நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்| Dinamalar

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ரயில், சாலை மறியல்

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (52)
Advertisement
பாரத் பந்த், எதிர்க்கட்சிகள் பந்த், காங்கிரஸ் பந்த், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சாலை மறியல் போராட்டம் , BharathBandh ,BharatBandh , PetrolPriceHike ,PetrolDieselPriceHike ,PetrolPrice ,Petrol, DieselPriceHike, DieselPrice, Diesel, பந்த், கடையடைப்பு போராட்டம், காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம் , Opposition Bandh, Congress Bandh,

புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

பாரத் பந்த் காரணமாக ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆந்திரமாவின் விமாகப்பட்டினம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. இதே போன்று ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து, பஸ்களை நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramaniam - Tirupur,இந்தியா
10-செப்-201815:33:09 IST Report Abuse
Balasubramaniam எதிர்க்கட்சியாக இருக்கும் போது பந்த், நாடாளுமன்ற முடக்கம் என்பது பலத்தை காட்டுவது. ஆளும் கட்சி ஆனவுடன் அதுவே தேச விரோதம், விரயம். எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல
Rate this:
Share this comment
Cancel
Palich Venkat - salem,இந்தியா
10-செப்-201815:00:06 IST Report Abuse
Palich Venkat whatever may be. one thing is sure that it is very difficult to live. ruler or oppose all are useless.
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201814:06:22 IST Report Abuse
நக்கல் எனக்கு வாட்சாப்பில் வந்த பதிவு.. சற்று பெரிது ஆனால் முக்கியமான ஒன்று...## எனக்குத் தெரிந்து பெட்ரோல்/டீசல் விலை குறையாது. அது யார் ஆட்சிக்கு வந்தாலும் குறைக்க மாட்டார்கள். குறைக்க முடியாது என்பதால் அல்ல குறைக்க கூடாது என்பதால் குறையாது.{அப்படி குறைத்தால் அரசியல் தேர்தலை சந்திக்க தான் மட்டுமே ஒழிய நிரந்தரமாக இருக்காது.} அட இந்தியாவில் மட்டும் அல்ல சவுதி அரபியா , ரஷ்யா என்று இயற்கையாகக் கச்சா எண்ணெய் அதிகம் கிடைக்கும் நாடுகளில் கூட விலை குறைக்க வாய்ப்பில்லை - கூட்டுவதற்கு வேண்டுமானால் வாய்ப்பு அதிகம். என்னய்யா சொல்கிறாய்???? ஆம் - இந்தியா விலையைக் கூட்டுவது இருக்கட்டும் சவுதி அரபியா , ரஷ்யா எல்லாம் ஏன் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு விலையைக் கூட்டியுள்ளனர்???? கொஞ்சம் அந்த நாடுகளில் இன்றைய பெட்ரோல் விலை என்ன , முந்தைய 15 வருடங்களில் பெட்ரோல் விலை என்ன என்று தேடி பார்க்கவும். சவுதி அரபியாவில் 127% விலை ஏற்றம் அறிவித்தது சவுதி அரசு ஏறக்குறைய 40ரூபாய் என்ற அளவில் இருக்க(முன்பு 15 ரூபாய் என்ற அளவில் இருந்தது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்), ரஷ்யாவில் 50ரூபாய் என்ற அளவிலும் இருக்கிறது விலை. அங்கேயும் விலை ஏற்றம் நடந்துள்ளது. ஏன்?? எனக்குத் தெரிந்து பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகம் உள்ள