பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு

Added : செப் 10, 2018 | கருத்துகள் (14)
Advertisement
பாரத் பந்த், வசுந்தரா ராஜே, வாட் வரி , ராஜஸ்தான் அரசு, வாட் வரி குறைப்பு , பெட்ரோல் விலை உயர்வு, முதல்வர் வசுந்தரா ராஜே, டீசல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, BharathBandh ,BharatBandh, PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel, பெட்ரோல்,Vasundhara Raje, VAT Tax, Rajasthan Government, VAT Tax cut, Petrol price hike, Chief Minister Vasundhara Raje,

ஜெய்ப்பூர்: பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.இருப்பினும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 10-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-செப்-201816:41:35 IST Report Abuse
Bhaskaran பழனியும் ithai பின்பற்றலாமே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201807:56:04 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் வருது இல்லையோ
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
10-செப்-201808:53:56 IST Report Abuse
பலராமன்செய்தாலும் தவறு......இல்லையென்றாலும் தவறு...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
10-செப்-201809:32:02 IST Report Abuse
Karthikபல்ராம் சார் அப்படி நம்ம மஸ்தானை குறைக்க சொல்லுங்க ....
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
10-செப்-201816:00:48 IST Report Abuse
பலராமன்அவர் குறைக்கவும் வேண்டாம் மானியம் என்ற பெயரில் கடனும் வாங்க வேண்டாம்.....இப்போது காங்கிரஸ் வாங்கி வைத்து போன எண்ணெய் மானியத்திற்க்கான கடனை அடைத்து உள்ளார்...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
10-செப்-201817:36:54 IST Report Abuse
Karthikஎண்ணெய் மானியத்திற்க்கான கடனை அடைத்து உள்ளார் என்று சொல்லும் நீங்கள் அதை ஏன் தலை முதல் வால் வரை சொல்ல பயப்படவேண்டும். அங்கு தான் சந்தேகம் வருகிறது....
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
10-செப்-201807:55:33 IST Report Abuse
jambukalyan எல்லா மாநில அரசுகளும் இதேபோல் வரி குறைத்து, மத்திய அரசையும் வரி குறைக்கும்படி போராடலாமே?
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
10-செப்-201808:52:55 IST Report Abuse
பலராமன்மத்திய அரசு வாங்கும் கலால் வரியில் நாற்பத்தி ரெண்டு சதவிகிதம் மாநில அரசுக்கு தான் வழங்க படுகிறது. மேலும் எட்டு ரூபாய் "பிரதான் மந்திரி சடக் யோஜனா" அதாவது நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கு போகிறது. இதற்கு பிறகு வெறும் 5 ரூபாய் மாத்திரமே மத்திய சர்காரிடம். குறைக்க வேண்டியது மத்திய சர்காரா? மாநில அரசா? மாநில வருவாயில் 55 % பெட்ரோல் மற்றும் டீசல் கு போடும் வாட் வரியில் இருந்து தான்...
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
10-செப்-201809:33:08 IST Report Abuse
Karthikநீங்க நாடு முழுவதும் உங்க ஆட்சி என்று பெருமை பேசும் நீங்கள் இது போல எல்லா மாநிலத்திலும் கொண்டு வரலாமே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X