ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி

Added : செப் 09, 2018 | கருத்துகள் (33)
Advertisement
ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி

குடியாத்தம்: ஆசிரியைக்கு, காதல் குறுந்தகவல்களை அனுப்பி, தொல்லை கொடுத்து வந்த பள்ளி மாணவனிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின், ஆங்கில பாட ஆசிரியை மாலா, 24. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் ஒருவன், காதல் கொண்டான்.இதையறிந்த ஆசிரியை,புத்திமதி கூறி, அவனை திருத்தப் பார்த்தார். அதை பொருட்படுத்தாத மாணவன், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, காதல் ரசம்சொட்டும் குறுந்தகவல்களை, அனுப்பிக் கொண்டே இருந்தான்.பள்ளிச் சுவரில், ஆசிரியை குறித்து காதல் கவிதைகளை எழுதினான்.கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, 160 காதல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை புகார் செய்தார். அதிகாரிகள் விசாரணையில், புகார் உறுதிப்படுத்தப்பட்டது.'இது குறித்த விசாரணைஅறிக்கை, கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேலுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
15-செப்-201807:54:11 IST Report Abuse
chander அவனை திருத்த சீர் திருத்த பள்ளியில் பத்துவருடம் போடலாம்
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
14-செப்-201813:19:14 IST Report Abuse
Mahendran TC இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம் சினிமா , தொலைகாட்சி தொடர்கள் , பெற்றோர்களின் வளர்ப்பு , ஆசிரிய , ஆசிரியைகளின் நவீன கால உடை உடுத்துதல்/ ஸ்டைல் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
11-செப்-201807:37:22 IST Report Abuse
Sukumaran Sankaran Nair முதல் கட்ட நடவடிக்கையை உடனே எடுத்திருந்தால்,இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். பிரச்சனையை வளர விட்டு,பிறகு பார்க்கலாமே என்றெல்லாம் முடிவு எடுப்பதால் தான் இன்று மாணவர்கள் கட்டுப்படுத்தவியலாத நிலைக்கு, தங்கள் மனம் போன போக்கிலேயே நடந்துகொள்கிறார்கள். வணங்கி,போற்றப்பட வேண்டிய ஆசிரியரிடம் முறையற்ற வகையிலான தொடர்பை ஒரு மாணவனுடைய கல்வி அமையுமானால்,அந்த கல்வி அந்த மாணவனுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது இன்று மாணவர்கள் தெருவில் ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்று திரியும் அளவுக்குப் போய்விட்டது. கல்வியாளர்கள் வகுக்கும் முறைமை மாற்றியமைக்கப்பட வில்லையென்றால், கனி தராத மரங்களைப் போன்று,வளர்ந்து, யாருக்கும் எந்த பலனும் கிட்டாது மட்டுமல்லாது ,அத்துமீறிய பக்குவப்படாத,தன்மை மாறாத நிலைக்கு கொண்டு வரப்படும் சூழல் எதிர்ப்படலாம் தன்மை மாற்ற (Transformation of Character building)போதனைத்திட்டங்கள் முறையாக செயல்பட பெற்றோர்கள்,ஆசிரியர் கலந்தாலோசனை முக்கிய பங்காற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X