'Ajay Bharat, Atal BJP': Modi's slogan for 2019 polls | நாட்டை வளமாக்குவதே தமது விருப்பம்: பிரதமர் மோடி| Dinamalar

நாட்டை வளமாக்குவதே தமது விருப்பம்: பிரதமர் மோடி

Added : செப் 09, 2018 | கருத்துகள் (35)
Advertisement
மோடி, தேர்தல், கூட்டணி, காங்கிரஸ்

புதுடில்லி : இந்தியாவை வளமாக்குவதே தமது முதன்மையான விருப்பம் என்றும், இதற்காக எத்தகைய தடைக்கற்களையும் துரித நடவடிக்கைகளால் தகர்த்து எறிந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. இதில் இன்று பிரதமர் மோடி தலைமையுரையாற்றினார்.

செயற்குழுவில் நிகழ்ந்த விவாதங்கள், பிரதமர் உரை குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான ஸ்லோகனை ('Ajay Bharat, Atal BJP'), பிரதமர் மோடி வகுத்துள்ளார். கட்சி தனக்கென்று வகுத்துள்ள கொள்கைகளிலிருந்து பிறழாமல், யாரையும் கட்டுப்படுத்தாமல், நாட்டை வெற்றிப்பாதையில் முன்னேற்றுவதே அதன் விளக்கம் ஆகும்.பா.ஜ. விற்கு எதிராக, காங்கிரஸ் அமைத்துள்ள பிரமாண்ட கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் கூட, தேர்தலில், காங்கிரஸ் தலைமையை ஏற்க முன்வரவில்லை.

மக்கள், பா.ஜ. கட்சியின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இந்த ஆதரவால், வரும் தேர்தல் மட்டுமல்ல, இனி வருங்காலங்களிலும் நடைபெறும் தேர்தல்களிலும், பா.ஜ. கட்சியே அமோக வெற்றி பெறும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
10-செப்-201808:34:32 IST Report Abuse
பொன் வண்ணன் கேளுங்க..கேளுங்க..கேட்டு கிட்டே இருங்க..சிரிங்க .சிரிங்க..சிரிச்சு கிட்டே இருங்க...
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
10-செப்-201808:20:33 IST Report Abuse
jysen Shit
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
10-செப்-201808:14:05 IST Report Abuse
N.Purushothaman உலக அளவில் கார்பன் வெளியேற்றத்தில் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று....அதனாலேயே உலக பருவ நிலை மாறுபட்டு ஒப்பந்தத்தில் "PER CAPITA GLOBAL " அதாவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப கார்பன் வெளியேற்றம் இருக்க வேண்டும் என்றும்,அதோடு கார்பன் வெளியேற்றத்தை படிப்படியாக குறைத்து அதற்கான மாற்று வழிகளை முற்றிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியா உட்பட ,சீன ,அமெரிக்க இன்னும் பல நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன..இதன் முக்கிய அம்சமே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து மாற்று வழிகளை பயன்படுத்துவதே...கச்சா எண்ணெய் இறக்குமதியை உடனே குறைப்பது இயலாத காரியம்...ஆக எவ்வளவு இறக்குமதி செய்கிறோமோ அதற்க்கு ஏற்ப எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்...அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலை அடிப்படை விலையை விட சற்று கூடுதலாக இருக்க வேண்டும்...அவ்வாறு செய்யும் போது எரிபொருள் பயன்பாடு சிக்கனப்படுத்தப்பட்டு கார்பன் வெளியற்றம் குறைக்கப்படும் அல்லது பொது போக்குவரத்து ஊக்குவிக்கப்பட வேண்டும்... இந்தியாவை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் வாகன பெருக்கம் 35 % மேல் உருவெடுத்து உள்ளது யாருமே எதிர்பார்க்காத ஒன்று...புற்றீசல் போல் முளைக்கும் பைனான்ஸ் நிறுவனங்கள்,அவர்களால் மலிவாக்கப்பட்ட வாகன விற்பனை,அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணற வேண்டிய சூழல் ஒரு பக்கம்,மறுபக்கம் பெருகி வரும் வாகனத்திற்க்கேற்ப சாலை விரிவாக்கம்,புதிய சாலைகள் அமைத்தல் ,அதுவும் எக்ஸ்பிரஸ் ஹைவே போன்றவை வெகு விரைவாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்,அதற்கான நிதி போன்ற சவால்கள் மறுபுறம் இவைகளை தாண்டி தற்போது மத்திய அரசு டீசலில் எத்தனால் கலப்பை கட்டாயமாக்கி கிட்டத்தட்ட அதை 15 % வரை உயர்த்திட இலக்கு நிர்ணயித்து துரித வேகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது....அதோடு கிடப்பில் இருந்த பயோ எத்தனால்,பயோ டீசல் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தற்போது நாட்டில் 15 இடங்களில் பயோ டீசல் உற்பத்தி நிறுவனங்களை அமைக்கவும் அதற்கான இடங்களை ரயில்வே வாரியத்திடம் இருந்து பெறப்பட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது..மேலும் கச்சா எண்ணெய் இயக்குமதியை குறைக்க மின்சார வாகன போக்குவரத்திற்கும் முழு வடிவம் கொடுக்கப்பட்டு சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை முதலீடு செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது...தொடர் முயற்சியாக பயோ எத்தனால் மூலம் விமானம் சோதனை ஓட்டம் நடைபெற்று முதல் பரிசோதனையை அது கடந்துள்ளது...இதில் மேலும் சில பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடையும் பட்சத்தில் திட்டம் அமலுக்கு வரும்...அதோடு இங்கிலாந்து தொழில்நுட்பமான ஹைட்ரஜன் எரிபொருள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனைக்கு தயாராகி கொண்டு இருக்கிறது...2019 ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது...சாலையில் கனரக போக்குவரத்தை குறைக்க ,நீர் வழித்தடங்களை உபயோகத்தை அதிகரிக்க "சாகர் மாலா " நீர்வழி திட்டங்களும் நிறைவேற்றி கொண்டு இருக்கிறது..எது எப்படியோ இடியாப்ப சிக்கலான இந்த பிரச்சனையை மத்திய அரசு இதுவரை சரியாகவே கையாண்டு வருகிறது ...GST யில் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து அதை செய்தால் ஓரளவு மக்களுக்கு சற்று பயனளிக்கும்....
Rate this:
Share this comment
POORMAN - ERODE,இந்தியா
10-செப்-201808:53:48 IST Report Abuse
POORMANபிஜேபி ஆளும் மாநிலங்களில் மாநில மத்திய அரசாங்கங்கள் இணைந்து GST நிகரான வரிக்கு கொண்டு வரலாமே. உங்கள்டதான் பெரும்பான்மையான மாநிலங்கள் இருக்குல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X