மோசடி பேர்வழிக்கு 'ஆசி'; தப்பிக்க வைத்த 'ஏசி'

Added : செப் 11, 2018 | |
Advertisement
சித்ராவின் மொபைல் போன் தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கவே, ''ஏண்டி... மித்து. என்ன விஷயம்?'' என்றாள். ''இல்லக்கா. விநாயகர் சிலை வாங்கோணும். போய்ட்டு வரலாமா?'' என்ற மித்ரா சொன்னதற்கு, ''சரி... வீட்டுக்கு வந்துரு,'' என்று கூறி, மொபைல் போனை அணைத்தாள் சித்ரா.சில நிமிடங்களில், மித்ரா வந்து விடவே, இருவரும் கிளம்பினர். ஊத்துக்குளி ரோட்டில், சென்று கொண்டிருந்த போது, குறுக்கே,
மோசடி பேர்வழிக்கு 'ஆசி'; தப்பிக்க வைத்த 'ஏசி'

சித்ராவின் மொபைல் போன் தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கவே, ''ஏண்டி... மித்து. என்ன விஷயம்?'' என்றாள். ''இல்லக்கா. விநாயகர் சிலை வாங்கோணும். போய்ட்டு வரலாமா?'' என்ற மித்ரா சொன்னதற்கு, ''சரி... வீட்டுக்கு வந்துரு,'' என்று கூறி, மொபைல் போனை அணைத்தாள் சித்ரா.

சில நிமிடங்களில், மித்ரா வந்து விடவே, இருவரும் கிளம்பினர். ஊத்துக்குளி ரோட்டில், சென்று கொண்டிருந்த போது, குறுக்கே, நாய் ஒன்று குரைத்து கொண்டே ஓடியது. சாமர்த்தியமாக வண்டியை திருப்பிய சித்ரா, ''தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு,'' என்றாள்.

''இங்ககூட பரவாயில்லைங்க்கா. காங்கயம் வட்டாரத்தில் மட்டும், ஒரு மாசத்தில, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை, நாய்கள் கடிச்சு கொன்னுடுச்சு. கிராமத்துக்காரங்க பயந்து போய், ஏதோ மர்ம விலங்கு வந்துருதுனு, புகார் சொன்னாங்க,''''வனத்துறையினரும், பல இடங்களில் கேமரா வைச்சு பார்த்ததில், ரெண்டு தெரு நாய்கள் காரணம்னு' கண்டுபிடிச்சாங்களாம்,''''சரி.. அந்த நாய்களை என்ன செஞ்சாங்களாம்,''

''தெரு நாய் என்பதால், உள்ளாட்சியும், ரெவின்யூவும் நட வடிக்கை எடுக்கோணும்'னு சொல்லிட்டு, கேமராவை கழற்றி எடுத்துட்டு போய்ட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சி பிரதிநிதி செஞ்ச வேலைய கேட்டயா,''

''தெரியலை. சொல்லுங்க,''

''கணக்கம்பாளையம் கிராமத்துல, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தர், பட்டா வாங்கி கொடுத்து, பல ஆயிரக் கணக்கான ரூபாய் சம்பாதிச்சுட்டு இருக்காராம். அவர் சொல்றவருக்கு பட்டா கொடுக்காததால, வி.ஏ.ஓ.,வுக்கு எதிரா போராட்டம் நடத்தியிருக்காங்க''

''அதுக்கப்புறம், வி.ஏ.ஓ., முழு 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காரு. மொத்தம், 17 பேர்ல, ஏற்கனவே இடம் வாங்குன ஒருத்தர், தனது மனைவி, தாயார் பேரில், மறுபடியும் பட்டா கேட்டு மனு கொடுத்திருக்காரு. ஏழைகளுக்கு கொடுக்காம, ஒரே குடும்பம் பல பட்டா வாங்க அனுமதிக்க கூடாதுன்னு, தெளிவா 'ரிப்போர்ட்' பண்ணிட்டாராம்,''

''இதை தெரிஞ்சுகிட்ட கிராம மக்கள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்து, வி.ஏ.ஓ.,க்கு சப்போர்ட்டா நிற்கிறாங்க. 'அலப்பறை' பண்ற ஆளுங்கட்சியின் 'முத்தான' 'ரத்தினங்களை' கொஞ்சம் அடக்கி வாசிக்க வச்சா நல்லதுன்னு, சொந்த கட்சிக்காரங்களே தலைமைக்கு, புகார் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.

அதற்குள் பேக்கரி தென்படவே, வண்டியை 'பார்க்' செய்த சித்ரா, ''என்னடி... கத்திரி வெயிலாட்டம் இப்படி கொளுத்துது,'' என்றவாறு, ஹெல்மெட்டை, வண்டியில் மாட்டி நகர்ந்தாள். மித்ரா, ஹெல்மெட்டுடன் உள்ளே சென்று அமர்ந்தாள். லெமன் ஜூஸ் ஆர்டர் செய்து காத்திருந்தனர்.

