அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர்களின் ஊழலை எதிர்த்து 18ம் தேதி தி.மு.க., போராட்டம்

சென்னை: ஊழல் பேர்வழிகள் பதவி விலக வலியுறுத்தி, 18ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

திமுக, போராட்டம், ஸ்டாலின்


தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விபரம்:

பாசிச, பா.ஜ., ஆட்சியை வீழ்த்த, தேவையான செயல் திட்டங்களையும், களப் பணிகளையும் வகுத்து, அவற்றை தொய்வின்றி, தொடர்ந்துமுன்னெடுத்து செல்ல வேண்டும்ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், திண்ணையிலும், மக்களை நேரடியாகசந்தித்து, மாநில வளர்ச்சியை, 20 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிய, அ.தி.மு.க., அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை விவரிக்க வேண்டும்வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை,உடனுக்குடன் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து, உரிய நிவாரணம் பெற வேண்டும்கடைமடை பகுதிகளுக்கு தாமதமின்றி, காவிரி நீர் செல்லவும், வருங்காலத்தில், காவிரி நீர், கடலில் வீணாக கலப்பதை தடுத்து, விவசாயத்திற்கு பயன்படுத்தவும், அ.தி.மு.க., அரசு, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள ஏழு பேரை, தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாளை நடக்கும், 'பாரத் பந்த்' வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்கப்படும்

Advertisement

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய, அமைச்சர் விஜயபாஸ்கரை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனை, பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும், ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும், மாவட்ட தலைநகரங்களில், 18ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-செப்-201823:38:29 IST Report Abuse

Matt Pவூழலுக்கு தான் பருப்பு என்று சொல்வதற்கு,வாய் தவறி நெருப்பு சொல்லிவிட்டார் ...விடுங்க ..தேனாய் இனித்த வூழல் அவருக்கு நெருப்பாய் ஏன் எரிந்தது என்று தெரியவில்லை.

Rate this:
09-செப்-201823:38:13 IST Report Abuse

நக்கல்உங்கப்பா இருக்கும்போது சொல்லவேண்டிய விஷயத்தை இப்போ சொல்லுவது உங்க நிழலை நீங்களே செருப்பால் அடிப்பதற்கு சமம்...

Rate this:
09-செப்-201822:45:30 IST Report Abuse

இ.வி.டுமீலன்,த.நா.பூனை மேல் மதில், இந்தியா சுதந்திரம் அடைந்த ஜனவரி 15 தேதி, நீட் சரிதா, நடந்துக் கொண்டிருக்கும் வாழப்பாடி ஆட்சி - என்று தமிழ் தெரியாத உளறு வாயை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக போராட்டம் என்றொரு அறிக்கையா ? நிதானமாக உளராமல்தானே சொல்கிறீர்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். தமிழன் அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு அர்த்தமே திருட்டு முன்னேற்ற கழகம் என்று கட்டுமரம் எழுதி வைத்து சென்றுருக்கிறது. அப்படி என்றால் திமுகவே திமுகவை எதிர்த்து போராட்டமா? பேஷ்! பேஷ்!! நல்லதுதான். சற்றும் தாமதிக்காமல் உடனே உங்க நைனா கொள்ளையடித்த 360 வகையான சொத்துக்களையும் உன் குடும்பத்தாரிடமிருந்து நீயே பறிமுதல் செய்து நெஞ்சுக்கு நீதியாக ஏழை தமிழனிடம் கொடுத்து விடு. கணக்கு சரியா போச்சு.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X