பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வீடு தேடி வரும் அரசு சேவை
டில்லியில் இன்று அமலாகிறது

புதுடில்லி : திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உட்பட, 40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம், டில்லியில், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

டில்லி, அரசு சேவை, அரவிந்த் கெஜ்ரிவால்


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிறப்பு, இறப்பு சான்றுகள், ஓட்டுனர் உரிமம், ஜாதி சான்றிதழ் உட்பட, 40 விதமான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. டில்லி கவர்னர் அமர்வு,

அனில் பைஜால், இத்திட்டத்தை நிறைவேற்ற தடையாக இருப்பதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதையடுத்து, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன இத்திட்டத்துக்கு, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது: டில்லியில், 40 விதமான அரசு சேவைகளை பெற, மக்கள், அரசு அலுவலகங்களில், இனி வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று முதல், அந்த சேவைகள், அவர்கள் வீடு தேடி வரும். உலகிலேயே முதல் முறையாக, இப்படியொரு திட்டம், அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இத்திட்டத்தின்படி, ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் நபர், அதற்கான, உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.அரசால் நியமிக்கப்பட்ட, தனியார் நிறுவன முகவர், வீடு தேடி வருவார். அவர் கேட்கும் ஆவணங்களை

Advertisement

சமர்ப்பித்தால், ஓட்டுனர் உரிமம், வீடு தேடி வரும். இதற்கான, வாகன சோதனைக்காக, ஒரு நாள் மட்டும், போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லவேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, திருமண சான்று உட்பட, பல்வேறு அரசு சேவைகளுக்கு வழங்கப்பட உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
10-செப்-201821:44:57 IST Report Abuse

அம்பி ஐயர்இங்க நம்ம ஊருல இ-சேவை மையம்ன்னு பேருதான்..... இதுலயும் எல்லாருக்கும் கட்டிங் அழணும்.... இல்லாட்டி எந்த ஒரு சான்றிதழும் கிடைக்காது..... வாரிசு சான்றிதழ் வேணுமா.... வருமானச் சான்றிதழ்.... சாதிச் சான்றிதழ்..... இப்படி எல்லாத்துக்கும் பணம் தான்...... வாரிசு சான்றிதழுக்கு இ-சேவை மூலமா அப்ளை பண்றதுக்கு ஒரு மாசம் அலைந்தேன்...... சர்வர் டவுனாம்..... அப்ளை செய்வதற்குக் கட்டணம் ரூ. அறுபது தான்..... பின்னர் விஏஓவுக்கு...... ஆர் ஐ.க்கு.... தாலுகா அலுவலகத்தில் கிளார்க்குக்கு..... பின்னர் இறுதியாக தாசில்தாருக்கு.... இப்படியாக எல்லாருக்கும் கொடுத்தால் தான்...... அப்ரூவல் செய்வார்கள் ஆன்லைனில்..... இல்லையெனில் அப்படியே கிடக்கும்.... அல்லது ஏதேனும் காரணம் சொல்லி அப்ளிகேஷனை ரிஜக்ட் செய்துவிடுவார்கள்..... இதுக்கே ரெண்டு மாசம் ஆச்சு.....

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
10-செப்-201816:55:32 IST Report Abuse

Nancyசூப்பர்

Rate this:
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
10-செப்-201814:57:43 IST Report Abuse

Lawrence Ronநம் நாடு இப்போதுதான் சுதந்திரம் அடைந்திருக்கிறது, வாழ்க முதல்வர் கஜரிவால்

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X