வராகடனின் உண்மை: அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வராகடனின் உண்மை: அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்

Updated : செப் 11, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (135)
Advertisement
ரிசர்வ் வங்கி, வங்கிகள் வராகடன்,ரகுராம் ராஜன்,காங்கிரஸ் அரசு, மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழு,  நிதி ஆயோக்,  ராஜிவ் குமார் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு,  காங்கிரஸ் அரசு, Reserve Bank, NPA, Nonperforming asset,
Reserve Bank of India, Raghuram Rajan, Congressman, Manmohan Singh, Reserve Bank of India former Governor Raghuram Rajan, Loksabha Committee for Assets, NITI Ayodh, Rajiv Kumar, United Progressive Alliance Government, Congress Government,

புதுடில்லி: வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


ரூ.10 லட்சம் கோடி வராகடன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். 2016ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்றார். வங்கிகளின் வராகடன் 4 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கான விளக்கம் அளிக்கும்படி, மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழு கேட்டு இருந்தது.
இத்துடன் வராகடன் அதிகரிப்புக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ் குமார் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.இச்சூழ்நிலையில், மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வங்கிகளின் வரா கடன் அதிகரிப்புக்கு, 2006ம் ஆண்டு முதலே சூழ்நிலை உருவாகி விட்டது. அப்போது காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தது. 2006ம் ஆண்டு வரை நல்ல லாபத்துடன் இயங்கி வந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏராளமான கடனை வாரி வழங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த கடன் வசூல் செய்ய முடியாத சூழ்நிலைக்கு சென்றன. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதில் வங்கிகள் மெத்தனமாக செயல்பட்டன. இதற்கு வங்கி உயர் அதிகாரிகளின் தகுதியின்மையா அல்லது ஊழல் போக்கு காரணமா என்பதை என்னால் கூற இயலவில்லை.


காலஅவகாசம் வழங்கிய வங்கிகள்

வசூல் செய்யமுடியாத கடன்களை வராகடனாக தான் அறிவிக்க வேண்டும். ஆனால், கடன் பெற்றவர்களுக்கு காலஅவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டின.

மன்மோகன் சிங் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன. ஒரு புறம் வராகடன் அதிகரிப்பு பிரச்னை இருக்க, மறுபுறம் ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால் செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாபமும் குறைந்தது; கடன் வசூலும் பாதிக்கப்பட்டது.

வரா கடன் பிரச்னையை சமாளிக்க எனது தலைமையிலான ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், வங்கிகள் பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்த போதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கி இல்லாத காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் செயல்படமுடியவில்லை. அதே நேரத்தில், வங்கிகளின் உயர் குழுக்களில் இடம் பெற்று இருந்த ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளும் சரியாக செயல்படவில்லை.
வங்கிகளின் சொத்து தரத்தை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், விசாரணைக்கு வங்கிகள் பயந்தன. இது கடன் வழங்குவதிலும், கடன் வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடன் வசூல் தீர்ப்பாயங்களும் மெதுவாக செயல்பட்டன. ஒரு கடனை வசூல் செய்ய, நான்கு ஆண்டுகள் வரை காலம் எடுத்து கொண்டன.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-செப்-201808:12:30 IST Report Abuse
P R Srinivasan இதை ரகுராம் ராஜன் பதவியிலிருந்த போது சொல்லியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அவருடைய புகழ்வாய்ந்த எடுத்துக்கூறு " ஐ டூ வாட் ஐ டூ " உண்மையாக இருந்திருக்கும். பதவி முடிந்து, வெளி நாட்டில் இருந்து கொண்டு அறிக்கை விட்டால் அவ்வளவாக எடுபடாது.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
12-செப்-201803:17:15 IST Report Abuse
s t rajan ப சிதம்பரம் மற்றும் மன்மோகன் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதுசரி சிதம்பரம் ஒரு ஊழல் நரி பாவம் மன்மோகன் - ஒரு தலையாட்டி பொம்மை. ரெண்டும் சேர்ந்து நாட்டை சூறை யாடிவிட்டது இப்போ தன்னுடைய நீதி மன்ற கைக்கூலிகளை உசுப்பி தப்பிக்க பார்க்கிறது. அந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறதுன்னு ராஜன் தான் சொல்றாரே. அது சரி, ஏன் எல்லாரும் பதவியில் இருக்கும் பொது ஜால்றா போட்டுவிட்டு அப்புறம் நல்லவன் மாதிரி நடிக்கிறானுங்க ?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201800:17:29 IST Report Abuse
Mani . V காங்கிரஸிடம் இருந்து நான்கரை வருடம் முன்பே பாஜக ஆட்சியை தங்கள் வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்கையில், ஆளும் கட்சியினரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள், இந்நாள் கவர்னர்களும் இன்னும் காங்கிரஸை குறை கூறிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? என்றே புரியவில்லை. கடந்த நான்கரை வருடமாக இவர்கள் என்ன கழட்டினார்கள்? எதற்கு அரசு (மக்களின் வரிப்பணத்தில்) சம்பளம் வாங்குகிறார்கள்? மக்களின் கழுத்தை அறுக்காமல் எல்லோரும் வீட்டுக்கு போய் தொலைய வேண்டியது தானே. (நல்லவேளை வங்கிகளின் வாராக் கடனுக்கு இந்தியாவை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே).
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
12-செப்-201810:14:43 IST Report Abuse
nandaindiaசெய்தி புரியவில்லையா அல்லது நடிப்பா? ரகுராம் சொல்லியுள்ளது 2006 க்கு பிந்திய பொருளாதார நிலைமை பற்றி. 2004 முதல் 2014 வரை உங்கள் கட்சி தானே ஆட்சியில் இருந்துள்ளது. ஆக அவர் சொல்வது ஊழல் காங்க்ராஸ் அரசை என்பது இதை படிக்கும் பட்டிக்காட்டனுக்கும் புரியும். //ஒரு புறம் வராகடன் அதிகரிப்பு பிரச்னை இருக்க, மறுபுறம் ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால் செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாபமும் குறைந்தது கடன் வசூலும் பாதிக்கப்பட்டது.// இதன் அர்த்தம் தமிழ் படித்த எல்லோருக்கும் தெரியும். கடந்த நான்கரை வருடமாக இவர்கள் என்ன கழட்டினார்கள் என்று கேள்வி கேட்கும் நீங்கள் கடந்த அறுபது வருடங்களாக உங்கள் கட்சி என்னத்தை கழட்டி கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் விளக்கினால் நல்லது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X