ஐதராபாத் வெடிகுண்டு வழக்கு: 2 பேருக்கு தூக்கு

Updated : செப் 10, 2018 | Added : செப் 10, 2018 | கருத்துகள் (36) | |
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கடந்த 2007 ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி ஐதராபாத்தின் கோகுல்சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 44 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து
ஐதராபாத்,வெடிகுண்டு,வழக்கு, 2 பேருக்கு,தூக்கு

ஐதராபாத்: ஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2007 ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி ஐதராபாத்தின் கோகுல்சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 44 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பாக இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த ஐதராபாத் இரண்டாவது கூடுதல் மெட்ரோபாலிடன் செசன்ஸ் கோர்ட், 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது; 3 பேரை விடுதலை செய்தது.


இந்நிலையில், குற்றவாளிகள் என தீர்ப்பளித்த அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ., கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
11-செப்-201812:04:20 IST Report Abuse
AXN PRABHU இந்த தீர்ப்பு வர 11 வருடங்களா ? இனி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அப்பீல்கள வேறு துவங்கவும். கொடுமைடா சாமி.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-செப்-201808:41:47 IST Report Abuse
sridhar சமூக நீதி என்னாகும்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:36:43 IST Report Abuse
Srinivasan Kannaiya இனி கருணை மனுவு உண்டா... அதிலே கொஞ்சம் காலம் தள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X