அனைத்து நாடுகளும் விலையேற்றம் உச்சத்தில் உள்ளது. காரணம் கச்சா எண்ணெய் விலை அல்ல மாறாக வரி அதிகம் விதிக்கின்றனர். சரி வரி விதிப்பைக் குறைப்பார்களா என்றா - எனக்குத் தெரிந்து குறைக்க வாய்ப்பில்லை கூட்டுவதற்கு வேண்டுமானால் வாய்ப்பு உண்டு என்று தான் உலக நாடுகளின் நகர்வுகளில் தோன்றுகிறது. அதற்கு முன் மற்ற சில நாடுகளில் விலை பட்டியல் உங்களுக்கு அமெரிக்கா - 60ரூபாய் பிரான்ஸ் , ஜெர்மனி , கிரீஸ் , இத்தாலி - என்று பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் வரும் நாடுகளில் விலை - 120 முதல் 150ரூபாய் வரை தென் அமெரிக்க நாடுகளான பெரு , உருகுவே , சிலி , அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் விலை 110ல் இருந்து 130வரை {எண்ணெய் வலம் உள்ள வெனிசுலா கடந்த 2 மாதங்களில் பெரிய பொருளாதார சீரழிவை கண்டு வருவதால் விலை 15ரூபாய்க்கு சென்றுள்ளது தவிர அங்கேயும் 60ரூபாய் வரை விற்று வந்தனர் சின மாதங்கள் முன்பு வரை. மோசமான காலகட்டத்தில் வெனிசுலா மக்கள் இருப்பதால் ஒழிய வேறு இல்லை.} நியுஸ்லாந்து - 113ரூபாய், ஆஸ்திரேலியா - 77ரூபாய். நம்ம மெர்சல் புகழ் சிங்கப்பூர் -116ரூபாய், நமது அதிபர் கெனடாவில் -82ரூபாய், ஜப்பான் - 98ரூபாய். ஆக இது தான் உலக நாடுகளில் இருக்கும் நிலை. அப்போ இலங்கை , பாக்கிஸ்தான் , பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள்? பங்களாதேஷ் - 76 ரூபாய் , பாக்கிஸ்தான் - 54ரூபாய் , நேபால் - 70ரூபாய், இலங்கை - 70ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இங்கே அனைத்து நாடுகளிலும் விலை ஏற்றம் என்பது வரி விதிப்பால் தான் அதிகம் விற்கப்படுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரி விதிப்பை அதிகம் விதித்திற்கும் நாடுகளில் பட்டியலை எடுத்துப் பாருங்கள் அவை அதிகம் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளாக இருக்கும். அதிகம் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள் தான் அதிகம் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டுக்கும் காரணமாக இருக்கின்றன. அதாவது அமெரிக்கா , ஐரோப்பிய யூனியன் , சீனா , இந்தியா , ஜப்பான் ,சவுதி அரபியா , ரஷ்யா , பிரேசில் ,தென் கொரியா ,ஜெர்மனி கனடா இந்த முதல் பத்து நாடுகள் தான் உலகத்தின் மொத்த கார்பன் டை வெளியீட்டில் 80% அளவிற்குக் காரணமானவை. மிக முக்கியம் அமெரிக்கா , சீனா , இந்தியா , ரஷ்யா இந்த நான்கு நாடுகள் மட்டும் 54% கார்பன் வெளியீட்டிற்கு காரணம். அதாகபட்டது என்னவென்றால் - இந்த அழகான பூமியை நாசம் செய்வதில் முக்கிய காரணிகளாக இருக்கும் கச்சா எண்ணெய் , நிலக்கரி பயன்பாட்டில் அதிகம் காரணமாக இருப்பது இந்த நாடுகள் தான். எனவே தான் அதிகம் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் வரியும் அதிகமாக உள்ளது. இது உண்மையில் செயற்கையாக என்றாலும் இது முழுக்க முழுக்க சர்வதேச அளவில் நாடுகளிடையே இருக்கும் புரிந்தால் மூலமே நடக்கிறது. இவர்கள் திட்டம் தான் என்ன??? முதலில் வாகன பயன்பாட்டில் இருந்து கச்சா எண்ணெய் பயன்பாடு மனிதர்களுக்கு மிக அதிகம் பழக்கத்திற்கு வந்தது வெறும் கடந்த 50 வருடங்களில் தான். அதிலும் கடந்த 