பலாத்காரம் : கன்னியாஸ்திரி பற்றி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பலாத்காரம் : கன்னியாஸ்திரி பற்றி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Added : செப் 09, 2018 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா, கன்னியாஸ்திரி, பாலியல் பலாத்காரம், பாதிரியார், எம்எல்ஏ ஜார்ஜ், சர்ச்சை பேச்சு

திருவனந்தபுரம் : கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் மீது கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையாகி உள்ளது. புகாருக்குள்ளான பிஷப் பிரான்கோ முலக்கல்லை கைது செய்ய கோரி பல்வேறு தரப்பினர் கேரள போலீசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க அமைப்புகளுக்கு எதிராக முதல் முறையாக நேற்று கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி குறித்து கேரளவின் பூஜர் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ., ஜார்ஜ் கூறி உள்ள கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோட்டயத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய எம்எல்ஏ ஜார்ஜ், பிஷப் செய்தது சரி என நான் கூறிவில்லை. அதே சமயம் அந்த கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார். இது எப்படி சாத்தியமாகும். 12 முறை பலாத்காரம் செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்? இப்படி பட்டவரை பாலியல் தொழிலாளி என நான் கூறியதில் என்ன தவறு உள்ளது? ஒருவேளை அவர் கற்புடன் இருந்திருந்தால் அவரை புனிதமானவராக கருதலாம். கற்பை இழந்த ஒருவரை எவ்வாறு கன்னியாஸ்திரியாக நடத்த முடியும்? பிஷப்புக்கு ஆதரவாக பேசவில்லை. பெண்களால் பாலியல் பலாத்கார சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தான் சொல்கிறேன்.
முதலில் அந்த பிஷப் செய்தது அறுவறுப்பான செயல் என்று தான் நினைத்தேன். பின்னர் இந்த விவகாரத்தை முழுவதும் ஆராய்ந்த பார்த்த பிறகு தான், அந்த கன்னியாஸ்திரி தான் பிரச்சனைக்குரியவர் என புரிந்தது என்றார். ஜார்ஜ், பாலியல் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்தை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் குமாருக்கு ஆதரவாக பேசியதுடன், அந்த நடிகை மீது தவறு இல்லை என்றால் அவர் மீண்டும் நடிக்க வராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-செப்-201819:32:52 IST Report Abuse
Chakkaravarthi Sk நீங்கள் கூறியது உண்மையே இந்த மாதிரி புகார் யாராவது ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரு துறவியின் பெயரில் எழுந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள தன்மான இனமான சிங்கங்கள் மெத்தப்படித்த அறிவு ஜீவிகள் கவிஞர்கள் அரசியல் ஞானிகள் கலைஞர்கள் அனைவரும் பாய்ந்து குதறி போட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் முதல் முறையாக முழு நாளும் அல்லது பொதுமக்கள் போதும் போதும் என்று சொல்லும் வரை விவாத மேடை நடத்தி திரும்ப திரும்ப அதையே பேசி வீடியோ மூலம் கேவலப்படுத்தி இருப்பார்கள். இவர்கள் இந்த மாதிரி குற்றச்சாட்டுக்கள் ஹிந்து மதத்தை தவிர வேறு மத துறவிகளுக்கு ஒரு சலுகை கொடுப்பார்கள். தமிழ்நாட்டு வூடகங்களை பற்றி நாம் என்ன சொல்ல முடியும். மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக அல்லும் பகலும் அனவரதமும் போராடிக்கொண்டு இருக்கின்ற இந்த வீர தமிழ் பண்பாளர்களை நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது. பெருமை பீறிடுகிறது போங்கள். போராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம். ஹிந்து ஆன்மிகத்தை ஒழிக்கும் வரை போராடுவோம் என்பதே லட்சியம். அண்ணல் இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்கள் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் ஆயுத பூஜைக்கும் ஆடி மதத்திற்கும் தள்ளுபடி விளம்பரங்களை மறக்காமல் செய்கிறார்கள். கொள்கை என்று இருந்தால் ஹிந்துக்களின் எந்த மத நம்பிக்கையை பற்றியும் பேசாமல் ராசிபலன் வெளியிடாமல் ஹிந்து பண்டிகைகளில் தள்ளுபடி மேளா நடத்தாமல் இருக்கட்டுமே ஆலய தரிசனமா ஆன்மிகமா எதை பற்றியும் பேசாமலிருக்கமுடியுமா தமிழ் நாட்டு வூடகங்களால்? தனக்கு பிடிக்காததை பேசாமல் இருப்பதே அழகு புரிந்து கொள்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
09-செப்-201818:19:20 IST Report Abuse
jagan அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் இனிமேல் மூடி மறைக்க முடியாமல் பல செய்திகள் வருது... எனவே, இங்கும் மீடியாவுக்கு கொஞ்சம் தெகிரியம் வந்து ஒரு 5 % மட்டுமே பிரசுரிக்கிறார்கள்.... இதைவிட மதரசா இம்மாம் செய்யும் அட்டகாசங்கள் யூடியூபில் பாருங்கள், இதெல்லாம் ஜுஜுபி (இவர்களுடன் ஒப்பிடும்போது நித்யானந்தா வெறும் LKG பையன்தான்)
Rate this:
Share this comment
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-செப்-201816:02:29 IST Report Abuse
Chakkaravarthi Sk அப்படி போடு அருவாளை. கேரளத்திண்ட மகனே சரியான போடு போட்டாயே இப்ப என்ன பண்ணுவீங்க நீங்க இப்ப என்ன பண்ணுவீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X