''அவிநாசி யூனியனுக்கு ஆய்வுக்கு போன, கலெக்டரை ஏமாத்த பார்த்தாங்களாம்,'' என்றாள் மித்ரா.''கலெக்டரை அவ்வளவு ஈஸியா ஏமாத்த முடியுமா'' வியப்பாக கேட்டாள் சித்ரா.

''முயற்சி பண்ணியிருக்காங்க, முடியலை. போன வாரம், ஊரக வளர்ச்சித்துறை வேலைகளை ஆய்வு செய்ய, கலெக்டர் போனாரு. புதுப்பாளையம் ஊராட்சியில, பக்கத்துல இருக்கற கட்டட வேலையை பார்த்துட்டு கலெக்டர் வர்றதுக்குள்ள, தண்ணீர் தொட்டிய சுத்தம் செஞ்சு நாள்னு ஒரு தேதிய போட்டு எழுதி வச்சிருக்காங்க''
''சந்தேகப்பட்ட கலெக்டர், தரைமட்ட தொட்டியை திறந்து காட்ட சொல்லியிருக்காரு. உள்ளே பார்த்தா, குப்பை நெறையா கிடந்துச்சாம். இப்படியெல்லாம் மக்களை ஏமாத்தாதீங்க. கொஞ்சமாவது மக்களுக்காக வேலை செய்யுங்க,'ன்னு 'டோஸ்' விட்டிருக்காரு. பதில் சொல்ல முடியாம, அதிகாரிங்க நொந்து நுாடுல்ஸ் ஆகிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''ஓ...! அதுக்குத்தான் அந்தன்னைக்கு சாயந்திரமே, அவசர மீட்டிங் போட்டு, மாசத்துல, 5, 20ம் தேதி, தண்ணீர் தொட்டிய கட்டாயம் சுத்தம் பண்ணனும்னு கலெக்டர் உத்தரவு போட்டாரா?'' என்றாள் சித்ரா.

''புட்செல்' அதிகாரிங்க என்ன பண்றாங்களோ தெரியலை. ஆனா, கீழ்மட்ட பணியாளர்கள், 'ஸ்பின்னிங்' மில், பெரிய கம்பெனிகளில் வசூல் பண்ண துவங்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... அங்கே அவங்களுக்கு என்ன வேலை...'' என்று புரியாமல் கேட்டாள் சித்ரா.

''புதுசா வேலை வந்திருக்கே. ரேஷன் அரிசி கடத்தறவங்கள பிடிக்கறதுதான் அவங்க வேலை. இப்ப இருக்கற சூழலில், பெரிய பனியன் கம்பெனி, 'ஸ்பின்னிங்' மில்லில், வடமாநில தொழிலாளர்தான் இருக்காங்க. அவங்களுக்கு, உள்ளயே 'குவாட்டர்ஸ்' கட்டி கொடுத்திட்டாங்க. அவங்க பெரும்பாலும் ரேஷன் அரிசியை தான் பயன்படுத்துறாங்க''

''பக்கத்துல இருக்கற ஊருக்குள்ள போயி, ரேஷன் அரிசியை, கிலோ, 10 ரூபாய்க்கு வாங்கிட்டு வர்றாங்க. அதனால, 'புட்செல்' அதிகாரிங்க, பெரிய நிறுவனங்கள், நுால் மில்கள் மேல கண்ணு வச்சிருக்காங்க''

''மில்லுக்கே போயி, மாசம், 2 ஆயிரம் ரூபாய் வசூல் பண்ணிடறாங்களாம். சோதனை நடத்தி, ரேஷன் அரிசிய பிடிச்சா பெரிய தொந்தரவு வரும்னு நினைச்சு, மில் காரங்களும் பணத்த கொடுத்திடறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''புட்செல்' பணியாளர்கள் காட்டில் மழைன்னு சொல்லு,'' என்று கூறி சிரிக்கவும், ஜூஸ் வரவும் சரியாக இருந்தது. குடித்து, பணத்தை கொடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டனர்.

“வீட்டில் எலி... வெளியில் புலி'ங் கிற கணக்காம்'' என்றாள் மித்ரா.

