பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'கேரளாவில் மழைக்கு முன்பே
அணைகள் நிரம்பியிருந்தன'

புதுடில்லி : 'கேரளாவில், சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு முன்பே, இடுக்கியைத் தவிர, அங்குள்ள மற்ற அனைத்து அணைகளும் முழு கொள்ளளவுடன் இருந்தன' என, மத்திய நீர் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கேரளா,மழை,அணைகள்,அறிக்கை


கேரள மாநிலத்தில், சமீபத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழை மற்றும், அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்டவை குறித்து, மத்திய நீர் ஆணையம் ஆய்வு செய்தது. இதுகுறித்த அறிக்கை,

மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, கேரள அரசுக்கும் அளிக்கப்பட உள்ளது.

மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில், ஆக., 15 முதல், கன மழை பெய்தது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இயல்பைவிட அதிக மழை பெய்தது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதம், மிக மிக கனமழை பெய்துள்ளது.

கேரளாவில் உள்ள அனைத்து அணைகளின் முழு கொள்ளளவைவிட, இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த மூன்று நாள் மழைக்கு முன்பே, இடுக்கியைத் தவிர, கேரளாவின் அனைத்து அணைகளும், முழு கொள்ளளவை எட்டியிருந்தன.

அதனால், இந்த மூன்று நாள் மழையின் போது, கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அதனால், மூன்று நாள்கள் பெய்த மழை தண்ணீர் தேங்கி,

Advertisement

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதே, மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.

இதுபோன்ற ஆபத்து காலங்களில், மழை நீரை தேக்கி வைப்பதற்கு வசதியாக, அணைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழேயே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் அல்லது அணைக்கு அருகில், காலியான இடம் இருக்க வேண்டும்.

இதற்கான வழிமுறைகளை கேரள அரசு கவனிக்க வேண்டும். மேலும், நீர்நிலைப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
11-செப்-201811:56:26 IST Report Abuse

SaiBabaபேராசை பெரு நஷ்டம். Too much of anything is good for nothing.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
11-செப்-201809:42:57 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்தொடர்ந்து இரண்டு கோமாளி அரசுகள் ஆட்சி செய்த லட்சம் அப்படி

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201807:57:33 IST Report Abuse

Srinivasan Kannaiyaகேரளாவும் கர்நாடாகவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை அனுசரிக்க வேண்டும்...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X