பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஓய்வுக்கு பிந்தைய வாழ்வுக்கு சேமிப்பதில் இந்தியர்கள் எப்படி?

மும்பை: 'வேலை பார்க்கும் இந்தியர்களில், 33 சதவீதம் பேரே, பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்காக, முறையாக சேமிக்கின்றனர்' என, ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள், சேமிப்பு


எச்.எஸ்.பி.சி., வங்கி சார்பில், பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கைக்கான சேமிப்பு பழக்கம் குறித்து, இந்தியா உட்பட, 16 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்தியா குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், வேலை பார்ப்போரில், மூன்றில் ஒருவரே,

தங்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்துக்காக, முறையாக சேமிக்கின்றனர். அதே நேரத்தில், சர்வதேச அளவில், 67 சதவீத மக்கள், தங்கள் எதிர்கால தேவைக்காகசேமிக்கின்றனர்.
ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு, எவ்வளவு பணம் தேவைப்படும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததே, பணத்தை சேமிக்காததற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல், தங்கள் குடும்பத்தின் உடனடி பொருளாதார தேவைகளே, அவர்களுக்கு முக்கியமாக உள்ளது. அதனால், எதிர்காலத்துக்காக சேமிப்பதில்லை. பெரும்பாலான இந்தியர்களிடம், 'பணி ஓய்வு காலம் என்பது, மிகவும் குறுகிய காலம் இல்லை; அது நீண்ட காலம் தொடர்வது' என்ற எண்ணம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால், தங்கள் எதிர்காலத்துக்காக அவர்கள் சேமிப்பதில்லை. ஓய்வுக்குப் பிந்தைய, தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என, 51 சதவீத மக்கள் கவலைப்படுகின்றனர். ஆனால், 19 சதவீத மக்களே, தங்கள் எதிர்கால

Advertisement

மருத்துவச் செலவுகளுக்காக சேமிக்கின்றனர். வேலை பார்க்கும் இந்தியர்களில், 56 சதவீதம் பேர், தங்கள் அன்றாடச் செலவுக்கான வருமானத்தையே பெறுகின்றனர். அதே நேரத்தில், 53 சதவீதம் பேர், குறுகிய கால தேவைகளுக்காக சேமிக்கின்றனர். எதிர்காலத்தைவிட, தற்போதைய வாழ்க்கையை அனுபவிக்கவே விரும்புவதாக, 45 சதவீத இந்தியர் கள் கூறியுள்ளனர். இவ்வாறு, ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-201807:45:46 IST Report Abuse

P R Srinivasan58 வயதில் பணியிலிருந்து ஒய்வு பெறும் ஒருவர் தனது தேவைக்காக சேர்த்துவைக்கும் பணத்தை வங்கியில் முதலீடு செய்து வட்டியிலிருந்து தனது தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். அவர் இறக்கும் தருவாயில் அவர் டெபாசிட் செய்த பணம் அவரின் குழந்தைகளுக்கு போகும். அவர் காலம் முழுவதும் வட்டி தனது தேவைக்கு போதவில்லை என்று அரசை குறை கூறிக்கொண்டிருப்பார். அதற்கு வங்கிகள் வட்டியோடு அசலின் ஒரு சிறிய பகுதியையும் கொடுத்தால் இந்த பிரச்சனை இருக்காது. ரிவர்ஸ் இஎம்ஐ போன்ற திட்டங்கள் தரவேண்டும். 80 வயதுவரை ஒருவரின் சேமிப்பின் அசலையும் வட்டியையும் சேர்த்து செலவழிக்கலாம். 80 வயதிற்கு மேல் வாழ்பவர்களுக்கு அரசு எல்லா செலவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த மாதிரி ஒரு திட்டத்தை அரசு கொண்டுவந்தால் வயதானவர்களுக்கு மேன்மையான வாழ்வு கிடைக்கும்.

Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
10-செப்-201815:31:49 IST Report Abuse

chennai sivakumarMany Indians work in private companies and don't get paid as government salaries. The salary earned by say the husband is alone not sufficient to run the family and their wives go for jobs and support their husbands in running the family. So the amount left for savings is not much because of the high education expenses, rental and prices of essential commodities like rice pulses oil etc. There is no stability in the prices. If you keenly observe the prices of essential items are being monthly hiked up leaving less savings. Other than that EMI almost s. Now medical insurance is also up. Needless to mention about fuel. The only consolation is the mobile charges. If the prices cannot be controlled where is the question of savings? This is particularly in middle class and people below middle class virtually unable to save. For example before 10 years if a family member gets ordinary fever the doctor consultation was between 50 to 100 and now it is a minimum of 300 rupees and the doctor inturn prescribes so many tests for ordinary fever and all costs upto 1000 rupees. Imagine this is ordinary fever which will get subsided if you take a crocin or any paracetamol. Druggist for their share give you the costly medicine which makes your ordinary fever medical bill to atleast 1000. In this kind of situation how can there be savings? You take your two wheeler to your mechanic,he rips you to lowest of 500 rupees and your two wheeler goes to the service station it is 2000 rupees. If things are like this how can people save. Additionally there is no social security like you have in western countries. Somehow people borrow and run the show. It would be foolish to expect savings by middle class family. Only upper middle class are able to save reasonably but with the value of money going down it is unpredic that they would have a peaceful retirement life without deping their childrenfinancially

Rate this:
s. raju - chennai,இந்தியா
10-செப்-201812:20:56 IST Report Abuse

s. rajuIndians hold highest personal gold savings in the world. For every household function, gold is being used. Be it low income or middle income, according to their ability, it is being used. Are they considered as savings ? In many foreign countries, it is not so the case. Max. an exchange of gold ring or chain only. Many middle class hold inherited savings. The report is not giving clear details of various types of savings and country wise saving details. Therefore, it is not a good report.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X