பதிவு செய்த நாள் :
குமாரசாமியாக மாற நினைக்கிறாரா உத்தவ் தாக்கரே
சிவசேனா கட்சியால் பா.ஜ.,வுக்கு நெருக்கடி

புதுடில்லி : லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டையும், இப்போதே இறுதி செய்ய வேண்டுமென சிவசேனா வலியுறுத்துவதால், பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குமாரசாமி,உத்தவ் தாக்கரே,சிவசேனா,கட்சி,B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,நெருக்கடி


பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டுமென்பதில், மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், பா.ஜ.,வும், தன் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த, 1989ல், முதன் முறையாக கூட்டணி அமைந்ததில் இருந்து, அதிக தொகுதிகளில் சிவசேனாவும், குறைந்த தொகுதிகளில், பா.ஜ.,வும் போட்டியிட்டு வந்தன.

ஆனால், கடந்த லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் வீசிய மோடி அலை, நிலைமையை தலைகீழாக்கியது. பா.ஜ.,வின் தலைமையை ஏற்றாக வேண்டிய நிலை, சிவசேனாவுக்கு ஏற்படவே, கூட்டணியில் உரசல் துவங்கியது. தற்போது, கூட்டணியின் முக்கியத்துவத்தை அறிந்து, பா.ஜ., இறங்கி வந்துள்ளதால், அந்த வாய்ப்பை பயன்படுத்த, சிவசேனா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் மட்டுமல்லாமல், அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும், தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டுமென, சிவசேனா போர்க்கொடி துாக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலை பார்த்து, சிவசேனா, சில முடிவுகளை எடுத்துள்ளது. அங்கு, தேர்தலுக்கு முன்பே, மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க மறுத்ததால், அதன் விலையை காங்கிரஸ் அனுபவிக்க நேர்ந்தது.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, தற்போது அதே நிலையில், பா.ஜ., உள்ளது. 'மஹாராஷ்டிராவில், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்க வேண்டும். முதல்வர் வேட்பாளர் பதவியை சிவசேனாவுக்கே தர வேண்டும்' என, சிவசேனா தரப்பு வலியுறுத்துகிறது.

Advertisement


இதுதான், தற்போதைய இழுபறிக்குக்கான காரணம். ஜனவரியில் நடந்த தேசிய செயற்குழுவில், 'லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்தே போட்டி' என்ற முடிவை, சிவசேனா எடுத்து, அதை அறிவிக்கவும் செய்தது. அந்த அறிவிப்பில் மாற்றம் வருமா, வராதா என்பது குறித்து, சிவசேனா மற்றும் பா.ஜ., கட்சி வட்டாரங்களில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

இதில் என்ன மாற்றம் நடந்தாலும், அது மஹாராஷ்டிரா மாநிலத்தோடு முடிந்து விடாது; லோக்சபா தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், நிச்சயம் தேசிய அரசியலிலும் புதிய விளைவுகளை ஏற்படுத்துமென டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
11-செப்-201817:08:23 IST Report Abuse

Loganathaiyyanசிவ சேனாவும் கட்டு விரியன் பாம்பும் ஒரே இனம் தான் எப்போ யாரை கொத்தும் என்றே தெரியாது???

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-செப்-201814:20:45 IST Report Abuse

Rafi இதில் யார் பெரிய கட்டுவிரியன் என்பதிலேயே போட்டி. ...

Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
11-செப்-201816:26:06 IST Report Abuse

INDIAN Kumarநாம் தமிழர் கட்சியும் சிவ சேனாவும் ஓன்று தான் பாஜக தள்ளி நிற்க வேண்டும் மத்தியில் ஆட்சி வேண்டும் என்பதற்ககாக மாநிலத்தில் ஆட்சியை இழக்க கூடாது பின் காங்கிரஸ் போல் ஆகி விடும்.

Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
11-செப்-201816:24:30 IST Report Abuse

INDIAN Kumarநல்லாட்சியின் சாதனைகளை சொல்லி தனித்து களம் இறங்கலாமே

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X