30வருடத்தில் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்போது இங்கே மாற்று எரிபொருள் வருவதற்காகத் தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் மக்கள் பொது பயன்பாட்டில் இருக்கும் டீசல் , பெட்ரோல் பயன்பாட்டை தவிர்த்து மாற்று எரிபொருள் நோக்கி நகர்த்த வரி விதைப்பதே சரியான வழி. இதை நாடுகள் வெளிப்படையாகவே கூறிவிடலாமே???? அதில் தான் சிக்கல் இருக்கிறது. இதை வெளிப்படையாக கூறுவதில் நேரடியாகப் பாதிப்படைய போவது automobile industry தான். இது பாதிப்பு என்றால் மிக மோசமான பாதிப்பை அடையும் இப்படி வெளிப்படையாக அறிவித்தால் பங்குகள் விலை வீழ்ச்சி அடையும் , முதலீடுகள் தேக்கம் கொள்ளும் , அதிகப்படியாக வேலை இழப்புகள் இந்தத் துறையில் நடக்கும் , இது படிப்படியாக அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். Makers , suppliers , Dealers என்று அனைத்துத் தரப்பிலும் ஒரு பெரும் அடி வாங்கும். {தற்போதே நிலை சரி இல்லாமல் தான் இருக்கிறது இந்தத் துறையில் இது இன்னும் மோசமடைந்தால் நிச்சயம் பாதிப்பு கொடூரமாக இருக்கும்.} இது தவிர உலக அளவில் முதலீட்டாளர்கள் நிலை. 1.5 கோடி பேர் 2020ல் இந்தத் துறையில் நேரடியாக வேலைவாய்ப்பில் இருப்பர் என்று NSDC தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் உலகம் முழுவதும்??? எனவே இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எளிதில் அணுகமுடியாத ஒரு நிலை. எனவே மெல்ல மெல்ல விலை ஏற்றம் செய்து மக்களை மாற்று எரிபொருள் நோக்கு செல்ல தயார் படுத்தவும் வேண்டும் , இன்னொரு பக்கம் மாற்று எரிபொருளுக்கான ஆய்வுகள் வந்து அது சந்தையில் வெற்றி பெறவும் வேண்டும். மீண்டும் கூறுகிறேன் மாற்று எரிபொருள் சந்தையில் மக்களால் வரவேற்பு பெற்று வெற்றி பெறவேண்டும். அப்படி வரும் மாற்று எரிபொருள் மிம்சாரம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் - ஒரு மிம்சார வாகனம் 100ரூபாயில் 100கிமீ தூரத்திற்குச் செல்லும் என்றால் - அதே தூரத்தை ஒரு பெட்ரோல் பயன்படுத்தும் வாகனம் செல்ல 500 ரூபாய் ஆகும் என்றால் மக்கள் எளிதில் மிம்சார வாகனங்கள் நோக்கி நகர்வர். எனவே மாற்று எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்கள் சந்தையில் வெற்றி பெற முக்கியமான காரணி அதன் விலையும் , எரிபொருள் செலவும் என்று மாறி நிற்கும். எனவே மாற்று எரிபொருளை நோக்கி நகரவேண்டியது மக்கள் கடமையும் கூட என்பது தான் எனக்குத் தெரிந்த உண்மை. இதை நான் கடந்த 5 ஆண்டுகள் மேலாகவே கூறிவருகிறேன். தற்போதும் கூறுகிறேன் நிச்சயம் விலை குறையாது. {இயற்கை ஆர்வலர்கள் சொல்றானுக ஆனால் பெட்ரோல் , டீசல் கார் பயன்பாட்டை மாற்றி மக்கள் மிம்சார வாகனங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எந்தப் போராளியும் பேசுவது இல்லை. இது மிக விந்தையாக உள்ளது இங்கே இருக்கும் போராளிகளை நினைத்து. ஆர்டிக் பிரதேசமே உருகிக் கொண்டிருக்க உலகம் முழுவதும் இயற்கை தன் குணத்தை மாற்றி வருவதால் கால நிலைகள் முன்னுக்குப் புறம்பாக மாறி ஒரு பக்கம் கடுமையான தண்ணீர் பற்றாக் குறை வறட்சி , இன்னொரு பக்கம் பெரும் வெல்லம் என்று இருக்கக் காரணமே பூமி வெப்பமயமாதல் தான். அதைத் தடுத்து பூமியைக் காப்பாற்றா கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதை இங்கே ஏரி சுத்தம் செய்ய போகிறேன் , கம்மாவ கழுவ போகிறேன் என்று படம் எடுத்து facebookல் போட்டு என் நேரமும் ஆன்லையனில் இருக்கும் போலி போராளிகள் என்ன சொல்ல.