குறைந்தது இடுக்கி அணை நீர்மட்டம் செருதோணி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்தது இடுக்கி அணை நீர்மட்டம் செருதோணி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

Added : செப் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
குறைந்தது இடுக்கி அணை நீர்மட்டம் செருதோணி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மூணாறு:இடுக்கி அணை நீர்மட்டம் குறைந்ததால் 30 நாட்களுக்கு பிறகு செருதோணி அணை வழியாக நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு, திறக்கப்பட்ட ஒரு மதகும் அடைக்கப்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்ட இடுக்கி அணையின் மொத்த உயரம் 554 அடி.

இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வலுவடைந்தால், இடுக்கி அணை வேகமாக நிரம்பியது. அதில் மதகுகள் இல்லாததால் அருகில் உள்ள செருதோணி அணையில் ஆக.9ல் முதல் மதகு திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 5 மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் அதில் நான்கு மதகுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு மதகு வழியாக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

தற்போது நீர்மட்டம் 527 அடியாக குறைந்ததால் 30 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அந்த மதகும் அடைக்கப்பட்டது.இடுக்கி அணை 1976ல் பயன்பாட்டிற்கு வந்தபிறகு 1981 அக். 29 முதல் நவ. 13 வரை 15 நாட்களும், இரண்டாம் முறையாக 1992ல் அக். 12 முதல் 16 வரையிலும், நவ.16 முதல் 23 வரையிலும் என இரண்டு கட்டங்களாக 15 நாட்கள் செருதோணி அணை திறக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
11-செப்-201805:39:40 IST Report Abuse
Welcome Back to 1900AD see the fragmentation in forest. Dams are the main reason for environment damage.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X