கல்யாணத்தை நிறுத்திய வாட்ஸ்ஆப் வெறி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கல்யாணத்தை நிறுத்திய வாட்ஸ்ஆப் வெறி

Added : செப் 09, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உ.பி., கல்யாணம், மணப்பெண், வாட்ஸ் ஆப்

லக்னோ: உ.பி., மாநிலத்தில் மணப்பெண் எப்போது பார்த்தாலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டி கல்யாணத்தை நிறுத்தி விட்டனர்.

உ.பி., மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நவ்கான் சதாத் கிராமத்தை சேர்ந்தவர் உரோஜ் மெஹந்தி. இவர் தன் மகளுக்கும் பக்கீர்புரா கிராமத்தை சேர்ந்த குவாமர் ஹைதர் என்பவர் மகனுக்கும், திருமணம் நிச்சயம் செய்தார். செப்., 5ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அன்றைய தினம் மெஹந்தி வீட்டில் உறவினர்கள் குவிந்து விட்டனர்.


போலீசில் புகார்

மாப்பிள்ளை வீட்டாருக்காக அனைவரும் காத்து இருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. இது குறித்து மெஹந்தி போனில் கேட்ட போது, ' மணப்பெண் எப்போது பார்த்தாலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார். திருமணம் நடப்பதற்கு முன்பே, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த பெண் உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கிறார். எனவே, எங்களுக்கு அந்த பெண் வேண்டாம்' என, கூறி விட்டனர்.

இதனால் கோபம் அடைந்த மெஹந்தி போலீசில் புகார் செய்தார். புகாரில், ' மாப்பிள்ளை வீட்டார், 65 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டனர். கொடுக்கவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்தி விட்டனர்' என, கூறியுள்ளார். இப்பிரச்னை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-செப்-201805:34:58 IST Report Abuse
D.Ambujavalli She was sending messages to the girls of the family only May be to develop a good friendship with them. Is this a valid reason to stop a wedding?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-செப்-201804:12:43 IST Report Abuse
Kasimani Baskaran நல்ல வேளை திருமணம் முடிந்த பின்னர் தலாக் 3 சொல்லவில்லையே...
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201820:05:25 IST Report Abuse
நவின் இன்னொரு அபிராமி உருவாகாமல் இருந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Sippi - Paris,பிரான்ஸ்
10-செப்-201802:39:34 IST Report Abuse
Sippiஇன்னொரு அபிராமி உருவாகக் கூடாதுன்னா ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமே நடக்காம, குழந்தைகளே பிறக்காம இருக்கணும். ஏதோ வாட்சாப் பயன்படுத்தி தான் அபிராமி அப்படி ஆகிடுச்சா? சினிமா, டீவின்னு எல்லாத்துலயும் காதல்னா அப்படி, இப்படின்னு உசுப்பேத்துறது. அப்புறம் காதலிச்சு கல்யாணம் பன்னீட்டு குடும்ப வாழ்க்கை சுவாரசியம் இல்லாம போறப்போ அதே பழைய சுவாரஸ்யத்துக்கு ஏங்கி அதை வெளிய தேடுறது (கள்ளக்காதலும் காதல்தானே? அதே ஹார்மோன் செயல்பாடு தானே?). இப்போ இந்த வாட்சாப்பினால் இந்தப் பெண் என்ன கெட்டுடுச்சு? அதோட பெண் உறவினர்களுக்குத் தானே மெசேஜ் அனுப்பிச்சு? இதை பேசி தீர்த்திருக்க முடியாதா? திடுதிப்புன்னு கல்யாணத்தன்னைக்குதான் இப்படி no show ஆகுறதா? ஆணாதிக்க திமிர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X