} இதைத் தடுக்க முக்கியமான வழிக் கச்சா எண்ணெய் பயன்பாட்டை பொதுப் பயன்பாட்டில் இருந்து நீக்குவது தான். ஏன் என்றால் கார் , பைக் என்று மக்கள் பயன்பாட்டால் தான் கார்பன் வெளியீடு 68% அளவிற்கு கார்பன் வெளியீடு இருக்கிறது. அதாவது விமானம் , கன ரக வாகனங்கள் பயன்பாட்டால் அல்ல அன்றாடும் பயன்பாட்டில் உள்ள கார் பைக் தான் காரணம் இந்த பாதிப்புக்கு. எனவே அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் உலக இயற்கை ஆய்வாளர்கள் பலரது கோரிக்கையாகும். ஆனால் இங்கே இருக்கும் போராளி பெட்ரோல் போட்டு வண்டியை எடுத்துப் போய் பெட்ரோல் எடுக்கவும் விட மாட்டான் , குறைக்கவும் சொல்லுவான். இறுதியாக: நம் நாட்டில் வரி விதிப்பு என்று பார்த்தாலும் கூட விலை ஏற்றதிற்குக் காரணம் மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு தான் காரணம். சரி மோடி தான் காரணம் என்றால் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் வேண்டும் என்றால் வரி விலக்கு கொடுங்கள். மகராஸ்ரா , மத்திய பிரதேஷ் , பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 35% VAT வரி விதிக்கின்றன - கேரளாவில் 34% VAT (கம்யூனிஸ்ட் நல்லவன் வேடம் போட வேண்டாம்). தமிழ் நாடும் 34% வரை இருக்கிறது. ஆக 53-55ரூபாய் வரை விற்கப்பட வேண்டிய பெட்ரோல் விலை 30ரூபாய் வரை அதிகரிக்கக் காரணம் மாநில அரசுகளின் வாட். மத்திய அரசின் excise வரியிலும் மாநில அரசுக்குப் பங்கு உண்டு. எனவே இதற்கு உண்மையில் மத்திய அரசைக் காரணம் காட்டுவது முழுக்க முழுக்க அரசியல் தானே தவிர வேறு இல்லை. கம்யூனிஸ்ட் உடனே தொழில் சங்களை ஏவி விட்டு போராட்டம் செய்யக் கூறுவது ஒரு கேவலமான அரசியல் யுக்தி. கேரளாவில் 34% வரியை நீக்கிவிட்டி 50 ருபாயிக்கு விற்க வேண்டியது தானே... என்னையா அநியாயமா இருக்கு. எனவே விலை எனக்குத் தெரிந்து குறையாது. அதற்குக் காரணம் மேலே கூறிவிட்டேன். நமது இணையப் போராளிகள் மாநில அரசு விதிக்கும் VAT வரி விவரம் தெரியுமா? தெரியாது.... சரி மத்திய அரசின் excise??? தெரியாது. இப்படி எதுமே தெரியாது ஆனால் விலை ஏற்றம் காரணம் வழக்கம் மோடி அரசு என்று மீமிஸ் வந்தா அதைப் பரப்பி "மோடி ஒழிக". விலை குறைக்க மத்திய அரசைக் கைகாட்டுவது முழுக்க ஆதாயம் தேடிய அரசியல் தானே ஒழிய வேறு இல்லை. உலக நாடுகள் அனைத்திலும் சரியான காரணத்தால் தான் விலை ஏற்றம் நடைபெறுகிறது. சமீபத்தில் டீசல் பெட்ரோல் வாகனங்களை முழுமையாக 2030க்குள் தடைவிதிப்போம் என்று ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் , நியுஸ்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் அறிவித்துவிட்டன. கொஞ்சம் அதையும் தேடி படிக்கவும் உலக நாடுகளின் நகர்வை உங்களால் உணர முடியும். பூமியின் நலன் சார்ந்து இதை நாம் புரிந்து ஏற்று கொண்டு - மாற்றம் நம்மில் இருக்க வேண்டும் என்று நினைத்து தயவு கூர்ந்து மாற்று எரிபொருளை நோக்கி செல்லுங்கள். ##
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X