'பாரத் பந்த்' - தமிழகத்தில் பாதிப்பில்லை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பாரத் பந்த்'
தமிழகத்தில் பாதிப்பில்லை

சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் நடத்திய, 'பந்த்' போராட்டத்தால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பாரத் பந்த்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,பாதிப்பில்லை


சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி, இன்று(செப்.,10) நாடு முழுவதும், 'பாரத் பந்த்' போராட்டத்தை அறிவித்தது. அதற்கு,

தமிழகத்தில், தி.மு.க., - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ஆட்டோ, பஸ், வணிகர்கள் சங்கத்தினரும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், 'போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை' என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், முன்கூட்டியே அறிவித்ததால், நேற்று வழக்கம்போல், அனைத்து பங்க்குகளும் செயல்பட்டன.

சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், மளிகை கடைகள், உணவகம் உட்பட, அனைத்து கடைகளும், வழக்கம் போல் செயல்பட்டன. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால், பொது மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக, தமிழக அரசும், குறித்த நேரத்தில் பஸ்களை இயக்குவதற்கு,

Advertisement

ஏற்பாடுகளை செய்திருந்தது. இதனால், பஸ்கள், வழக்கம்போல் ஓடியதால், பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மட்டும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி போன்ற வாடகை வாகனங்களின் சேவை குறைந்திருந்தது. பலரும், சொந்த வாகனங்களை பயன்படுத்தினர்.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
11-செப்-201819:29:35 IST Report Abuse

s t rajanRamesh Vaghani: Here are petrol prices of some countries in 2018 🇮🇳 India =80.22 🇨🇳 China =80.90 🇲🇦 Morocco=81.19 🇨🇦Canada=81.68 🇨🇺Cuba= 86.15 🇯🇲Jamaica=86.86 🇨🇱Chile =88.63 🇯🇵Japan=89.31 🇹🇷Turkey=91.95 🇵🇱Poland=94.36 🇷🇴Romania=98.47 🇭🇺Hungary=99.27 🇷🇸Serbia=101.57 🇦🇹Austria=101.59 🇲🇦Mauritius=102.85 🇪🇸Spain=106.16 🇺🇾Uruguay=110.06 🇳🇿 New Zealand=110.90 🇨🇭Switzerland=110.98 🇸🇬Singapore=111.62 🇮🇪Ireland=114.58 🇩🇪Germany=115.46 🇬🇧UK=116.34 🇧🇪Belgium=118.83 🇫🇮Finland=124.44 🇫🇷France=125.25 🇸🇪Sweden=126.47 🇵🇹Portugal=126.53 🇮🇱Israel=127.43 🇮🇹Italy=128.77 🇬🇷Greece=130.70 🇲🇦Monaco=131.74 🇩🇰Denmark= 131.99 🇳🇱Netherlands= 133.50 🇳🇴Norway=139.85 🇭🇰Hong Kong= 144.23 🇮🇸Iceland =144.52 They are in Equivalent of INR. Those who are making so much noise please note .They all import petrol like us .& Their per capita consumption is more dn us. "Ask not what your Country can do for you, ask what you can do for your Country". ~John F. Kennedy 🇮🇳 जय हिंद 🇮🇳 s://www.globalpetrolprices.com/gasoline_prices/

Rate this:
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
11-செப்-201816:51:39 IST Report Abuse

ديفيد رافائيلஇது எப்பவோ தெரிஞ்சது தானே (நான் தான் முன்னமே சொன்னேன்ல)

Rate this:
Meenu - Chennai,இந்தியா
11-செப்-201811:31:33 IST Report Abuse

Meenuதமிழகத்தில் பாதிப்பில்லை, அதனால் பெட்ரோல் விலையை இன்னும் ஏத்தலாம்ன்னு சொல்ல வரீங்க. எவ்வளவு அடிக்க முடியுமோ, எப்படி எப்படி அடிக்க முடியுமோ, அப்படி அடிங்க ஆட்சி முடியரதுக்குள்ள. இப்படி தான் தி மு க ஆட்சியில் இருக்கும்போது அதன் பாணியில் நடந்து கொண்டது, தேர்தலில் மக்கள் தூக்கி எறிந்தார்கள், இனி அது அவ்வளவுதான். என்ன, சொத்து நிறைய சேர்த்தாகியாச்சு, அதுமாதிரி பா ஜ க வுக்கு சரியான தண்டனை மக்கள் கொடுக்க காத்து கொண்டு இருக்கின்றனர்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X