ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அமைச்சரவை பரிந்துரை

சென்னை: முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் உள்ள, ஏழு பேரை விடுதலை செய்யும்படி, கவர்னருக்கு பரிந்துரை செய்ய, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

ராஜிவ் கொலையாளிகள், அமைச்சரவை கூட்டம், கவர்னர்


தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆயுள் தண்டனை :

மாலை, 6:00 மணிக்கு, கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 161ன் கீழ் பரிசீலிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேலும், ஆறு நபர்களும், முன்கூட்டியே விடுதலை கோரும் மனுக்களை, கவர்னர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்தனர். அவர்களையும் சேர்ந்து, ஏழு பேரையும், முன்னதாகவே விடுதலை செய்ய, கவர்னருக்கு, 161 சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரை செய்ய, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பிரிவு, 161, மாநில

அதிகாரத்திற்கு உட்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் அது தான். எனவே, அமைச்சரவையை கூட்டி, முடிவு செய்துள்ளோம்.அமைச்சரவை முடிவின்படி, கவர்னருக்கு உடனடியாக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தாமதமின்றி செய்ய வேண்டும் என்பதற்காக, ஞாயிற்று கிழமையில், அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை, கவர்னர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இதில், மறுப்பதற்கு ஒன்றுமில்லை. அரசு எடுக்கும் முடிவை, கவர்னர் செயல்படுத்துவார்.இதை, காலதாமதப்படுத்த வேண்டியஅவசியம் இல்லை. மாநிலத்தின் நிர்வாக தலைவர், கவர்னர். எனவே, அவர் தான் உத்தரவிட வேண்டும். அரசு முடிவை, அவர் உடனடியாக செயல்படுத்துவார். ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது, தமிழக மக்களின் எண்ணம். அதன் அடிப்படையில், அமைச்சரவை கூடி, 2014ல் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம். அவர்கள் அன்றே செய்திருக்கலாம்; செய்யவில்லை.தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவு, ஜெ., முடிவுக்கு வலு சேர்க்கிறது. அமைச்சரவை முடிவு குறித்து, கவர்னர், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. அமைச்சரவை முடிவை, கவர்னர் ஒப்புக் கொள்வார். மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில், திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரைக்கு, 'பாரத ரத்னா விருது' வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர்., பெயர் :

தமிழகத்தின் வளர்ச்சிக்காக, எண்ணிலடங்கா திட்டங்களை தந்த, எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை, சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மத்திய ரயில் நிலையம்' என, பெயர் சூட்ட வேண்டும் என, மத்திய அரசுக்கு, பரிந்துரைக்கப்பட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க, அமைச்சரவை ஒப்புதலுடன், மத்திய அரசுக்கு, 2016 டிசம்பரில், மாநில அரசு பரிந்துரை செய்தது. அந்த கோரிக்கையை, மீண்டும் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement

ஞாயிறு கூட்டம் ஏன்? :

அமாவாசை என்பதால், நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தபோதும், அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், மாலை, 4:00 மணிக்கு கூட்டம் துவக்கப்பட்டது; மாலை, 6:00 மணிக்கு மேல் நிறைவடைந்தது.

குட்கா ஊழல் விவகாரம் தனியாக ஆலோசனை :

தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், அதிகாரிகள் எல்லாரும் வெளியேறினர். அதன்பின், முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். மிக முக்கியமாக, குட்கா ஊழல் வழக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை, ராஜினாமா செய்யும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது, சில அமைச்சர்கள், 'பா.ஜ.,விற்கு தொடர்ந்து, நாம் ஆதரவு அளித்தாலும், அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்; அவர்களை, நாம் எதிர்க்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.சில அமைச்சர்கள், 'பா.ஜ., நெருக்கடி என எடுத்துக் கொண்டாலும், குட்கா விவகாரத்தில், அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாமே; ஜெ., இருந்திருந்தால், இந்நேரம் செய்திருப்பாரே என, நம் கட்சிக்காரர்களே பேசுகின்றனர். எனவே, அமைச்சர் ராஜினாமா செய்யட்டும். சில மாதங்களுக்கு பின், மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளலாம்' என, கூறியுள்ளனர்.அமைச்சர் விஜயபாஸ்கர், பதவி விலக மறுத்ததோடு, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதன் காரணமாக, குட்கா விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கப்படாமல், கூட்டம் நிறைவடைந்து உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-செப்-201820:00:42 IST Report Abuse

r.sundaramஇவர்களை விடுவித்தால் அது இந்தியாவுக்கு கேவலம். எம்ஜியார் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வைத்தால், அது மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயரை வைத்தது போல் ஆகும், ஆதலால் இந்த கருத்தை ஏற்கக்கூடாது. மேலும் பாரத ரத்னா கொடுக்கும் அளவுக்கு அண்ணாவோ, ஜெயலலிதாவோ எந்த ஒரு பெரிய சாதனைகளும் செய்தவர்கள் அல்ல. கம்பரசம் எழுதியவருக்கும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கும் பாரத ரத்னா கொடுத்தால், அந்த விருதுக்கு இருக்கும் மதிப்பு போய் விடும, அப்புறம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட பாரத ரத்னா கொடுக்கலாம்.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
10-செப்-201818:25:18 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா 10-செப்-2018 10:05 /எனக்கு என் மொழி மீதும் இனம் மீதும் மரியாதையும் பெருமையும் இருப்பதால், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். / இனம் மற்றும் மொழி மீது நம்பிக்கை இருப்பதால் தமிழர்களை கூண்டோடு அழித்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்ததை வரவேற்கிறேன்

Rate this:
10-செப்-201816:22:05 IST Report Abuse

கணபதிஇவர்களை விடுதலை செய்வதை விட தூக்கிலிடவேண்டும். நயவஞ்சகர்கள். தமிழர்களை கொலை செய்தவர்கள்

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X