''என்னடி.. மணிரத்னம் பட வசனம் மாதிரி சொல்ற,''

''அக்கா.. கோழிப்பண்ணையூரில், 'லேடி' அதிகாரி ரொம்ப ஸ்டிரிக்ட். இதனால, கிராமத்தை அடக்கி ஆளும் 'குறுநில மன்னர்கள்' அவங்க முன்னாடி, பதுங்கி, 'சரிங்கம்மா. ஆகட்டும்.. அப்படியே செஞ்சிடலாங்கம்மா', என்கின்றனராம்.''ஆனால், வெளியே வந்துட்டா.. புலி மாதிரி வசூல் வேட்டை நடத்துறாங்களாம். இதைப்பத்தி நல்லாவே தெரிஞ்சுகிட்ட, அந்த அதிகாரி, 'லிஸ்ட்' ஒண்ணு ரெடி பண்ணி, புலியா இருக்கறவங்களை பிடிக்க 'பிளான்' போட்டுட்டு இருக்காங்களாம்,''''அப்ப... வேட்டை ஆரம்பம்ன்னு' சொல்லு மித்து. ரெவின்யூவில் அதிகாரி இப்படி நேர்மையா இருக்காங்க. ஆனால், போலீசில் ''சீட்டிங்' நபருக்கு, 'சிபாரிசு' செய்யறாங்களே,''

''யாருக்கா? அப்படிப்பட்ட அதிகாரி..'' ஆர்வமாக கேட்டாள் மித்ரா.

''ரெண்டு மாசத்துக்கு முன், பனியன் நிறுவனம் ஒன்று, புனேவில் நுால் ஆர்டர் செய்தனர். பல லட்சம் மதிப்புள்ள நுால் ஏற்றி கொண்டு வந்த, 2 கன்டெய்னர் லாரி டிரைவர்கள், திருடிச்சென்றனர். இது பெரிய கேஸ், என்று யூகித்த இன்ஸ்பெக்டர், வழக்கை 'சிசிபி'க்கு மாற்றணும்னு, உயரதிகாரிக்கு சொல்லிட்டார். 'சிசிபி' விசாரிச்சதில், 11 பேர் கொண்ட கும்பலில், மூன்று பேரை அரெஸ்ட் செய்தனர். இதில், மூளையாக செயல்பட்ட ராயபுரத்தை சேர்ந்த ஒருவரை, விசாரணைக்காக, போலீசார் அழைத்தனர்,''

''விசாரணைக்கு வந்த 'சீட்டிங்' நபரை 'நாளைக்கு வந்துருவாரு'ன்னு 'சிசிபி' அதிகாரிகளிடம் 'குளுகுளு' அதிகாரி, 'சிபாரிசு' செஞ்சு அனுப்பிட்டாராம். அவரும், ராத்திரியோட ராத்திரியா, வீட்டை பூட்டிட்டு, முன் ஜாமீன் வாங்க சென்னைக்கு பறந்துட்டாராம்,''என்று விளக்கினாள் சித்ரா.

''ஏன்.. இந்த அதிகாரி, இப்படி நடந்துக்கிறாரு. அவர் மேல தொடர்ச்சியா புகார் வந்தாலும்கூட, எந்த நடவடிக்கையும் இல்லைன்னு, சில அதிகாரிங்களே சொல்றாங்களாமா?''

''உண்மைதான் மித்து. இதே மாதிரி, 'வேலம்....' ஸ்டேஷனில், முருகன் பேர் கொண்ட அதிகாரி, விபத்து சம்பந்தமான வழக்கில், அடிக்கடி ஆதாயம் தேடுகிறாராம். குற்றம்சாட்டப்பட்டவரை பயமுறுத்தி, பெரும் தொகையை 'லவட்டு வதில்' கில்லாடியாம்டி,''

''ஆமாங்க்கா. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லாதான் இருந்தாராம். சமீபகாலமாக, வசூலில் போட்டுத்தாக்குறாராம்,''''ஆமா.. கார்ப்ரேஷனுக்கும், போலீசுக்கும் ஏதாவது 'லடாய்' வந்துச்சா?''

''ம்..ம்.. உண்மைதானுங்க்கா. பழைய பஸ் ஸ்டாண்டில் ஏகப்பட்ட பிரச்னை குறித்து, கார்ப்ரேஷன் அதிகாரிகள், 'போன் கால்' அட்டென்ட் செய்வதில்லையாம். மீறி எடுத்தால், 'திட்ட அறிக்கை தயாராகி வருகிறது'ன்னு, ஒற்றை வரியில் பதில் சொல்லிட்டு, 'படக்'குன்னு லைனை கட் பண்ணிடறாங்களாம்,''

''போலீசுக்கே.. இந்த கதின்னா? பொதுமக்களுக்கு என்ன நிலைமைன்னு நீயே பாரு... மித்து,'' என்ற சித்ரா, கூறி முடிக்கவும், விதை விநாயகர் விற்பனை செய்யும் பசுமை அங்காடி முன், வண்டியை நிறுத்தி, உள்ள சென்றாள். மித்ரா பின் தொடர்ந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X