பிரிவினையை ஏற்படுத்துகிறது பா.ஜ., ; டில்லி கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
பிரிவினையை ஏற்படுத்துகிறது பா.ஜ.,
டில்லி கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி : ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், நாடு, பிரிவினையை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அமைக்கப்போகும் வலுவான கூட்டணி, பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும்,'' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,Congress,Delhi,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,டில்லி,பா.ஜ,ராகுல்,ராகுல் காந்தி


பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், நாடு முழுவதும் நேற்று, 'பந்த்' நடத்தின. இதையொட்டி, டில்லி, ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில், காங்., தலைவர் ராகுல் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடி, ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்தி தரப்படும் என, உறுதி அளித்தார்.அதை நம்பி, மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தனர்.

அவர் ஆட்சிக்கு வந்து, நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன. அவர் என்ன செய்தார் என்பது, மக்களுக்கு தெரியும்.

நாட்டின் எந்த இடத்துக்கு சென்றாலும், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படுவதை காண முடிகிறது. இரு மதத்தினர் இடையே, இரு ஜாதியினர் இடையே கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் நடக்கின்றன. நரேந்திர மோடி ஆட்சியில், இந்த நாடு பிரிவினையை சந்தித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவ சாயிகள் தற்கொலை, பாலியல் பலாத்காரங்கள், ரபேல் ஒப்பந்தம் என, எதற்கும் பதில் அளிக்காமல், நரேந்திர மோடி மவுனம் காப்பது, ஆச்சரியமாக உள்ளது.

இந்த நாடு எதை கேட்க விரும்புகிறதோ, இந்த நாட்டு இளைஞர்கள் எதை கேட்க விரும்புகின்ற னரோ, அதை நரேந்திர மோடி பேச மாட்டார். அவர் மனதில் நினைப்பதை மட்டும் பேசுவார். இதனால், நாட்டு மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததாக தெரிவித்தார். ஆனால், அதன் மூலம், கறுப்பு பணம் வைத்து இருந்த அனைவரும், தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றிவிட்டனர்.அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப் போகும் கூட்டணி, பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

காங்., தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் உட்பட, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங் கேற்றனர்.

'கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவோம்!'

கண்டன பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்கள் விரோத நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது; அது, தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் உட்பட, நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும், இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும், தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை புறம் தள்ளி, நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக, ஒருங்கிணைய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
11-செப்-201818:34:49 IST Report Abuse

Tamilachiமாமியாரை கொன்னவங்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பாக்கறீங்க.... மாமியார் மேல அவ்ளோ பாசம்...புருஷன கொன்னதா சொல்ற பிரபாகரனை மட்டும் பிடித்து தண்டனை கொடுக்க மனமில்லாமல் அவர் சார்ந்த தமிழ் மக்களை கொத்து குண்டுகளையும் வீரர்களையும் கொடுத்து கொல்ல சொன்னவர்...

Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
11-செப்-201818:27:02 IST Report Abuse

tamilvananமோடி தலைமையில் நாடு பிரிவினையை சந்தித்ததா? கப்ஸா விடுவதில் அளவே இல்லையா? கைலாஸ யாத்திரை சென்று வீட்டு உடனே இப்படி புளுகி தள்ளுகிறாரே இந்த இத்தாலிய மகன் ?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-செப்-201816:52:36 IST Report Abuse

Endrum Indianபரிதாபமான காங்கிரஸ் கூமுட்டைகள், ஏதோ ஒண்ணு உளறவேண்டுமே என்று உளறுவது போல இருக்கின்றது. பிரிவினை பண்ணியது யார் காங்கிரஸ் தான் எப்போ பார்த்தாலும் அவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் தான் ஒரு கண் ஏனென்றால் அது தான் அவர்கள் மதம் அவன் எள்ளு கொள்ளுத்தாத்தா முதல் இன்று வரை???

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X