்று மாலை நடைபெற உள்ளது. இதில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. 'இவ்வழக்கில், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம், தமிழக அரசுக்கு உள்ளது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மறைந்து விடும் அதன்படி, ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும்படி, கவர்னருக்கு பரிந்துரை செய்தால், அவரால் உடனடியாக முடிவெடுக்க முடியாது. அவர், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பார். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படும். இப்பிரச்னை பெரிதாக வெடிக்கும். மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும். அந்த சத்தத்தில், குட்கா பிரச்னை மறைந்து விடும் என, ஆளும் தரப்பு நம்புகிறது. எனவே, இன்றைய அமைச்சரவை கூட்ட முடிவுகள், தமிழக அரசியலில், புதிய திருப்பத்தை

ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களை முடக்க முயற்சி! :

''உள்ளாட்சி துறையில், 'டெண்டர்' விதிமுறைகள் எதையும் மீறவில்லை; அமைச்சர் பதவியை, தவறாக பயன்படுத்தவில்லை,'' என, கோவையில் நடந்த, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அந்தத் துறையின் அமைச்சர், வேலுமணி பேசினார்.
அவர் பேசியதாவது: உள்ளாட்சி துறையில், முன்னர் அமைச்சராக இருந்த ஸ்டாலின் செய்ததை விட, அதிகளவில் செய்திருக்கிறோம். நமக்கு எதிரி, தி.மு.க., தான். தினகரனை பொருட்படுத்த தேவையில்லை. என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை, சில தொலைக்காட்சிகள் முன்வைக்கின்றன. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு, நானும், அமைச்சர் தங்கமணி போன்றவர்களும் பயப்பட மாட்டோம். ஆதாரமில்லாத செய்திகளை ஒளிபரப்புவோர் மீது, வழக்கு தொடரப்படும்.இவ்வாறு வேலுமணி பேசினார்.

பின், நிருபர்களுக்கு, அவர் அளித்த பேட்டி:

உள்ளாட்சி துறையில், டெண்டர் விதிமுறைகள் எதையும் மீறவில்லை;

அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தவில்லை. தி.மு.க., ஆட்சியில் நடந்த, செம்மொழி மாநாட்டின் போது, இதே நிறுவனங்களுக்கு தான், ஒப்பந்தப் பணிகள் தரப்பட்டன. மூத்த அமைச்சர்கள் மீது, குற்றச்சாட்டு சுமத்துவதன் வாயிலாக, எங்களின் வேகமான செயல்பாட்டை முடக்க நினைக்கின்றனர். குட்கா விவகாரம், விசாரணையில் இருப்பதால், அதுபற்றி பேச முடியாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அமலாக்க துறை விசாரணை :

'குட்கா' ஊழல் வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த உள்ளது.குட்கா ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், குட்கா ஆலை உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் யாதவ், சீனிவாச ராவ், அதிகாரிகள் பாண்டியன், செந்தில்முருகன் உள்ளிட்ட, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில், கைதான மாதவ ராவ், 'அமைச்சர், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை' என, வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அதனால், அவரை காவலில் எடுக்க, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதேநேரத்தில், குட்கா விவகாரத்தில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் வாயிலாக, 60 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இருந்து, அதற்கான ஆவணங்களை, அமலாக்கத் துறை கேட்டு பெற்றுள்ளது. மேலும், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று முன்தினம் வெளியிட்ட ஆவணங்களையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்களின் உண்மை தன்மை அறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-செப்-201823:46:32 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்சரி.. ஒனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்.. 70 % ஒனக்கு 30% அதிமுகவுக்கு ..

Rate this:
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201816:25:18 IST Report Abuse

Chinnappa Pothirajஇதில் இருந்து என்ன தெரிந்து கொள்ளலாம், கண்டிப்பாக ஆளுநரின் கண்காணிப்பு கண்டிப்பாக அவசியம். குளம், கண்மாய், பள்ளிகள், சாலைகள்,மருத்துவ மையங்கள் மறு சீரமைப்பு செய்யாமல் சீரமைப்பு செய்ததாக பல பல வருடங்களாக கொள்ளை அடித்து பின்னர் இது காலாவதியான கட்டடம் இனி புதுப்பிக்க முடியாது என இடித்து விட்டு புதிய கட்டிடம் ஒப்பந்தம் செய்து தரமற்ற கட்டடம் கட்டி ஒரு பெரிய ஆர்ப்பாட்டம், தம்பட்டத்துடன் திறப்பு விழாவில் சாதனை படைத்து விட்டதாக பேசிப்பேசியே நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள். ஆளுநர் அவர்கள் செயல் திட்டத்தை ஆய்வு செய்வதற்கு பெரும்பான்மை அரசியல் கட்சிகள் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தாங்கள் நேர்மையான முறையில் திட்டத்தை செயல்படுத்தினால் பயம் ஏன்? என்னைப்பொருத்தவரை இந்த.தமிழ் நாட்டு மக்களையும் அரசியல் வாதிகளையும, அரசு ஊழியர்கள், அதிகாரிகளையும் மிக மிக கடுமையான சட்டம் கொண்டு தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும். இல்லை என்றால் 5 ஆண்டுகள் ஆளுநரின் ஆட்சி இல்லை என்றால் இராணுவ ஆட்சி .கொள்ளை அடித்து சேர்த்த ,அடாவடி செய்து செய்து சேர்த்த சொத்தை அனைத்தும் அரசுடைமை செய்து , தவறு செய்தவர்களை 20 வருடம் கடுங்காவல் தண்டனை, எந்த ஒரு சிறப்பு வசதிகளும் இல்லாமல் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும். வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09-செப்-201816:17:25 IST Report Abuse

Endrum Indianநம்மூரில் ரூ.500 , ஒரு பிரியாணி பொட்டலம், ஒரு குவார்ட்டர், ஒரு தண்ணி பாக்கெட் கொடுத்தால் போதுமே????????/

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X