திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி... Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகிரி, இடைத்தேர்தல், ஸ்டாலின்

திருவாரூர் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு, எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிய, 'சர்வே' நடத்தப்படுகிறது.
அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், அந்த தொகுதியில், 'சர்வே டீம்' களமிறக்கப்பட்டு, ரகசிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இடைத்தேர்தலில், அழகிரியை நிறுத்துவதன் வாயிலாக, ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் தொகுதியில், மறைந்த கருணாநிதி, இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கவுள்ள, திருவாரூர் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும் என, சென்னை, அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர், பூண்டி கலைவாணனை, வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு நெருக்கடி

கொடுக்கவும், கருணாநிதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவும், அழகிரி விரும்புகிறார். அதனால், திருவாரூரில், அழகிரிக்கு உள்ள செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய, அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், சர்வே நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:

திருவாரூர் தொகுதியில், அழகிரி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், 12 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும். ஆனால், அழகிரியே போட்டியிட்டால், கருணாநிதி மகன், நட்சத்திர வேட்பாளர், ஒரு தலைவர் உருவாகுகிறார் என்ற முறையில், 45

சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி, அழகிரியிடம் எடுத்துக் கூறினோம். அவரும், தந்தையின் தொகுதியில் போட்டியிடுவதில், ஆர்வமாகவும், உறுதியாகவும் உள்ளார். எந்த பின்பலமும் இல்லாமல், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனால் ஜெயிக்க முடிந்துள்ளது என்றால், அழகிரியால் முடியாதா?திருவாரூர் தொகுதியில், வெள்ளாளர் சமுதாய ஓட்டுகள், 20 சதவீதம் உள்ளன. இந்த சமுதாயத்தில் பெரும்பான்மையினர், நடிகர் ரஜினிக்கு ஆதரவாக உள்ளனர். அழகிரியும், ரஜினியும் நண்பர்கள் என்பதால், அழகிரி போட்டியிட்டால், அச்சமுதாய ஓட்டுகள், அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுகள், 33 சதவீதம் உள்ளன.


அழகிரியின் மனைவி காந்தி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆதி திராவிடர் ஓட்டுகளும் கிடைக்கலாம். வன்னியர் சமுதாயத்தினருக்கு, 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. தி.மு.க., வேட்பாளருக்கு தான், வன்னியர் சமுதாய ஓட்டுகள் கிடைக்கும். ஆனால், வன்னியர் சமுதாயத்திற்கு எதிரான, இதர சமுதாயத்தினரின் ஓட்டுகள், அழகிரிக்கு கிடைக்கும். முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள், 10 சதவீதம் இருந்தாலும், அந்த ஓட்டுகள், அ.தி.மு.க., வேட்பாளர் அல்லது தினகரன் கட்சி வேட்பாளருக்கு தான் கிடைக்கும். எனவே, ஜாதி ரீதியிலான ஓட்டுகள் அடிப்படையில் பார்த்தாலும், அழகிரிக்கு கணிசமாக ஆதரவு கிடைக்கும் என, நம்புகிறோம்.மேலும், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அவரது மகனுக்கு, தி.மு.க., அறக்கட்டளையில் பதவி என, அதிகாரம் முழுவதும், ஸ்டாலின் குடும்பத்தினரிடம் உள்ளது. ஆனால், அழகிரி, நிராயுதபாணியாக உள்ளார். எனவே, அவருக்கு, கட்சியினரிடம் அனுதாபம் ஏற்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201807:10:33 IST Report Abuse

P R Srinivasanதேர்தலில் போட்டியிடுவது அழகிரிக்கு நன்மை தரும். இவரது பலம் நிரூபிக்கப்பட்டால் திமுகவில் இவரது இடம் நிச்சயமாகும். திரும்பவும் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் வரும். யார்வேண்டுமானாலும் தலைமைக்கு போட்டியிடலாம் என்கிற நம்பிக்கை தொண்டர்களுக்கு உற்சாகம் தரும்.

Rate this:
Arasu - Ballary,இந்தியா
14-செப்-201809:31:28 IST Report Abuse

Arasuமுற்றிலும் உண்மை. அதைவிட பெரியது கடவுள் நம்பிக்கை உண்டாயவர்களது ஆதரவு இவர்களுக்கு கிட்டும். இவர் அந்த ஓசி சோறு கூட்டத்தை தூர வைப்பார்...

Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-செப்-201819:18:39 IST Report Abuse

Krishnamurthy Venkatesanஒரு வேலை அழகிரி தோற்றுவிட்டால் அவரது அரசியல் பயணத்தில் அது பெரும் சருக்கலாக இருக்கும். பிஜேபி இன் பிரச்சார பீரங்கி சரியான முறையில் செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கு பிஜேபி மிக பெரிய சவாலாக இருக்கும்.

Rate this:
IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா
13-செப்-201813:40:29 IST Report Abuse

IBRAHAMஸ்டாலினுக்கு கலைஞர் மகன் என்ற செல்வாக்கு மட்டும் இல்லை கட்சிக்காக கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்தவர்.

Rate this:
Arasu - Ballary,இந்தியா
14-செப்-201806:20:35 IST Report Abuse

Arasuதொண்டர்களுக்கு அழகிரியை பிடித்த அளவுக்கு சுடலையை பிடிக்காது...

Rate this:
மேலும் 144 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X