பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பாலியல் சலுகை கேட்பதும் லஞ்சம் தான்
ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

புதுடில்லி: பணியை முடிப்பதற்காக, பாலியல் சலுகை கேட்பதையும் லஞ்சமாகவே கருதும் வகையில், புதிய சட்டம்நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

லஞ்சம், பாலியல் சலுகை


அரசு ஊழியர்கள், லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்சத் தடுப்புச் சட்டம், 1988ல் அமலுக்கு வந்தது. தனியார் நிறுவனங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், 2013ல், திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பணம் மற்றும் பிற சலுகைகள் பெறுவதே, லஞ்சம் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணம் மற்றும் பிற சலுகைகள் என்ற வார்த்தைக்கு மாற்றாக, மட்டு மிஞ்சிய சலுகை என்று மாற்ற லாம் என, சட்டக் கமிஷன், 2015ல் பரிந்துரை செய்தது. அதாவது, சட்டப்பூர்வமான சம்பளத்தைத் தவிர, பிற வழிகளில் கிடைக்கும்

பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் லஞ்சம் என்ற பொருளின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, பணம் மற்றும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களுடன், பிற வகைகளில் கிடைக்கும் சலுகை உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது. பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது. சட்டக் கமிஷன் பரிந்துரை குறித்து, பார்லிமென்ட் குழு பரிசீலனை செய்தது. சில கூடுதல் விதிகளுடன், லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில், இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, பாலியல் சலுகை கேட்பது, கிளப்களில் உறுப்பினராக சேர்ப்பது, தன் குடும்பத்தார் அல்லது நண்பர்களுக்கு வேலை கேட்பது, கடன்களை அடைக்கச் சொல்வது உள்ளிட்டவையும் குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, இந்தச் சலுகைகளை லஞ்சமாக அளிப்பவர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு முன் இருந்த சட்டத்தில், லஞ்சம் கொடுப்பவருக்கு சிறை தண்டனை விதிப்பது சேர்க்கப்படவில்லை.

Advertisement

கொடுத்தாலும் குற்றம்! :

இந்த சட்டத் திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: பணமாக பெறுவதை தவிர்த்து, அதிகாரிகள், பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில், 'மட்டுமிஞ்சிய சலுகை' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகள், இலவசங்கள் பெறுவது, வெளிநாட்டு சுற்றுலா பயணம், விமான டிக்கெட் பெறுவது, ஓட்டலில் தங்குவது என, எந்தச் சலுகை பெற்றாலும் அதுவும் லஞ்சமாகவே கருதப்படும். கடனை அடைக்கச் சொல்வது, நிலம் அல்லது வீடு என, எதுவாக இருந்தாலும், அது லஞ்சமாகும். மிகக் குறிப்பாக, பாலியல் சலுகை கேட்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதனால், பாலியல் சலுகை கேட்பது என்ற வார்த்தை, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-செப்-201820:41:58 IST Report Abuse

Manianநம்ம அரசாங்க வியாதிகள், அரசியல் வியாதிகளின் புத்தி சாலித்தனம் புதுமையாக பாலினத்திற்கு விளக்கம் சொல்வார்கள். இரண்டு அரசாங்க வியாதிகள் பேசிக்கொண்டதை வேறு வழி இல்லாமல் கேட்க நேர்ந்தது- அன்னே மாறிமுத்து , இந்த பாலின கொடுமை என்பதை சமாளிக்க வளி இருக்கான்னே. அந்த பொண்ணு, எனக்கு செக்ஸ் பற்றியே தெரியாது. தயவு செய்து கொஞ்ச நேரம் ஆசிரியராக இருந்து செயல் முறையில் காட்டுங்க சார். பாவம் போன் அப்போகுது, ஒரு பெண்ணோட வாழக்கையில் வெளிச்சம் ஏற்றலாமேன்னு உதவி செய்தேனுங்க. அவிங்களுக்கு ஹெச் ஐ. வி இருந்தா இன்னு பயம் கூடவே இருட்த்திச்சு. ஆனா, பெண்ணுன்னுனா பேயும் இறங்குமுன்னு எங்க ஆத்தா சொநனதை ஞசாபக்கம் வச்சுகிட்டு உதவி செஞ்ச எப்படி குத்தம்? உதவி செய்யற எண்ணமே குற்றமானு ஒரு போடு போடணும். தம்பி தங்கதுரை, மச்சி என்னமா வலச்சிபுடடே வாக்கிள்கள் இப்படி வாதம் செய்து அந்த பெண்ணையே குற்றவாளி ஆக்கி விடுவார்களே

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-செப்-201822:45:33 IST Report Abuse

தமிழர்நீதி கூட்டிக்கழித்து பார்த்தல் இது மோடியை குறிவைத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். பிஜேபி கு நன்கொடை எதிர்பார்த்து மல்லையாவை லலித் மோடியை நாடுகடத்தியது , பணம்மதிப்பிழப்பு செய்தது , அனில் அகர்வாலுக்கு சாதகமாக 13 பேரை தூத்துக்குடியில் சுட்டுப்பொசுக்கியது , அதானிக்கு அம்பானிக்கு GST வருமானத்தை மானியமாக கொடுத்தது .. இப்படி மோடி மாட்டிகிட்டார்

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
10-செப்-201821:23:58 IST Report Abuse

அம்பி ஐயர்பாலியல் தூண்டுதல் ஏற்படுத்தி.... ஆசையைக் கிளறிவிட்டு.... அதன் காரணமாகவே சினிமா (இப்போ வர்ற எல்லா படமுமே இப்படித்தான் இருக்கு......) பார்க்கத் தூண்டுவதும் பாலியல் லஞ்சம் தானே..... அப்படியானால் ஒரு நடிகையும் மிஞ்சமாட்டாரே.... எல்லா நடிகையருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணையா.....??? அவ்வாறு நடிக்கத் தூண்டிய இயக்குநர்... பணம் கொடுத்த தயாரிப்பாளர்.....???? நேக்கு ஒண்ணுமே புரியலை..... இதெல்லாம் எப்படி சாத்தியம்.....??? இந்தச் சட்டத்தின் மூலமா ஒருத்தரைக் கைது பண்ணி.... வழக்கு நடத்தி...... தண்டணை வாங்கிக் கொடுக்கறதைப் பார்க்கணும்னா நேக்கு இன்னும் ரெண்டு ஜென்மம் வேணும் போல இருக்கு..... போகாத ஊருக்கு வழி.....

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X