சிக்கலில் சோனியா, ராகுல்| Dinamalar

சிக்கலில் சோனியா, ராகுல்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (36)
Advertisement
நேஷனல் ஹெரால்டு, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சுப்ரமணியன் சாமி,  யங் இந்தியா, வருமான வரித்துறை,  நேஷனல் ஹெரால்டு வழக்கு, டில்லி உயர்நீதிமன்றம் , காங்கிரஸ், அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் , காங்கிரஸ் தலைவர் ராகுல்,சோனியா, ராகுல்,வருமான வரி கணக்கு, National Herald
Rahul Gandhi, Sonia Gandhi,Subramanian Sami, Young India, Income Taxes, National Herald Case, Delhi High Court, Congress, Associated Journals Limited, Congress leader Rahul, Sonia, Rahul,

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய காங்., தலைவர் ராகுல், சோனியா ஆகியோரின் வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க கூடாது என கோரிய மனுக்களை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது அவர்கள் இருவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


1938ல் துவக்கப்பட்ட பத்திரிகை

நாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1938ல் துவக்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த பத்திரிகை உட்பட மேலும் சில பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வந்தன.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், 2008 ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியிடம் பெற்ற 90 கோடி ரூபாய் கடனுதவியுடன் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முயன்றது. இந்நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.


ரூ.2,000 கோடி சொத்து

2010ம் ஆண்டு யங் இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், சோனியா, ராகுல் உள்ளிட்ட சில காங்., தலைவர்கள் உறுப்பினராக உள்ளனர். அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரசிடம் இருந்து பெற்ற 90 கோடி ரூபாய் கடனை திரும்ப வசூலிக்கும் உரிமையை யங் இந்தியா அமைப்பு பெற்றது. இதை முன்னிறுத்தி, அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும், 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட யங் இந்தியா அமைப்புக்கு கை மாறியது. இதன்மூலம் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் யங் இந்தியா அமைப்புக்கு கை மாறும் சூழ்நிலையும் உருவானது.


இதை எதிர்த்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து வருமான வரித்துறையும் நடவடிக்கையில் இறங்கியது. ராகுலின் 2011 - 12 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில் யங் இந்தியா அமைப்பில் ராகுலுக்கு உள்ள பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் 68 லட்சம் ரூபாய் என முதலில் கணக்கிடப்பட்டது தவறு, அவரது வருவாய் 249 கோடி ரூபாய் என கூறியது.

எனவே, ராகுல், சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்களின் 2011 - 12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ராகுல், சோனியா சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ராகுல், சோனியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


இப்பிரச்னையை கையில் எடுக்க பா.ஜ., தீவிரமாக உள்ளது.

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rags - dmr188330,இந்தியா
12-செப்-201807:40:38 IST Report Abuse
Rags வருமான வரி நிபுணர் பழைய மந்திரி சோனியா வக்கீல் சிதம்பரம் ஐயா இது பற்றி என்ன கருத்து கூறுவார். திட்டமிட்ட சதி பழிவாங்குதல்......
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
12-செப்-201804:20:38 IST Report Abuse
Rpalnivelu காந்தியால் திணிக்கப்பட்ட முதல் பிரதமரான நேருவின் குடும்ப வாரிசுகளின் ஊழல்களையும் ஆட்சி அலங்கோலங்களையும் பார்த்து பாரத நாட்டின் பொருளாதாரம் ரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. சோனியாவால் பீடிக்கப்பட்ட அனைத்து கான்கிராஸ் தலைவர்களும் ஊழல் நோயால் ஆட்க்கொண்டு விட்டார்கள். பாஜகவின் கடேசி ஆட்சியில் அமெரிக்க டாலர் மதிப்பு 37 ரூபாயாக இருந்தது. பின்பு வந்த உலக மகா 10 வருட ஊழலாட்சியில் நாடு நாசமாகியது அனைவரும் அறிந்ததே. வாராது வந்த மாமணி மோடி இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அதையும் குறைகூறிக் கொண்டு 'மதசார்பற்ற' தேசவிரோத கும்பல்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருகின்றன. இதை தவிர்க்க மோடியரசாங்கம் Economic emergency அமுல் படுத்த வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201803:58:49 IST Report Abuse
J.V. Iyer இவர்களுடைய மோடி எதிர்ப்பே, இதற்குத்தான். தாங்கள் சுருட்டிய பணத்தை தக்க வைப்பதற்க்காக, பெட்ரோல் விலை அதிகம் என்று போராட்டம். திருடர்கள். தீயமுக்க கலகமும் இதனால்தான் பாஜக அரசை எதிர்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X