ரூ. 1.2 லட்சம் கோடி சேமிக்கலாம் : கொள்கை உருவாக்க, 'நிடி ஆயோக்' வலியுறுத்தல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ. 1.2 லட்சம் கோடி!
மின்சார வாகனங்களுக்கு மாறினால் சேமிக்கலாம்
கொள்கை உருவாக்க, 'நிடி ஆயோக்' வலியுறுத்தல்

புதுடில்லி : 'மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில், 'நாட்டில் உள்ள இரு சக்கர வாகனங்களை, மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றினால், ஆண்டுக்கு, 1.2 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.

நிடி ஆயோக், மோடி, மின்சார வாகனம்


மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பு, 'மாசில்லா வாகனங்கள் - கொள்கை வரையறையை நோக்கி' என்ற தலைப்பில், ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. டில்லியில், நேற்று முன்தினம் நடந்த, சர்வதேச போக்குவரத்து மாநாட்டில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டிய அவசியம் குறித்தும், அதற்காக உருவாக்க வேண்டிய கொள்கை குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச போக்குவரத்து மாநாட்டில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.

அவர் பேசியதாவது:

பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், வாகன மாசைக் குறைப்பது முக்கியமானது. அதன்படி, மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும். இந்தத்

துறையில், மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதால், அதிகமான முதலீடுகளை செய்ய, முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு, மோடி பேசினார்.


இந்நிலையில், நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பெட்ரோல்மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க, முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம், நமக்கு மிகப் பெரிய பலன்கள் கிடைக்கும். மின்சார வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. இதனால், காற்று மாசு குறையும். தற்போது, நம் நாடு, பெட்ரோல், டீசலை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. மின்சாரத்துக்கு மாறினால், இவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவும், மிகப் பெரிய அளவில் குறையும். நாட்டில் தற்போது, 17 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. ஒரு வாகனத்துக்கு, ஒரு ஆண்டில், 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு, 3,400 கோடி லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயாக வைத்துக் கொண்டால், 2.4 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில், 50 சதவீதம் வரிகள் என்று வைத்துக் கொண்டாலும், 1.2 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு மின்சார வாகனங்களுக்கு மாறுவதை, படிப்படியாக மேற்கொண்டால், அடுத்த, ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து இரண்டு சக்கர வாகனங்களையும், மின்சார வாகனங்களாக மாற்ற முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு, விரிவான, திட்டமிட்ட, உறுதியான கொள்கை தேவை. பல்வேறு நாடுகள், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இந்த வகையில், சர்வதேச சந்தையிலும் நம் நிறுவனங்கள் போட்டியிட முடியும். மாசில்லாத வாகனங்களுக்கு மாறுவதன் மூலம், சர்வதேச நாடுகளுக்கு முன்னோடியாகவும் நாம் இருக்க முடியும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மோடியுடன் சந்திப்பு :

மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம், 'மின்சார வாகனத்துக்கு மாறும் அரசின் முயற்சிக்கு, அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்' என, சுவிட்சர்லாந்தில் தலைமையிடம் உள்ள, ஏ.பி.பி., நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறையில் முன்னிலையில் இருக்கும், ஏ.பி.பி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சர்வதேச போக்குவரத்து மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியை, ஏ.பி.பி., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உல்ரிச் ஸ்பீசோபர் சந்தித்து பேசினார். அப்போது, மின்சார வாகனங்களுக்கு மாறும் அரசின் முயற்சிகளுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக, உல்ரிச் கூறியுள்ளார். வரும், 2022க்குள், 227 ஜிகாவாட் திறனுள்ள, மாசில்லாத, மாற்று மின்சாரத்தை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு உதவுவது குறித்தும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-செப்-201805:41:03 IST Report Abuse

Manianமுதலில் மின்ஹக்கார சார்ஜிங் சுதேஷன்கள் வேண்டும். தற்போதைய பெட்ரொல் பிணக்குகளை இதை வைக்க முடியும். இரண்டாவதாகா பேட்ட்ரீல் வைக்க தேவையான மூலப்பொருள் லித்தியம் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. அது இல்லாமல் பேட்ட்ரீ செய்ய முடியாது. அதை சைனாவிடமே வாங்க வேண்டும். அதிக முதலீடு தேவை. கார்போரேட்டுகள் ஒழிக்க என்று கூறும் அரசியல் வியாதிகளில் இதை செய்ய முடியாது. எங்கேயாவது தோழில் ஆரம்பித்தாள் (தமிழ் நாட்டில் கட்டிங் இல்லாமல் வராது), நிலம் தர மறுப்பார்கள். தற்போது சுசுகி போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது ஆரம்பித்தால் சுமார் ஐந்து வருஷங்களில் பலன் கிடைக்கும். அத்திருக் மோடி பதவியில் இருக்க வேண்டுமே

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-செப்-201805:34:51 IST Report Abuse

Manianமோடி பெட்ரொல் விலையை குறைக்கதாதல் மூன்று நன்மைகள்- (1 ) இன்பிலேஷன் விலை வாசி உயர்வு 6 %, முன்பு பத்து சதவிகிதாம் (2 ) வெளிநாடு கரன்சி கை இருப்பு மிக அதிகம் - சைனா, ரஷியா போன்ற நாடுகள் தற்போது கீழ் நிலையில் உள்ளன, (3 ) வெளி நாடு கடன் வாங்கும் தொகை மிகவும் குறைந்து விட்டது. உலக சந்தையில் எண்ணை விலை குடியாத்தம், உலகம் எங்கும் பெட்ரோல் விலை அதிகமே. மானினங்கள்தான் வரியை குறைக்க வேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-செப்-201805:28:38 IST Report Abuse

Manianமுடடாள்த்தனமாக பேசுவதற்கும் ஒரு எல்லை உண்டு தம்பி. எலக்டிக்கில் ஒடுக்கி சைக்கிள் கூட இப்போது உள்ளது . விலை கொஞ்சம் ஜாஸ்தி. 70 மைல்கல் வரை ஒரே சார்ஜில் ஓடுகிறது. 25 மைல் வேகத்தில் போகிறது. அதிக அளவில் விற்பனை ஆகும்போது நம்ம ஊரிலேயும் வரும்.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X