"BJP More Corrupt Than Congress" Says Arvind Kejriwal On Rafale Scam | காங்.ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல் : - கெஜ்ரிவால் | Dinamalar

காங்.ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல் : - கெஜ்ரிவால்

Added : செப் 09, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
  காங்.ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல் : - கெஜ்ரிவால்

லக்னோ :காங். ஆட்சியைவிட பா.ஜ. ஆட்சியில் தான் பெருமளவு ஊழல் நடநதுள்ளது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.வை மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா, நடிகரும் பா.ஜ. எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது கெஜ்ரிவால் பேசியது, முந்தைய காங்.ஊழல் செய்த காரணத்தால் கோபமடைந்த மக்கள் அக்கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு பா.ஜ.வை ஆட்சியி்ல் உட்கார வைத்தனர். இப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகளாகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் முந்தைய காங்.ஆட்சியை விட தற்போதைய பா.ஜ. ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது.
* காங். ஆட்சியில் 2ஜி ஊழல் என்றால், பா.ஜ.க ஆட்சியில் சகாரா-பிர்லா ஊழல்.
* காங். ஆட்சியில் காமன்வெல்த் ஊழல் என்றால், பா.ஜ. ஆட்சியில் லலித் மோடி ஊழல்.
* காங். போபர்ஸ் பீரஙகி பேர ஊழலில் சிக்கியது.
* பா.ஜ. ரபேல் விமான ஊழலில் சிக்கியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மியும், மத்தியில் பா.ஜ..வும் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்தன.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு, மருத்துவமனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த விலையில் மின்சாரம் வினியோகம் என்று டில்லியில் நாங்கள் செய்த சாதனைகள் உலகளவில் பேசப்படுகிறது.
ஆனால், இதைப்போன்ற நலத்திட்டங்களை நாடு முழுவதும் மோடியால் ஏன் செய்ய முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிவிட்டார் மோடி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பா.ஜ. எம்.பி சத்ருகன் சின்கா கூறுகையில், ' பா.ஜ.க எம்.பி.யாக இருந்துகொண்டு தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சித்து பேசிவருவது ஏன்? என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு கட்சியை விட பாரதிய ஜனதா(இந்திய மக்கள்) தான் முக்கியம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
09-செப்-201820:16:09 IST Report Abuse
Giridharan Srinivasan இந்த கேஜரிவால் திருமதி. ஷீலா தீட்சித் மேல் ஊழல் குற்றம் சாட்டி ஆட்சியை கைப்பற்றினார். பின் குறுகிய காலத்திலேயே திருமதி. ஷீலா தீட்சித் நேர்மையானவர் என்று இவரே சான்று கொடுத்தார். அதன் பிறகு திரு. அருண் ஜைட்லீ மீது ஊழல் குற்றம் சாத்தினார். பிறகு மணிய்ப்பு கேட்டார். அதேபோல் திரு. நிதின் கட்கரி மீது ஊழல் குற்றம் சாத்தினார். அதிலும் இவர் அவரிடம் மன்னிப்பு கேட்டார். இவர் டெல்லி யின் முதலமைச்சர் கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
Chandar - Chennai ,இந்தியா
09-செப்-201816:49:22 IST Report Abuse
Chandar KhanCross கட்சி காலத்தில் கண்துடைப்பாக 2G கேஸ் போட்டார்கள் . Vatican ஏஜென்ட் கபில் சிபல் zero loss என்று முழங்கியது உலகம் அறியும் . 2G கேஸ் நீர்த்து போக செய்தது KhanCross கட்சி. இன்னும் 2G கேஸ் முடியலே, பிஜேபி மறு அப்பீல் செய்தது தெரியாதா ? உங்கள் விடுதலை குமாரசுவாமி ஜெயலலிதா விடுதலை செய்த மாதிரி விடுதலை. மறு appeal இல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சசிகலா jailed. உங்க மாதிரி ஆட்கள் உசுப்பேத்தி விட்டு அவர்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டீர்கள் போல. அவர்கள் ஜெயிலுக்கு போனால் அவர்கள் KhanCross பெரிய தலைகளை போட்டு கொடுப்பது நிச்சயம். அதுக்குத்தான் கைலாசம் , திருப்பதி என்று யாத்திரை .
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-செப்-201812:49:09 IST Report Abuse
bal எதில் ஊழல் என்று வழக்கு தொடர வேண்டியதுதானே...ராகுலுடன் சேர்ந்து ஏன் பொய் பித்தலாட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X