எகிறியது, 'ஹெல்மெட்' வழக்கு : அபராத வசூலும் அமோகம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமோகம்
எகிறியது, 'ஹெல்மெட்' வழக்கு
அபராத வசூலும் அமோகம்

'ஹெல்மெட்' அணியாத, இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது, பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை, உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவால், பல மடங்கு அதிகரித்துள்ளது.

எகிறியது, 'ஹெல்மெட்' வழக்கு : அபராத வசூலும் அமோகம்


தமிழக போலீசின், 32 மாவட்டங்களிலும், ஏழு மாநகர போலீஸ் கமிஷனர்களின் எல்லைகளிலும், ஆக., 20 வரை, ஹெல்மெட் அணியாத, இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது, தினமும் சராசரியாக, 25 ஆயிரம் வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடம், உடனடியாக அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

அமல் :

ஆகஸ்ட் இறுதியில், இரு சக்கர வாகனத்தின், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும்,

கட்டாயம் ஹெல்மெட் அணியும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, தமிழக அரசு உடனே அமல்படுத்தியது.அதன் எதிரொலியாக, மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில், வழக்கமாக, ஹெல்மெட் வழக்குகளை பதிவு செய்த போலீசாருடன், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதனால், செப்., 1ம் முதல், ஹெல்மெட் வழக்குகளின்எண்ணிக்கை மற்றும் அபராத வசூல், பல மடங்காக அதிகரித்துஉள்ளது.
சென்னையில் ஆகஸ்டில், தினமும் சராசரியாக, 10 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கை, 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சேலம் நகரில், 400 வழக்குகள் என்று இருந்தது, தற்போது, 1,600 வழக்குகளாக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், 600 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது, 2,000த்தை தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும், கடந்த மாதம் வரை, தினமும் சராசரியாக, 25 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில், தற்போது, அவற்றின் எண்ணிக்கை, 2.15 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால், தினமும் அபராத தொகையும், 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, தற்போது, 2.10 கோடியாக உயர்ந்துள்ளது.சுறுசுறுப்பு :

இது குறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகன விபத்துகளால்,

Advertisement

உயிரிழப்பை குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2016 - 17ல், வாகன தணிக்கை மட்டுமின்றி, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருச்சியில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பிரிவு ஆய்வாளர், வாகன ஓட்டியிடம், எல்லைமீறியதாக எழுந்த புகாரால், ஹெல்மெட் வழக்குகள் பதிவு குறைக்கப்பட்டது. மீண்டும், வழக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடக்கிறது.இதே நிலை தொடர்ந்தால், அரசுக்கு மாதம், சராசரியாக, 60 கோடி ரூபாய் வரை, கூடுதல் வருவாய் கிடைக்கும். வாகன ஓட்டிகள், குடும்பத்தினரை மனதில் கொண்டு, உயிரை காக்கும், ஹெல்மெட் அணிய முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
11-செப்-201807:30:31 IST Report Abuse

rmrஇந்த சட்டம் பொது மக்களுக்கு தானா அரசு அதிகாரிகளுக்கு இல்லையா ? அவுங்கள என்ன பண்ண போறீங்க ? சிலர் சிறுபான்மையினர் என்ற சொல்லிக்கொண்டு தலை கவசம் அணிவதே இல்லையே அது மட்டும் ஏன் ஒன்னும் கேக்க மாட்டிங்களா ?இந்தியாவுல எல்லாருக்கும் ஒரே சட்டம் என்பதை உறுதி செய்யுங்கள் முதலில்

Rate this:
raja - ,
13-செப்-201813:47:28 IST Report Abuse

rajaஉண்மை...

Rate this:
tamil - coonoor,இந்தியா
10-செப்-201808:53:23 IST Report Abuse

tamilகாவல்துறையினருக்கு வருமானத்தை ஏற்படுத்த ஒரு சிறந்த ஏற்பாடு, இவ்வளவு கண்டிப்புடன் சட்டம் கொண்டுவரும் அரசு, தரமான சாலை வசதியை ஏன் செய்து தரவில்லை என்று எந்த நீதிமன்றமும் கேட்பதில்லை, ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள் மக்களை நசுக்குவது தான்

Rate this:
M.Vijayakumar - Coimbatore,இந்தியா
10-செப்-201803:13:03 IST Report Abuse

M.Vijayakumarநிதிமன்றம் நிதிபதி ஏற்ப நிதி வழங்கும் சட்டத்தை அனுசரித்தல்லா

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X