பதிவு செய்த நாள் :
மாற்றம்!
சட்டசபை தேர்தல்களால் காங்கிரஸ் நடவடிக்கை
ஹிந்துத்வா கொள்கைக்கு திடீர் முக்கியத்துவம்

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் காங்கிரசார், பா.ஜ.,வை போலவே, பசு பாதுகாப்பு, ஹிந்துத்வா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தர துவங்கியுள்ளனர்.

காங்கிரஸ், பசு பாதுகாப்பு, அரசியல், ஹிந்துத்வா, பா.ஜ.,


மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில், இங்கு, மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன், பா.ஜ., தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.விவசாயிகள் அதிகம் வசிப்பதால், பெரும்பாலானோர் வீடுகளில், கால்நடைகள் வளர்க்கப்படுகிறன. மாநிலம் முழுவதும், 90 லட்சம் கால்நடைகள் உள்ளன. குறிப்பாக, பசு வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.வீடுகளில் பசுக்கள் வளர்க்கப்பட்டாலும், 1.5 லட்சம் பசுக்கள், ஆதரவின்றி, பொது வெளியிலும், மேய்ச்சல் நிலங்களிலும் அலைந்து திரிகின்றன.இதையடுத்து, பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாநில அரசின் சார்பில், மால்வா மாவட்டத்தில், 32 கோடி ரூபாய் செலவில், மிக பிரமாண்டமான, பசுக்கள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளன. இது, நாட்டிலேயே மிகப் பெரிய பசுக்கள் சரணாலயம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

கணக்கு :

இதன் மூலம், விவசாயிகள் மற்றும் பசுக்களை தெய்வமாக வணங்கும் ஹிந்துக்களின் ஓட்டுகளை எளிதில் பெற முடியும் என, பா.ஜ.,

தலைமை நம்புகிறது.ம.பி., ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் என்பதால், இங்கு, ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கையாள்வதால், தேர்தலில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என, காங்., தலைமை கணக்கு போட்டுள்ளது.எனவே, ஹிந்துக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், காங்., தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, மாநில, காங்., தலைவர் கமல்நாத், சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'ம.பி.,யில், காங்., ஆட்சி அமைத்தால், கிராமம் தோறும் பசு காப்பகங்கள் அமைக்கப்படும்' என கூறினார்.அடுத்த வாரம், ம.பி., யில் தேர்தல் பிரசாரத்தை துவங்கும், அந்த கட்சியின் தலைவர் ராகுல், ஓம்காரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் பின், மாநிலத்தில் உள்ள முக்கிய ஹிந்து கோவில்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, கமல்நாத், மாநிலத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றிற்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

காங்கிரசார் முயற்சி :

காங்கிரசாரின் இந்த செயல் குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரஜ்னீஸ் அகர்வால் கூறியதாவது:தங்கள் கட்சி, ஹிந்துக்களுக்கு ஆதரவான, ஹிந்துத்வா கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சி என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, காங்கிரசார் முயற்சித்து வருகின்றனர்.ஏற்கனவே, ம.பி., முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான திக்விஜய் சிங், தான், ஹிந்துத்வா கொள்கைகளை மதிப்பவன் என்றும், பசுவின் கோமியத்தில் அதிக மருத்துவ குணம் இருப்பதால், அதை உட்கொண்டு உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, ம.பி.,யில் எப்படியும் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக, அந்த கட்சியினர், பசு பாதுகாப்பு, கோவில் வழிபாடு போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காங்., ஆட்சிக்கு வந்தால், கிராமத்திற்கு ஒரு பசு காப்பகம் அமைப்பதாக, கமல்நாத் அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம்; அதற்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படும் என தெரியவில்லை. கிராமம் தோறும் காப்பகம் அமைக்க, எவ்வளவு நிலத்தை கையகப்படுத்த முடியும் என்பதும் கேள்விக்குறியே. ம.பி.,யில், காங்., ஆட்சி

Advertisement

செய்த போது, பசு பராமரிப்புக்காக, வெறும், 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தானிலும் பசு அரசியல்! :

பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ள ராஜஸ்தானிலும், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இங்கு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் அதிகம் என்பதால், பசு பாதுகாப்பு பற்றிய பிரசாரம் அதிகம் காணப்படுகிறது.ஐந்து ஆண்டு கால, பா.ஜ., ஆட்சியில், அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியில், காங்., தலைமை ஈடுபட்டுள்ளது.கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஓட்டுகளை பெறும் வகையில், பிகானீர் மாவட்டத்தில், மிகப் பெரிய பசுக்கள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை, முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.பொது இடங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பையை உண்டதில், ஐந்து ஆண்டுகளில், ஆதரவற்ற, ௧,௦௦௦ பசுக்கள் இறந்துள்ளன. இது, மக்கள் மத்தியில், மாநில அரசுக்கு எதிரான மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.இது போன்ற செய்திகளை, மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தும், பசு பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில், காங்., தலைமை ஈடுபட்டுள்ளது.இந்த மாநிலத்திலும், ஹிந்துக்கள் ஓட்டுகள் அதிகம் உள்ளதால், காங்., தலைவர்கள், ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சுகளை சற்று அடக்கியே வாசிக்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
09-செப்-201816:15:08 IST Report Abuse

Endrum Indianநம்ம பப்பு அதுக்குத் தான் கைலாச மானசரோவர் யாத்திரை, பிறகு குஜராத்தில் எல்லா கோவிலையும் ஒரு விசிட் அடித்தது. எப்படியாவது இந்துக்கள் ஓட்டுக்களை தன் பக்கமா இழுக்கத்தான். இது மட்டும் நடக்கலை என்றால் அப்புறம் பப்புவின் நிலைமையை நினைத்துப்பாருங்கள்.

Rate this:
Nagarajan S - Chennai,இந்தியா
09-செப்-201811:00:55 IST Report Abuse

Nagarajan Sஆக எப்படியும் பிஜேபியை வீழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது காங்கிரஸ் சபாஷ் சரியான போட்டிதான் பெட்ரோலியப்பொருட்களின்விலை ஏற்றம், அதனால் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், ரூபாய் மதிப்பு குறைவு, விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை, இதெல்லாம் பிஜேபிக்கு எதிராக உள்ளன மெஜாரிட்டி இடங்கள் கிடைப்பது கஷ்டம் தான்.

Rate this:
tamil - coonoor,இந்தியா
09-செப்-201809:01:44 IST Report Abuse

tamilபி.ஜெ.பி க்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி, அடுத்து மோடி அவர்களின் வசீகரமான வளர்ச்சியை பற்றிய பேச்சு, மற்றபடி ஹிந்துத்துவா கொள்கையோ, பசுபாதுகாப்போ அவர்களுக்கு வெற்றியை கொடுக்கவில்லை, நல்ல ஆட்சி மக்களுக்கு கிடைத்தால் அவர்கள் ஆதரிப்பார்கள், மோசமான ஆட்சி என்றால் தூக்கி எறிவார்கள்,

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X